கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.igai.a.omd.


சுனாமி புத்தகம்

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் கண்டங்கள் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்திருக்கிறது.



(நாசா வெளியிட்ட நில அதிர்ச்சி வரைபடம்)

குறிப்பாக நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் அறிவியல் அமைப்பினர் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த வரைபடத்தில் இரண்டு கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியில் ஒன்றாக இருந்ததாகவும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் கருத்து உண்மையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.

மேலும் கண்டத் தட்டுகளானது பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளமுடையதாக இருக்கின்றன.ஆனால் நில அதிர்ச்சியானது பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய பிரதேசத்தில் ஏற்படுவதில்லை. நில அதிர்ச்சியானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சுற்றுவட்டப் பகுதியைத் தவிர்த்து மத்தியப் பகுதியில் மட்டும் ஏற்படுகிறது.

அத்துடன் நில அதிர்ச்சியானது கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படும் நிலையில் கண்டத்தின் ஓரப் பகுதியில் மட்டுமல்லாது கண்டத்தின் மத்தியப் பகுதியிலும் நில அதிர்ச்சி ஏற்படுவதும் கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கத்திற்கு முரணாக இருக்கிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும்  ஏற்படுகிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் இந்தோனேசியாவிலும் ஹைத்தி தீவிலும் ஜப்பானின் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.




(படம்- பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்)

உதாரணமாக கடந்த   1996 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1997  ஆம் ஆண்டு செப்டம்பர் வரை அலாஸ்கா பகுதியில் உள்ள பெலிக் எரிமலையின் மேல் பறந்து சென்ற ஒரு செயற்கைக் கோளில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டன.

அந்தக் கதிர்கள் தரையில் இருந்த மேடு பள்ளங்களில் பட்டு எதிரொலிக்கப்  பட்டு மறுபடியும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது நுட்பமான கருவிகள் மூலம் தரையின் மேடு பள்ளங்கள் சிவப்பு மற்றும் நீலம் போன்ற வண்ண வேறுபாடுகளாக பதிவு செய்யப் பட்டது.

இதே போன்று பல முறை அந்த எரிமலைப் பகுதியின் மேல் ரேடியோ கதிர்கள் வீசப் பட்டு தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.அந்தப் படங்களை கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்ட பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் அந்த எரிமலையும் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து தாழ்ந்திருப்பதை எரிமலை ஆய்வாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.

இவ்வாறு ஒரு எரிமலை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குகிறது. அப்பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு வரைந்ததைப் போன்ற சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இந்த மேடு பள்ள வளையங்கள் சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதாலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவகுவதாலும் சாதாரணமாக தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரிவதில்லை.

ஆனால் தரை மட்ட மாறுபாடுகளை நுட்பமாக பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் எரிமலையை சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகிறது.

இதே முறையியல் ஒரு இடத்தில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு  எடுக்கப் பட்ட தரைமட்ட ஏற்றத் தாழ்வுப் படங்களையும் ,நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு எடுக்கப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைக் குறிக்கும் செயற்கைக் கோள் படங்களையும் கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்ட பொழுது,  நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட ஹைத்தி மற்றும் ஹோண்சு ஆகிய தீவுகளில் நில அதிர்ச்சிக்கு முன்பு செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட தரை மட்ட மேடு பள்ள படத்தையும் நில அதிர்சிக்குப் பிறகு எடுக்கப் பட்ட  தரை மட்ட மாறு பாடுகளைக் குறிக்கும் செயற்கைக் கோள் படங்களையும் ஒரே படமாக மாற்றப் பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய ஏற்றத் தாழ்வு வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

எரிமலை வெடித்ததால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது. 

குறிப்பாக கடந்த 12.01.2010, அன்று வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டது.

சாவு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டியது.



(படம்-ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது லியோகேங் என்ற துறைமுக நகரக் கடற் கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது)



(ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவான மேடு பள்ள வளையங்கள். செயற்கைக் கோள்-கணிப்பொறி படம் )

அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு பதினோரு மாதங்களுக்கு முன்பு 28.03.2009 அன்று ஜப்பான் நாட்டின் ஆலோஸ் செயற்கைக் கோள் ஹைத்தி தீவின் மேல் பறந்து சென்றது.

அப்பொழுது ஆலோஸ் செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் ஹைத்தி தீவின் மேல் வீசப் பட்டது.அந்த ரேடியோ கதிர்கள்  ஹைத்தி தீவின் தரையின் மேல் பட்டு எதிரொலிக்கப் பட்டதால் மறுபடியும் ஆலோஸ் செயற்கைக் கோளை வந்தடைந்தது.

அவ்வாறு ஆலோஸ் செயற்கைக் கோளை திரும்ப வந்தடைந்த  ரேடியோ கதிர்கள் நுட்பமான படக் கருவிகளில் பதிவான பொழுது ஹைத்தி தீவின் மேடு பள்ளங்கள் சிவப்பு நீலம் போன்ற வண்ண வேறு பாடுகளாக  பதிவாகின.குறிப்பாக மேட்டுப் பகுதிகள் சிவப்பு நிறமாகவும் பள்ளமான பகுதிகள்  நீல நிறத்திலும் பதிவாகின.

இதே போன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு நான்கு நாட்கள் கழித்து 16.01.2010, அன்றும் ஆலோஸ் செயற்கைக் கோள் ஹைத்தி தீவின் மேல் பறந்து சென்ற பொழுதும் ஹைத்தி தீவின் தரையின் மேல் ரேடியோ கதிர்கள் வீசப் பட்டு ஹைத்தி தீவின் தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.

இவ்வாறு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகும் எடுக்கப் பட்ட தரை மட்ட ஏற்றத் தாழ்வுகள் பதிவு செய்யப் பட்டன.பிறகு அந்தப் படங்கள் கணிப பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்டது.அந்தப் படத்தில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் இருபது கிலோமீட்டர் சுற்றளவிற்கு 35 சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய ஏற்றத் தாழ்வு வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

இவ்வாறு எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய ஏற்றத் தாழ்வு வளையங்கள் உருவாவதைப் போன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 35 சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய ஏற்றத் தாழ்வு வளையங்கள் உருவாகி இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது புலனாகிறது.

இந்த நிலையில் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமே ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும் இந்த நிலையில் கரீபியன் தீவிற்கு வடக்கில் இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் கரீபியன் பாறைத் தட்டிற்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

The January 12, 2010, Haiti earthquake occurred in the boundary region separating the Caribbean plate and the North America plate.

This plate boundary is dominated by left-lateral strike slip motion and compression, and accommodates about 20 mm/y slip, with the Caribbean plate moving eastward with respect to the North America plate.

குறிப்பாக கரீபியன் பாறைத் தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் ஆண்டுக்கு 20 மில்லி மீட்டர் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது

குறிப்பாக கரீபியன் பாறைத் தட்டு எந்தத் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாக தெரிவிக்காமல் ‘வட அமெரிக்கக் கண்டத்தை பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது’ என்று அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் தெரிவிப்பதற்கு காரணம் இருக்கிறது.

உண்மையில் கரீபியன் பாறைத் தட்டு எந்தத் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்கப் புவியியல் கழகத்தினருக்கு தெரிய வில்லை.

