Posts

Showing posts from June, 2013

நில அதிர்ச்சி மறைக்கப் பட்ட உண்மை

Image
      கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. கண்டங்களும் கடல் தரையும் பல கிலோ மீட்டர் ஆழத்திற்கு பாறை அடுக்குகளால் ஆனது.இந்தப் பாறை அடுக்குகளுக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது , பாறைப் பகுதிகளைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் கண்டத்தின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைகள் உருவாகின்றன. இந்த நிலையில் கண்டங்களும் கடல் தரையும் நகர்ந்து கொண்டு இருந்தால் , கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன. உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காஸ் கேட் எரிமலைத் தொடர், அனாகிம் எரிமலைத் தொடர், மற்றும் ஸ்டிக்கின் எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடர்கள...

பிளேட் டெக்டானிக் தியரி தவறு. பரிசோதனை முடிவு

Image
பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பதை எளிய பரிசோதனை மூலம் அறிய இயலும்.  பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது. அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. இதில் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்தின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்து உண்மையா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் அறிய இயலும். உதாரணமாக  தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும் ஆப்பிரிக்காவின் கேப் டவுனுக்கும் இடையில் உள்ள தூரத்தை அட...