ஆதி கால புதை படிவங்கள் சொல்லும் செய்தி என்ன?



ஐம்பது ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழமற்ற கடல் பகுதியில் தட்டையான மரவட்டை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்து இருக்கிறது.ட்ரை லோபைட் என்று அழைக்கப் படும் அந்த கடல் உயிரினத்தில் பதினேழாயிரம் வகைகள் இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



அதில் கரோலினிடிஸ் ஜெனாசினாகா என்று அழைக்கப் படும் ட்ரைலோபைட்கள் நாற்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்திருக்கிறது.
இன்று அந்த உயிரினத்தின் புதை படிவங்கள் வட அமெரிக்கா,கிரீன்லாந்து,வட ஐரோப்பா,வடக்கு ரஷ்யா,சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் காணப் படுகிறது.



 இவ்வாறு கரோலினிடிஸ் ஜெனாசினாகா ட்ரைலோபைட்டின் புதை படிவங்கள் வரிசையாக வட அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் தற்பொழுது இருக்கும் நிலையிலேயே இருந்திருப்பது புலனாகிறது.



 இந்த நிலையில் முப்பத்தி எட்டு கோடி ஆண்டுகள் முதல் முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கதுப்புதுத் துடுப்பு மீனினத்தில் இருந்து தோன்றிய ஆதி கால நாற்காலிகளின் புதை படிவங்களானது ட்ரைலோபைட் புதை படிவங்கள் காணப் பட்ட அதே வடஅமெரிக்கா,
கிரீன்லாந்து,வ
டக்கு ஐரோப்பா,வடக்கு ரஷ்யா,சீனா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பும் கண்டங்கள் அதே இடத்தில் இருந்திருப்பது ஆதி கால புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது


.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?