அதனால் வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் வட அமெரிக்கக் கண்டதைப் பொருத்தமட்டில் கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உறட்சல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் விளக்கம் கூறுகின்றனர்.







(கண்டங்களின் நகர்ச்சி- ஹைத்தி தீவு குறிப்பிடப் பட வில்லை.அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட விளக்கப் படம் )

ஏனென்றால் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறிய வெக்னர் கரீபியன் தீவுகள் எப்படி உருவாகின என்று  குறிப்பிட வில்லை.

அதனால்தான் குழப்பமே.

கண்டங்களின் அமைப்பு பற்றிய வெக்னரின் விளக்கம்

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிப்பதற்காக ஐரோப்பியர்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த பொழுது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

அப்பொழுது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஏற்கனவே ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் விலங்கினங்கள் காணப் படுவது குறித்து ஐரோப்பியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

எப்படி இந்த விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து அமெரிக்கக் கண்டங்களை அடைந்திருக்கும் என்று வியந்தனர்.எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேலாக ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்து அதன் வழியாக விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கக் கண்டங்களை அடைந்திருக்கலாம் என்று கருதினர்.

இந்த நிலையில் கப்பல் போக்குவரத்திற்கு பயன் படுத்துவதற்காக நிலவியல் வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அட்லாண்டிக் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு கடற் கரையும் ஒன்றுக் கொன்று இணையான வடிவில் இருப்பது பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

இந்த நிலையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள் தென் அமெரிக்கக் கண்டத்திலும் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இருப்பதை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.

இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற வானிலை வல்லுநர் ,நிச்சயம் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது.

எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த குளோசப் டெரிஸ் என்ற தாவரத்தின் புதை படிவங்கள் தென் பகுதிக் கண்டங்களான தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற தென் பெருங் கண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தத் தென்பெருங் கண்டம் பிரிந்து நகர்ந்து தென் பகுதிக் கண்டங்கள் உருவாகி தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.

இதே போன்று லாரேசியா என்ற வடபெருங் கண்டம் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. மேலும் முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவாணாவும் லாரேசியாவும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற தனிப் பெருங் கண்டம் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.

ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது என்ற கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியான பதிலைக் கூற இயலவில்லை.

எனவே பல ஆண்டுகளாக வெக்னரின் கருத்து புவியியல் வல்லுனர்களால் ஏற்கப் படாமல் இருந்தது.

கண்டங்கள் கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்கின்றன?

இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பலுக்கு தலைமை தாங்கிய பிரிசிடன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஹாரி ஹெஸ் என்பவர் சோனார் என்று அழைக்கப் படும் கருவியின் உதவியால் ஒலி அலைகளை கடலுக்குள் செலுத்தி அவைகள் கடல் தரையில் பட்டு எதிரொலிக்கப் பட்டு திரும்பப் பெறப பட்டத்தின் அடிப்படையில் கடல் தரையின் மேடு பள்ளங்கள் போன்ற விபரங்களை சேகரித்தார்.

அதன் அடிப்படையில் அவர் அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் அமைந்து இருப்பதை அறிந்தார்.






(படம்.அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடல்டரை உருவாகி விரிவடைந்து நகர்கிறது என்று கருதப் படுகிறது )

மேலும் அந்தக் கடலடி மலைத் தொடரானது அட்லாண்டிக் கடலின் தென் கோடிப் பகுதியில் குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தெற்கில் கிழக்கு மேற்காக இரண்டு கிளைகளாக பிரிந்து மேற்கு நோக்கி சென்ற மலைத் தொடர் பசிபிக் கடலுக்குள் செல்வதையும் அதே போன்று கிழக்கு திசை நோக்கி சென்ற இரண்டாவது கிளையானது இந்தியப் பெருங் கடலுக்குள் நீண்டு செல்வதையும் ஹெஸ் அறிந்தார்,

இந்த நிலையில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தந்தி தொடர்பிற்காக  கேபிள்கள் பதிக்கும்  பணியின் பொழுதும் ,நீர் மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கருவியைப் பயன் படுத்திய பொழுதும் மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத் தொடர் பகுதியில் அதிக அளவில் எரிமலைகள் இருப்பதும் அப்பகுதியில் அதிக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் அறியப் பட்டது.

மேலும் எரிமலைகள் அதிகமுள்ள மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத் தொடரின்  மத்தியப் பகுதியில் உள்ள பாறைகளின் தொன்மையானது கண்டங்களுக்கு அருகில் உள்ள கடல் தளப் பாறைகளின் தொண்மையை விட தொண்மை குறைவாக இருப்பதும் அறியப் பட்டது.

இதன் அடிப்படையில் ஹெஸ் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

அதாவது ஒரு பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக்கும் பொழுது அடிப்பக்கத்தில் இருந்து சூடான நீர் மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து மறுபடியும் பாத்திரத்திற்கு அடியில் சுழன்று செல்வதை மாதிரியாக வைத்து ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தார்.

அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற் பகுதிக்கு வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய  கடல் தட்டாக உருவாகுவதாக ஹெஸ் கூறினார்.

அதே போன்று மறுபடியும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கு பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய பாறைகளை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய பாறைக் குழம்பு குளிர்ந்து புதிய கடல்தளப் பாறையாக உருவாகின்றன என்று ஹெஸ் கூறினார்.

இதே போன்று தொடர்ந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி பழைய கடல் தளப் பாறைகளை நகர்துவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ச்சியாக புதிய கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக ஹெஸ் கூறினார்.

இவ்வாறு கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹெஸ் கூறினார்.

இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.

அதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

இந்த விளக்கம் உண்மையென்றால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் சந்திக்கும் பகுதி வரை தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டத் தட்டுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214  நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் தயாரித்த நில அதிர்ச்சி வரைபடத்தில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனையே.

கரீபியன் பாறைத் தட்டின் பூர்வீகம்.

கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும் புவியியலாளர்கள் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாக கருதுகின்றனர்.மேலும் அந்தப் பாறைத் தட்டானது பசிபிக் கடலுக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை மையத்தால் உருவானது என்றும் நம்புகின்றனர்.

குறிப்பாக பசிபிக் கடலில் தற்பொழுது காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் கரீபியன் தீவுகள் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.

இந்த விளக்கத்தில் உள்ள முரண்பாடு என்ன வென்றால் காலாபாகாஸ் தீவுக் கூட்டமானது ஐம்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகி இருக்கிறது.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ முப்பது லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாகி இருக்கிறது.

எனவே அதிக பரப்பளவில் உள்ள தீவுக் கூட்டமானது குறைந்த பரப்பளவில் உள்ள எரிமலை மையத்தின் மேல் எப்படி உருவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

பசிபிக் கடல் தட்டுக்கு அடியில் இருக்கும் எரிமலை மையத்தினால் கடல் தட்டு துளைக்கப் பட்டு கடல் தட்டிற்கு மேலே எரிமலைத் தீவுகளாக உருவான பிறகு கரீபியன் தீவுப் பகுதியானது தனிப் பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்ததாகவும் இன்றும் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால் தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் கோஸ்டா ரிகோ, ஹோண்டுராஸ், பனாமா போன்ற நாடுகள் அடங்கிய மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.

