சிசுவான் மாகாணத்தில் எரிமலைப் பாறைகள்.
சுற்றுவட்டப் பகுதியைத் தவிர்த்து சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டது ஏன்? அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தைச் சுற்றிலும் இருபத்தி ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைத் தீப்பாறைகள் காணப் படுகின்றன. இந்த எரிமலைப் பாறைப் பகுதியானது எமிசியான் தீப்பாறைப் பகுதி என்றும் அழைக்கப் படுகிறது.) எனவேசீனாவின் தென் மேற்குப் பகுதியில் பூமிக்கு அடியில் எரிமலைச் செயல் பாடு நடைபெற்றுக் கொண்டு இருப்பது புலனாகிறது. ஆனால் சிசுவான் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது இந்திய நிலப் பகுதியானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆசியக் கண்டத்தை நெருக்கிக் கொண்டு இருப்பதாகவும் இதனால் ஏற்படும் அழுத்தத்தால் சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கத்தைக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்புகின்றனர். ஆனால் ஆறரை கோடி...