polardinos15.jpg polardinos12.gif polardinos13.jpg துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது, புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. polardino5.png http://www.telegraph.co.uk/earth/earthnews/4330218/Dinosaurs-could-survive-cold-conditions.html பூமியானது இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச் சுற்றி வருவதால்,செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை,பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை விட்டு விலகியும்,அதே நேரத்தில், பூமியின் தென் துருவமானது சூரியனை நோக்கிச் சாய்ந்தும் இருக்கிறது. இதனால் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை, வட துருவப் பகுதியில் தொடர்ந்து இரவு நீடிக்கிறது.அதே நேரத்தில் பூமியின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆறு மாத காலம் பகல் நிலவுகிறது. அதன் பிறகு மார்ச் முதல் செப்டம்பர் வரை,பூமியின் வட துருவமானது சூரியனை நோக்கியும், அதே நேரத்தில் பூமியின் தென் துருவமானது சூரியனை விட்டு விலகியும் இருக்கிறது. இதனால் மார்ச் முதல் செப்டம்பர் வரை ,பூமியின் வட துருவப் பகுதியில் தொடர்ந்து ஆறு மாத...