எனவே இந்த நிலையில் எப்படி கரீபியன் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் உருவாகி ஒரு பாறைத் தட்டின் மேல் இருந்த படி வட அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நுழைந்து அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு கரீபியன் தீவுகள் இருப்பதாகக் கூறப் படும் பாறைத் தட்டானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நுழைந்ததாகவும் அப்பொழுது மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உருவாகி இருக்க வில்லை என்றும் விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வஸ்தவா ஆகியோர் ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களி கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதே போன்று 1985  ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள்  ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களை கண்டு பிடித்து இருகின்றனர்.

எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்கப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

எனவே கரீபியன் தீவுகளானது பசிபிக் கடல் பகுதியில் காலபாகஸ் தீவுகள் இருக்கும் எரிமலை மையத்தின் மேல் உருவாகி பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்தேயாகும்.

சுருங்கி விரிந்த கரீபியன் பாறைத் தட்டு ஒரு அதீத கற்பனை.

கரீபியன் பாறைத் தட்டானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாக கணிப் பொறி செயல் முறைகள் மூலம் விளக்கப் பட்டது.

ஆனால் அந்த கால கட்டத்தில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே கரீபியன் பாறைத் தட்டு நுழையும் அளவுக்கு இடைவெளி இருந்திருக்க சாத்தியம் இல்லை என்று தெரிய வந்தது.

குறிப்பாக கரீபியன் தீவுகளின் மேற்குப் பகுதியானது அளவில் பெரிதாக இருக்கிறது.ஆனாலும் கரீபியன் பாறைத் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவானதாக நம்பும் புவியியலாளர்கள் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே கரீபியன் பாறைத் தட்டு நுழையும் பொழுது வில் வளைவது போன்று சற்று வளைந்து  சுருங்கி அமெரிக்கக் கண்டங்களுக்கு மத்தியில் வந்த பிறகு மறுபடியும் விரிந்து பெரிதாகி கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூட ஒரு விளக்கம் கூறுகின்றனர்.

ஆனாலும் பெரும்பாலான புவியியல் வல்லுனர்கள்  இந்த வினோத விளக்கத்தை ஏற்க வில்லை.




(ஹைத்தி தீவானது ஓன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் உருவாகி எழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக புவியியல் வல்லுனர்கள்  விளக்கம் கூறுகின்றனர்.)


எனவே கரிபியன் பாறைத் தட்டு கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால் அப்படியென்றால் இதற்கு முன்பு அந்தப் பாறைத் தட்டு எங்கே இருந்தது என்ற கேள்வி எழும்.அப்படியென்றால் பசிபிக் கடல் பகுதியில் உருவானது என்ற கருத்தாக்கத்தை ஏற்க வேண்டியிருக்கும்.அந்தக் கருத்தை ஏற்றால் அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளுக் கெல்லாம் பதில் கூற இயலாது.

மிகப் பெரிய சிக்கல் வரும் என்பதாலேயே அமெரிக்கப் புவியியல் அமைப்பினர் முன்பு குறிப்பிட்டதைப் போன்று மேற்கு திசையில் நகர்வதாகக் நம்பப் படும்  வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரிபியன் பாறைத் தட்டின் கிழக்கு நோக்கிய நகர்ச்சியால் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று சுற்றி வளைத்து ஒரு விளக்கத்தை அறிக்கையில் தெரிவித்து இருகின்றனர்.

முக்கியமாக கரிபியன் பாறைத் தட்டு தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால் கரிபியன் பாறைத் தட்டிற்கு தெற்கில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டப் பகுதியிலோ அல்லது கரிபியன் பாறைத் தட்டின் தென் பகுதியிலோ ஏன் அன்று நில அதிர்ச்சி ஏற்பட வில்லை என்ற கேள்வியும் வரும்.

ஏனென்றால் கரீபியன் பாறைத் தட்டு என்று புவியியல் வல்லுனர்கள்  குறிப்பிடும் பகுதி தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கே குறிப்பாக வட மேற்குப் பகுதியில் நன்றாக அமிழ்ந்து இருக்கிறது.



(வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா கண்டங்கள் மற்றும் பசிபிக் ,கரீபியன் கடல் தட்டுகள்  நகர்ந்து கொண்டு இருக்கும் திசை. புவியியல் வல்லுனர்கள்  வெளியிட்ட படம் )

 

(கரீபியன் தீவுகளுக்கும்  தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட பகுதியில் நில அதிர்ச்சிகள் மிக மிக குறைவு)

மேலும் கரீபியன் தட்டின் மத்தியப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதி புடைத்துக் கொண்டு கரிபியன் பகுதிக்குள் முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில் கரிபியன் பாறைத் தட்டானது வளைந்து சென்றால் கூட வட அமெரிக்கக் கண்டம் மற்றும் தென் அமெரிக்கக் கண்டம் ஆகிய இரண்டு கண்டங்களையும் உரசிக் கொண்டுதான் செல்ல முடியும்.

ஆனால் தென் அமெரிக்கக் கண்டமும் கரிபியன் பகுதியியும் சந்திக்கும் பகுதியில் நில அதிர்ச்சிகள் மிகவும் குறைவாகவே பதிவாகியிருக்கின்றன.


எனவே கரிபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினால் பிறகு ஏன் அன்றைய தினம் தென் அமெரிக்கக் கண்டமும் கரிபியன் பகுதியும் சந்திக்கும் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படவில்லை என்ற கேள்வியும் சிக்கலை ஏற்படுத்தும்.

குறிப்பாக கரிபியன் தீவுகள் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையே வசமாக சிக்கிக் கொண்ட பகுதியாகக் கருதப் படுகிறது.


ஒரு புவியியல் வல்லுநர் கரிபியன் பாறைத் தட்டை முழங்கால் மற்றும் தொடை எலும்புக்கு இடையே மாட்டிக் கொண்ட பந்துக் கின்ன மூட்டு போன்று கரிபியன் பாறைத் தட்டு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது கரிபியன் பாறைத் தட்டானது அங்கும் இங்கும் எங்கும் அசையக் கூட இயலாது என்று தெரிவிக்கிறார்.

எனவே அமெரிக்க அரசின் புவியியல் அமைப்பினர் கரிபியன் பாறைத் தட்டானது தனியாக கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினாலும் சிக்கல் வரும் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினாலும் சிக்கல் வரும் என்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலையிலேயே ‘’வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரிபியன் பாறைத் தட்டின் கிழக்கு திசை நகர்ச்சியால் உரசல் ஏற்பட்டு  நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று சாமர்த்தியமாகத் தெரிவித்து பல்வேறு சிக்கல்களில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

அமெரிக்கப் புவியியல் கழகத்தினரின் விளக்கம் புத்திசாலித் தனமானதாக இருக்கலாம்.ஆனால் உண்மையை தெரிவிப்பதாக இல்லை.

இந்த நிலையில் இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்  கரீபியன் பாறைத் தட்டானது அட்லாண்டிக் கடல் பகுதியில் தோன்றி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்து கொண்டு இருக்கும் திசையிலேயே அதாவது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கின்றனர்.

இந்த விளக்கத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்தான் அந்தக் கடல் தட்டின் மேல் அமைந்திருக்கும் வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று கருதப் படுகிறது.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி நகர்ந்து கொண்டு  இருக்கும் கடல் தட்டில் கரீபியன் பாறைத் தட்டு எப்படி  உருவாகி  எப்படி தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்தது என்று கேள்வி எழுகிறது.

மேலும் பசிபிக் கடல் பகுதியில் இருப்பது போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் பெரிய அளவில் எரிமலைத் தீவுக் கூட்டங்களும்  இல்லை.எனவே ஒரு சில புவியியல் வல்லுனர்களால் முன்வைக்கப் பட்ட இந்த புதிய விளக்கம் பெரும்பான்மை புவியியல் வல்லுனர்களால் ஏற்கப் படவில்லை.

இந்த சிக்கல்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்பொழுது கரீபியன் தீவுகளானது தற்பொழுது இருக்கும் இடத்திலே உருவாகியிருக்கிறது என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெஸ்கிடிஸ் என்ற புவியியல் வல்லுநர் ஒரு புதிய கருத்தை முன் வைத்திருக்கிறார்.

 
ஆனால் இதிலும் கூட ஒரு சிக்கல் என்னவென்றால் இருக்கும் இடத்திலேயே உருவாகியிருந்தால் கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும் பாறைத் தட்டு எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது ஏன்  நகர்ந்து கொண்டு இருக்கிறது அல்லது கரீபியன் பாறைத் தட்டு மட்டும் எப்படி நகராமல் ஒரே இடத்தில் இருக்க முடியும் போன்ற கேள்விகள் எல்லாம் எழ ஆரம்பிக்கிறது.

மேலும் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருபதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டதிற்கும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டதிற்கும் இடையில் திடீரென்று உருவானதாக கருதப் படும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது எப்படி அவ்வளவு கச்சிதமாக வட அமெரிக்கக் கண்டதையும் தென் அமெரிக்கக் கண்டதையும் இணைக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறதே?

ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் இரண்டு ரயில்களுக்கு இடையில் பாலம் போன்ற இணைப்பை ஏற்படுத்தி ஹீரோ ஒரு ரயிலில் இருந்து அடுத்த ரயிலுக்கு செல்வது ஹாலிவுட் ஆக்சன் திரைப் படத்தில் வரும் காட்சியைப் போல் இருக்கிறது. 

ஆனால் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசை நோக்கியும் ம் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசை நோக்கியும்  நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும்பொழுது மத்திய அமெரிக்கப் பகுதியானது வட அமெரிக்கக் கண்டதையும் தென் அமெரிக்கக் கண்டதையும் கொஞ்சம் கூட பிசகாமல் இணைத்து இருப்பதுடன் அப்பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைகளும் தாவரங்களின் புதை படிவங்களும் அமோனட்டிஸ் போன்ற கடல் ஒட்டு உடலியின் புதை படிவங்களும் காணப் படுவது கண்டங்கள் நிலைத்த அமைப்புகள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.





(இந்தப் படத்தில் கரீபியன் தீவுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கோடிட்ட பகுதி வரையறை செய்யப் படவில்லை என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. படம்-பிபிசி)

இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு நோக்கிய கரிபியன் தட்டின் நகர்ச்சியால் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் கரிபியன் தட்டிற்கும் இடையில் ‘’இடது பக்கவாட்டு உரசல்’’ஏற்படுகிறது என்று விளக்கம் கூறும் அமெரிக்கப் புவியியல் அமைப்பினருக்கு வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் எந்த வகையான உரசல் ஏற்படுகிறது என்று குறிப்பிட இயலவில்லை.

 
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் வெவ்வேறு வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள்  கூறுகின்றனர். அதே போன்று கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள்  விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கரிபியன் தீவுகளுக்குக் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதியும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களும் வெவ்வேறு வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களின் ஓரப் பகுதிகளும் உரசலில் ஈடுபட்டு அப்பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து ஒரு வரை படம் தயாரிக்கப் பட்டது.அந்த வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வில்லை.(படம்)

எனவே கரீபியன் தீவிற்கு கிழக்கில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதி வரையறுக்கப் படாத பகுதி என்று புவியியல் வல்லுனர்கள்  குறிப்பிடுகின்றனர்.

எனவே இந்த நில அதிர்ச்சி வரை படம் மூலம் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் கண்டங்கள் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.



இந்தோனேசிய சுனாமிக்கு ஏன் இரண்டு விளக்கங்கள்?

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்ச்சியைச் தொடர்ந்து உருவான சுனாமி தெற்காசியாவையே உலுக்கியது.அந்த நில அதிர்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வட மேற்கு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து காணப் பட்டது.



(சுனாமிக்குப் பிறகு இந்தோனேசியாவின் சிமிழு தீவுப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்த கடலடித் தாவரம்-நேசனல் ஜியாகிரபிக் வெளியிட்ட படம் )

அத்துடன் சிமிழு தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி இருந்தது.மேலும் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.

எனவே தீவுப் பகுதி மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கிறது.

சிமிழு தீவு ஏன் உயர்ந்தது?




 (சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு தீவில் 20.02.2008 அன்று ஏற்பட்ட அதிர்ச்சியால்  சிமிழு தீவின் தரையில் ஒரு மையப் பகுதியை சுற்றிலும் வளைய வடிவில் தரைப் பகுதியானது உயர்ந்து  தாழ்ந்து இருப்பதைத் காட்டும் செயற்கைக் கோள்- பல்லிடைக் காட்சி தொகுப்பு படம் ஜப்பான் ஆய்வு மையம் வெளியிட்ட படம் )

தெற்காசிய சுனாமிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 20.02.2008 அன்று சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 அலகிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு  சிமிழு தீவின் மேல் ஜப்பானின் ஆலோஸ் பல்சார் என்ற செயற்கைக் கோள் 03,10.06 அன்று கடந்து சென்ற பொழுது சிமிழு தீவின் தரையின் மேல் ரேடியோ கதிர்கள் வீசப் பட்டு திரும்பப் பெறப் பட்ட கதிரலைகள் மூலம் சிமிழு தீவின் தரையின் மேடு பள்ளங்கள் வரை படமாக பதிவு செய்யப் பட்டது

அதே போன்று சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட அடுத்த நாளான  21.02.2008 அன்றும் ஆலோஸ் செயற்கைக் கோள் மூலம் சிமிழு தீவின் தரை மட்ட மாறுபாடுகள் ரேடியோ கதிர் வீச்சு முறை மூலம் பதிவு செய்யப் பட்டது.

இவ்வாறு நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகும் எடுக்கப் பட்ட சிமிழு தீவின் தரை மட்ட செயற்கைக் கோள் படப் பதிவுகளை கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்டது.

அந்தப் படத்தில் சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் குறிப்பாக நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளையங்கள் வரைந்தது போன்று தரை பகுதியானது ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர்  ஏற்றத் தாழ்வுடைய மேடு பள்ள வளையங்கள்  உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

எனவே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை வெடித்ததாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைக் குறிக்கும் செயற்கைக் கோள் படம் மூலம் நிரூபணமாகிறது.

ஆனால் சிமிழு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு அமெரிக்காவின் அறிவியல் மையமான நாசா அமைப்பைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை தெரிவித்து இருகின்றனர்.

குறிப்பாக நாசா அமைப்பு 10.01.2005  அன்று வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் டாக்டர்  ரிச்சர்ட் கிராஸ் என்ற புவியியல் வல்லுநர் சுமத்ரா தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் 26.12.2004 அன்று நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது என்று தெரிவித்து இருந்தார்.

The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together. It was caused by the release of stresses that developed as the India plate slid beneath the overriding Burma plate. NASA report dated January 10, 2005

ஆனால் மூன்று மாதம் கழித்து அதே நாசா அமைப்பு 27.04.2005  அன்று வெளியிட்ட அறிக்கையில் சுமத்ரா தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

Forces from deep within the Earth continuously drag the subducting plate (Australia) underneath the overriding plate (Sunda). NASA report dated April 27, 2005



(படம்-தெற்காசிய சுனாமியை உருவாக்கியது இந்தியக் கண்டத் தட்டா அல்லது ஆஸ்திரேலியக் கண்டத் தட்டா ?)

நாசாவுக்கு ஏன் குழப்பம்?



 (இந்திய ஆஸ்திரேலிய கண்டத் தட்டுகளுக்கு இடையில் இருப்பதாகக் கருதப் படும் சிமிழு தீவுப் பகுதியில் 2004 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தைக் குறித்து அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட வரை படம்) 

கண்டத் தட்டு நகர்சிக் கருத்தாக்கத்தின் படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பிறகு பிரிந்து நகர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கருதப் படுகிறது.


தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டமானது ஐயாயிரம் கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.

இவ்வாறு ஆரம்பத்தில் ஒரே கண்டமாக இருந்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவு விலகி நகர்ந்து இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தால்தான் சாத்தியமாகும்.

இந்த நிலையில் கண்டத்தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள்  விளக்கம் கூறுகிறார்கள்.

இந்த விளக்கங்கள் உண்மையென்றால் இந்தியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் இந்தியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் உரசல் ஏற்பட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் நாசா அமைப்பினர் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.




( இடது பக்க மூன்றாவது குறிப்பு major active fault or fault zone;dashed where nature,location.or activity uncertain)

இதே போன்று கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் வரைபடம் ஒன்றையும் நாசா அமைப்பினர் வெளியிட்டனர்.

அந்த வரை படத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் நாசா அமைப்பினர் தெரிவித்து இருகின்றனர்.

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் நாசா அமைப்பினர் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்றும் பிறகு அதற்கு மாறாக ஆஸ்திரேலியா கண்டம் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறியிருப்பது யூகத்தின் அடிப்படையிலான விளக்கமேயொழிய   ஆதாரபூரவமான விளக்கமல்ல.

இந்த நிலையில் கடந்த 11.04.2012 அன்று இந்தோனேசியா கடல் பகுதியில் குறிப்பாக சுமத்ரா தீவுப்க்கு அருகில் இரண்டு முறை பயங்கர நில அதிர்ச்சிகள் நிகழ்ந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டு திரும்ப வாபஸ் பெறப் பட்டு மறுபடியும் எச்சரிக்கை விடப் பட்டு மறுபடியும் வாபஸ் பெறப் பட்டது.

அன்றைய தினம் சுனாமி ஏன் வரவில்லை என்று அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் ஒரு விளக்கத்தை தெரிவித்தனர்.அதாவது இந்தோ-ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு பக்க வாட்டில் நகர்ந்ததால் நில அதிர்ச்சி மட்டும் ஏற்பட்டது.மற்றபடி மேல் நோக்கி உயராததால் சுனாமி ஏற்படவில்லை என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறினார்கள்.

அதாவது 2004 ஆம் ஆண்டு கண்டத் தட்டு இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால் தீவு அமைந்து இருக்கும் கண்டத் தட்டு மேல் நோக்கி உயர்ந்து சுனாமி உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறினார்கள்.

ஆனால் 2012 ஆம் ஆண்டு இந்தியக் கண்டத் தட்டின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டது.ஆனால் கண்டத் தட்டு பக்கவாட்டில் நகர்ந்து நில முறிவு ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று யூகத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள்  விளக்கம் கூறி இருக்கிறார்கள்.

உண்மையில் அமெரிக்கப் புவியியல் வல்லுனர்களுக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பாறைத் தட்டின் மேல் இருக்கிறதா அல்லது இரண்டு பாறைத் தட்டின் மேல் இருக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை.

உண்மையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்த அமைப்புகள்.குறிப்பாக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியா விற்கும் இடையில் இந்தோனேசியத் தீவுகள் ஒரு மணி மாலை போன்று வரிசையாக அமைந்து இருக்கின்றன.

.

இந்த நிலையில் இந்தியாவும் ஆஸ் திரேலியா வும் வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்று பூமிக்கு அடியில் செவதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் தென் துருவப் பகுதியில் கோண்டுவானா என்ற கண்டத்தின் பகுதியாக இருந்ததாகவும் அதன் பிறகு அங்கிருந்து நகர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்தியா நேரான பாதையில் நகர்ந்து வந்ததா?அல்லது வளைவான பாதையில் நகர்ந்து வந்ததா?

 

 (படம்-அரபிக் கடல் பகுதியில் வளைவான பாதையில் அமைந்து இருக்கும் லட்சத் தீவு மாலத் தீவு வரிசை,வங்காள விரிகுடா பகுதியில் நேர் கோட்டுப் பாதையில் அமைந்து இருக்கும் தொண்னூறு  கிழக்கு ரேகை மேடு.)

இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் இருந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு நகர்ந்து வந்ததற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடல் தரையில் வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரை குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவிற்கு மேற்கு பகுதியில் லட்சத் தீவுகள் வளைவான வரிசையில் அமைந்து இருக்கின்றன.இவ்வாறு லட்சத் தீவுகள் வளைவான வரிசையில் அமைந்து இருப்பதற்கு இந்தியக் கண்டத் தட்டானது தென் துருவப் பகுதியில் இருந்து வளைவான பாதையில் நகர்ந்து வந்தபொழுது பூமிக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை மையத்தால் இந்தியக் கடல் தட்டானது தொடர்ச்சியாக துளைக்கப் பட்டு கடல் தட்டிற்கு மேலே வரிசையாக எரிமலையாக உருவானதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இதே போன்று இந்தியாவிற்கு கிழக்கு பகுதியிலும் வங்காள விரிகுடா கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக ஒரு எரிமலைத் தொடர் அமைந்து இருக்கிறது.ஆனால் இந்தியாவிற்கு மேற்கே அரபிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் லட்சத் தீவு வரிசை போன்று வளைவாக உருவாகாமல் இந்தியாவிற்கு கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடா கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடரானது நேர்கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கிறது.

குறிப்பாக இந்த நேர்கோட்டுப் பாதை எரிமலைத் தொடரானது தொண்ணூறு பாகை தீர்க்க ரேகைக்கு இணையாக உருவாகி இருப்பதால் இந்த நேர் கோட்டுப் பாதை எரிமலைத் தொடரானது தொண்ணூறு பாகை கிழக்கு தீர்க்க கடல்மேடு என்று அழைக்கப் படுகிறது.

உண்மையில் இந்தியா ஒரு பாறைத் தட்டின் மேல் இருந்தபடி தென் துருவப் பகுதியில் இருந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு நகர்ந்து வந்தபொழுது இந்தியக் கண்டத் தட்டானது பூமிக்கு அடியில் இருந்த எரிமலை மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டு இருந்தால் இந்தியாவிற்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்து இருக்கும் இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொண்டு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவிற்கு மேற்கு பகுதியில் லட்சத் தீவுகள் வளைவான பாதையிலும் இந்தியாவிற்கு கிழக்கு பகுதியில் இருக்கும் கடலடி மேடும் ஒன்றுக் கொண்டு இணையற்ற வகையில் உருவாகி இருக்கிறது. மேலும் இந்திய நிலப் பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறும் நிலையில் இந்தியாவிற்கு கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடரானது வடகிழக்கு திசை நோக்கி உருவாகாமல் வடக்கு தெற்கு திசை நோக்கி உருவாகி இருப்பதும் இந்திய நிலப் பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற புவியியல் வல்லுனர்களின் விளக்கத்திற்கு முரணாக இருக்கிறது. 

எனவே இந்தியா நகர்ந்து வந்ததற்கு கூறப் படும் ஆதாரமும் விளக்கமும் சரியான விளக்கமல்ல.

மேலும் இந்தியா ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் யாவும் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற தென் பெருங்கண்டமாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் பூகோள ரீதியில் சாத்தியமல்ல.


எப்படியென்றால் பெருங் கண்டம் பிளவு பட்டு பிரிந்து நகர்ந்ததற்கு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகி புதிய பாறைத் தட்டாக உருவாகுவதாகவும் அதே போன்று தொடர்ந்து அதே இடத்திற்கு மறுபடியும் பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே உருவாகி இருந்த பழைய பாறைகளை பக்கவாட்டுப் பகுதிக்கு நகர்ந்து விட்டு மத்தியப் பகுதியில் புதிதாக பாறைத் தட்டு உருவாகுவதால் விரிவடைந்து நகரும் பாறைத் தட்டின் மேல் உள்ள கண்டமும் பிளவு பட்டு நகர்வதாக விளக்கம் கூறப் படுகிறது.

மேலும் பூமிக்கு அடியிலிருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி மறுபடியும் பூமிக்கு அடியிலேயே செல்வதால் பாறைக் குழம்பு சுழன்று செல்லும் பொழுது மேற்பகுதியில் இருக்கும் கண்டத் தட்டை நகர்த்தி செல்கிறது என்றும் இதனால் பாறைக் குழம்புக்கு மேற்பகுதியில் இருக்கும் கண்டங்கள் எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து செல்கிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.




ஆனால் தென்பகுதிக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருகின்றன.இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தை விட்டு தென் பகுதிக் கண்டங்கள் விட்டு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால் அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல்தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது தெற்கு வடக்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து இருக்க வேண்டும்.ஆனால் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அதாவது குறைந்த சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் புதிய கடல் தளப் பாறை வடக்கு திசை நோக்கி நகரும் பொழுது எப்படி அதிக சுற்று வட்டப் பகுதியை நிரப்ப இயலும்?


மேலும் தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தளப் பாறையால் வடக்கு பகுதியில் இருக்கும் அதிக பரப்பளவில் இருக்கும் கடல்தளப் பாறைகளை எப்படி வடக்கு திசை நோக்கி நகர்ந்த இயலும்?

இதே போன்று அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கில் அதிக சுற்றளவுப் பகுதியில்  உருவாகும் புதிய கடல் தளப் பாறை அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கியும் அதாவது குறைந்த சுற்றளவுப் பகுதியை நோக்கியும் நகர இயலாது.நகர்ந்தால் கடல்தளப் பாறைகளுக்கு இடையே நேர்க்கடி ஏற்பட்டு கடல்தளம் நோருங்கி விடுமே?

எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தென்துருவப் பகுதியில் ஒரு தென் பெருங்கண்டம் இருந்ததாகவும் அந்தக் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள தென்பகுதிக் கண்டங்கள் உருவாகின தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தன என்று கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருது மட்டுமல்ல.பூகோள ரீதியில் சாத்தியமற்ற விளக்கமும் ஆகும்.    

இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பால் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதால் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறான விளக்கம் ஆகும்.




குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக நீண்டு இருக்கும் கடலைடி மலைத் தொடரானது தென்பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென்பகுதியில் இரண்டு கிளைகளாகப் பிரிந்து அதில் ஒரு கிளையானது மேற்கு திசை நோக்கி நீண்டு பசிபிக் கடல் பகுதிக்குள் செல்கிறது.

இரண்டாவது கிளையானது  கிழக்கு திசை நோக்கி நீண்டு இந்தியப் பெருங் கடலுக்குள் நுழைந்து மறுபடியும் வடக்கு திசை நோக்கி திரும்பி இந்தியாவை சுற்றியபடி சென்று செங்கடல் பகுதியில் முடிவடைகிறது.


இந்த நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுஹ்டியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது கிழக்கு மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் மேற்கு திசை நோக்கி நகரும் கடல் தட்டின் மேல் இருந்தபடி அமெரிக்கக் கண்டங்கள் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

அதே போன்று கிழக்கு திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தட்டின் மேல் இருந்தபடி ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியிலும் வடக்கு தெற்காக நீண்டு இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியிலும் புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

எப்படி ஒரே நேரத்தில் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசை நோக்கியும் மேற்கு திசை நோக்கியும் நகர்ந்து செல்ல இயலும்?

உண்மையில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி எதிர்ரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் இருந்தபடி கண்டங்களும் எதிரெதிர் திசை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள்.



(நாசா வெளியிட்ட நில அதிர்ச்சி வரைபடம்)

உதாரணமாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி கடல் தட்டு விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. அதனால் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தட்டின் மேல் இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பிரிந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

அதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தட்டு உருவாகி வட கிழக்கு மற்றும் வட மேற்கு என எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. அதனால் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

இவ்வாறு தென் அமெரிக்காவும் வட அமெரிக்காவும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி இருவேறு திசை நோக்கி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியாக பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.






(இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர்.அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையிலும் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை என்று புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.)




(கரீபியன் தீவுகளுக்கு கிழக்குப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை கற்பனைக் கோடு ஒன்று வரையப் பட்டு வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் இரண்டு தனிப் பிரிவுகளாவாக பிரிந்துக் காட்டப் பட்டு இருக்கிறது.ஆனால் நில அதிர்ச்சி வரைபடத்தில் அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட வரைபடம்.)

ஆனால் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களை பதிவு செய்த வரைபடத்தில் அவ்வாறு தென் அமெரிக்கக் கண்டமும் வட அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்து என்பதுடன் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம்   நிரூபணமாகிறது.

இந்த நிலையில் கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாக அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை கற்பனையாக ஒரு கோட்டை வரைந்து வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் இரண்டு தனித் தனி பாறைத் தட்டுகளின் மேல் இருப்பதாகக் காட்டப் பட்டு இருக்கிறது.





அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைத் தீவு.

கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைகள் இருப்பதை புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைத் தீவு

  

(படம்- புனித பால் தீவு)


(படம்- புனித பால் புனித பீட்டர் பாறைத் தீவுகள்)


(படம்-புனித பால் புனித பீட்டர் தீவுகள் அமைவிடம்)

இதன் அடிப்படையில் நம் பூமியானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதப் படுகிறது.

இந்தா நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

மேலும் கடல் தட்டும் கண்டங்களும் பூமிக்கு அடியில் இருக்கும் மேண்டில் என்ற பாறைக் குழம்பு பகுதிக்கு மேல் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கருதப் படுகிறது.

இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகள் மேண்டில் பாறையான பெரிடோடைட் பாறையால் ஆகியிருப்பதுடன் அவற்றின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1832 ஆம் ஆண்டு  பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.பொதுவாக கடல் நடுவில் காணப் படும் தீவுகள் எரிமலைத் தீவுகலாகவே இருக்கும்.ஆனால் புனித பீட்டர் தீவில் இறங்கி சுற்றிப் பார்த்த டார்வின் விரைவிலேயே அந்தத் தீவுகள் எரிமலைத் தீவுகள் அல்ல என்பதைக் கண்டு பிடித்தார்.

குறிப்பாக அந்தத் தீவுகளில் சுண்ணாம்புப் பாறைகள் இருந்தன.மேலும் அந்தத் தீவுகளானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி மலைத் தொடரின் உச்சிப் பகுதியாகும்.

குறிப்பாக அட்லாண்டிக் கடலானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா என்ற பெருங் கண்டம் பிரிந்ததால் உருவானது என்று கருதப் படுகிறது.இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைகளுடன் தீவுகள் இருக்கிறது.எனவே பூமி தோன்றிய காலத்தில் இருந்தே அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் கண்டங்கள் நிலையாக இருந்திருது நிரூபணமாகிறது.

கடல் தரையை காணவில்லை.

இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கு முற்றிலும் மாறாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடல் தரையே இல்லாமல் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு இருக்கும் மலைத் தொடரானது பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு உயர்ந்த பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகியதால் உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.

மேலும் அதே இடத்தில் மறுபடியும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வருவதாகவும் அவ்வாறு வந்த பாறைக் குழம்பு குளிருந்து இறுகி புதிய பாறைத் தட்டாக உருவாகும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய பாறைத் தட்டை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்த்துவதால் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

இந்த நிலையில் அட்லாண்டிக் கடல் தரைப் பகுதியில் சோனார் என்று அழைக்கப் படும் ஒலி எதிரொலிப்புக் கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில்  அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடல் தரையே இல்லாமல் இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு கடலியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.


(படம்-வட்டமிடப் பட்ட இடத்தில் கடல் தரை காணப் படவில்லை)

இது குறித்து மேலும் ஆய்வு செய்ய இருபது ஆய்வுக் குழுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இறங்கி சோதனை மேற்கொள்ளப் பட்டதில் இதே போன்று கடல் தரை இல்லாத இன்னொரு பகுதியும் அறியப் பட்டிருக்கிறது..

குறிப்பாக ஆறு கிலோ மீட்டர் தடிமன் உள்ள கடல் தரை இருக்க வேண்டிய இடத்தில் மேண்டில் என்று அழைக்கப் படும் பூமியின் நடு உறைப் பகுதியில் காணப் படும் கரும் பச்சை நிற பாறை பல்லாயிரம் கிலோ மீட்டர் பரப்பளவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

ஆனாலும் சந்தேகப் படுவதை விட மேலும் பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடல் தரை இல்லாமல் இருக்கலாம் என்று சவுத் ஹாம்ப்டன் கடல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ராம்லே முர்டன் தெரிவிக்கிறார்.

இதே போன்று மூன்றாவதாக ஒரு இடத்திலும் கடல் தரை இல்லாத பகுதி இருக்கலாம் என்றும் சந்தேககிக்கப் படுகிறது.



இந்தக் கண்டு பிடிப்பானது கடல் தரை உருவாகி நகரும் பொழுது கடல் தரை கிழிந்து விட்டதா அல்லது கடல் தரை உருவாகாமலேயே இருந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது என்று டாக்டர் ப்ராம்லே முர்டன் தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கண்டங்களின் தோற்றம் குறித்த ஆய்வே  திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கிறார்.

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் கடல் தரையே இல்லாமல் இருப்பது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் கடல் தரை எதிரெதிர் திசை நோக்கி நகர்வதாகவும் அந்த இடத்தில்  வெற்றிடத்தை நிரப்ப பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டு உருவாகிறது என்ற விளக்கத்தை கேள்விக் குறியதாக்கி விட்டது.



அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைத் தீவுகள் காணப் படுவதைப் போலவே  வட துருவப் பகுதியில் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் அமைந்து இருக்கும் கேக்கல் என்ற கடலடி மலைத் தொடரிலும் அதிக தொண்மையான பாறைகள் இருப்பதுக் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

.குறிப்பாக கிரீன்லாந்து தீவிற்கு வடக்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு இருக்கும் கேக்கல் மலைத் தொடரானது மத்திய கடலடி மலைத் தொடரின் தொடர்ச்சியாக கருதப் படுகிறது.

அத்துடன் கேக்கல் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி ஆண்டுக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கருதினார்கள்.

எனவே கேக்கல் கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பாறைகளின் தொன்மையானது குறைவாக இருக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

அத்துடன் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஞ்சியா போன்ற சூப்பர் கண்டங்கள் உருவாகி மறுபடியும் பிரிந்து நகர்ந்து மறுபடியும் ஒரு பெருங்கண்டமாக உருவாகின்றன என்றும் புவியியல் வல்லுனர்கள் கருதினார்கள்.

இதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இருக்கும் கடல் தரையில் தொன்மையானது அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

ஆனால் கேக்கல் கடலடி மலைத் தொடரில் ஹவாய் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனதன் ஸ்னோ என்ற புவியியல் வல்லுநர் தலைமையில் சீனா,ஜெர்மன் மற்றும் அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் கேக்கல் மலைத் தொடர் பகுதியில் இருந்து ஆயிரம் பவுண்ட் எடையுள்ள பாறைகளை சேகரித்தனர். அதன் தொண்மையை மதிப்பிட்டதில் அவைகள் இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையானதாக இருந்தது.

இதே போன்று பூமிக்கு அடியில் மேண்டில் பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற்பகுதிக்கு குளிர்ந்து இறுகி மறுபடியும் அடிபகுதிக்கு செல்வதாகவும் அதனால் பாறைக் குழம்பு சுழன்று கொண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.

இந்த நிலையில் கேக்கல் கடலடி மலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளின்  வேதிச் சேர்மானமானது மற்ற பகுதியில் இருப்பது போன்ற வேதிச் சேர்மானம் போன்று இருக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

ஆனால் கேக்கல் கடலடி மலைத் தொடர் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் வேதிச் சேர்மாணமானது மிகவும் தனித் தன்மையுடன் இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படியில் பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு சுழன்று கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரை நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை என்பது தெரிய வந்திருக்கிறது.

எனவே சூப்பர் கண்டங்கள் என்பது உண்மையில் சூப்பர் கற்பனையே.


மேலும் கேக்கல் கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிதாக கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்பினார்கள்.

இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்கள் நெருங்கி அமேசியா என்ற சூப்பர் கண்டம் உருவாகும் என்று யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராஸ் மிட்செல் என்ற புவியியல் வல்லுநர் கணிப் பொறி மாதிரி செயல் முறை மூலம்  கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.


இதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளில் தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா அல்டிமா என்ற சூப்பர் கண்டம் உருவாகும் என்று நாசா இணைய தளத்தில் சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் ஸ்கோடிஸ் என்ற புவியியல் வல்லுநர் கணிப்பு தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பாஞ்சியா போன்றே ரோடினா, உர், கொலம்பியா, என ஐந்து அல்லது ஆறு சூப்பர் கண்டங்கள் இது வரை உருவாகி பிரிந்திருக்கின்றன என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பது கண்டங்களுக்கு இடையில் அதிக தொண்மையுள்ள பாறைகள் காணப் படுவது மூலம் தெரிய வந்திருக்கிறது.

பாபின் தீவுப் பாறையும் பாறைக் குழம்பு சுழற்சியும்.

பூமியில் பல இடங்களில் இரண்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு ஒன்றன் மேல் ஒன்றாக பல அடுக்குப் பாறைத் தட்டுகளை அடுக்கி வைத்தது போன்ற அமைப்பில் மலைகள் உருவாகி இருக்கின்றன.

உதாரணமாக இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள தக்காண பீட பூமிப் பகுதியில் ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இரண்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படும் படிக் கட்டு பாறை மலைகள் உருவாகி இருக்கின்றன.

இதே போன்று மஹாராஷ்டிராவில் உள்ள சாயாத்ரி மலையானது வட அமெரிக்காவில் கொலராடோ பீட பூமிப் பகுதியில் உள்ள அடுக்குப் பாறை பள்ளத் தாக்கான கிராண்ட் கண்யன் போன்ற அமைப்பில் உருவாகி இருக்கிறது.இதன் அடிப்படையில் சாயாத்ரி மலையானது இந்தியாவின் கிரான்ட் கண்யன் என்றும் அழைக்கப் படுகிறது.

 

(சாயாத்ரி- இந்தியாவின் கிரான்ட் கண்யன்)


(டெக்கான் ட்ராப்ஸ் சைபீரியன் ட்ராப்ஸ், கிரீன்லாந்து அடுக்குப் பாறை )

இந்த அடுக்குப் பாறை மலையில் இரண்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு  பாறைத் தட்டுகள் எப்படி உருவாகின?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாக குளிர்ந்து இருகி பாறைத் தட்டாக உருவாகி மேல் நோக்கி உயர்ந்ததால் அடுக்குப் பாறைத் தட்டு மலைகள் உருவாகின.

தக்காண பீட பூமிப் பகுதியில் பசால்ட் என்று அழைக்கப் படும் கடப்பாக் கல்லால் ஆன பாறைத் தட்டுகளால் ஆன அடுக்குப் பாறை மலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக கடல் தரையானது நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.

இந்த நிலையில் தக்காணப் பீட பூமி பகுதியில் உள்ள அடுக்குப் பாறை மலையானது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை மையத்த்தில் இருந்து வெளிவந்து பாறைக் குழம்பு பூமியின் மேற் பகுதியில் வழிந்ததால் உருவானது என்று கருதப் படுகிறது.

அதன் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வளி மண்டலத்தில் பெரும் அளவில் விஷ வாயுக்கள் கலந்து மாசு ஏற்பட்டு டைனோசர்கள் போன்ற விலங்கினமே அழிந்ததாகவும் கருதப் படுகிறது.

ஆனால் இரண்டு கிலோமீட்டர் உயரத்திற்கு அடுக்குப் பாறைத் தட்டுகள் எரிமலைக் குழம்பு வழிந்து படிந்து உருவாக சத்தியம் இல்லை.மேலும் இது போன்ற அடுக்குப் பாறை மலைகள் பெரும் பாலும் பீட பூமிப் பகுதியிலேயே அமைந்து இருப்பது, இந்த மலைகள் பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

உதாரணமாக ஆசியக் கண்டத்தில் ரஷ்யாவில் சைபீரியப் பீடபூமிப் பகுதியில் இருபது லட்சம் சதுர கிலோ மீட்டர் பரபளவில் பசால்ட் பாறைத் தட்டுகள்  இரண்டு கிலோ மீட்டர உயரத்திற்கு உயர்ந்து காணப் படுகின்றன.

சைபீரியா அடுக்குப் பாறை அமைப்பானது இருநூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக மதிப்பிடப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் இருநூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெர்மியன் கால கட்டத்தில் வாழ்ந்த ஊர்வன வகை மற்றும் கடல் உயரினங்களின் பேரழிவிற்கு சைபீரிய பீட பூமிப் பகுதியில் நிகழ்ந்ததாக நம்பப் படும் எரிமலைக் குழம்பின் செயல் பாடு காரணமாக இருக்கலாம் என்று  கருதப் படுகிறது.







(அடுக்குப் பாறை மலைகள் அமைந்து இருக்கும் பீட பூமிப் பகுதிகள்)

தென் அமெரிக்கக் கண்டதிலும் பரானா பீட பூமிப் பகுதியில் ஐம்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொண்மையான பசால்ட் அடுக்குப் பாறைகள் இரண்டு கிலோமீட்டர் உயரத்திற்கு உயர்ந்து இருக்கின்றன.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த வில்லியம் டி ஸ்டான்லி மற்றும் ராபர்ட்டோ அன்டோனியோ என்ற இரண்டு புவியியல் வல்லுனர்கள் மேற்கொண்ட காந்தவியல் ஆய்வில் பரானா பீட பூமிப் பகுதியில் தரைக்கு மேலே இரண்டு கிலோமீட்டர் உயர்ந்து இருக்கும் அடுக்குப் பாறை மலையானது தரைக்கு அடியில் ஆறு கிலோமீட்டர் ஆழம் வரைக்கும் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே அடுக்குப் பாறை மலை அமைப்புகள் பூமிக்கு அடியிலேயே பாறைக் குழம்பு படிப் படியாக குளிர்ந்து இறுகியதால் பாறைத் தட்டாக உருவாகி பூமிக்கு மேல் உயர்ந்திருப்பது நிரூபணமாகிறது.

இந்த நிலையில் வட துருவப் பகுதியில் உள்ள பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பகுதியில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பசால்ட் பாறைகளின்ல் கலந்துள்ள தனிமங்களின் சேர்மாணம் குறித்து கார்னகி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ ஜாக்சன் மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கார்ல்சன் ஆகிய புவி வேதியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் பாபின் மற்றும் கிரீன்லாந்து தீவுப் பாறைகளானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி பாறைக் குழம்பு கோளமாக கொதித்துக் கொண்டு இருந்த காலத்தில் இருந்த தொண்மை நிலையில் இருந்த பாறைக் குழம்பில் இருந்து அந்தப் பாறைகள் உருவாகி இருக்கின்றன என்று டாக்டர் மாத்யூ ஜாக்சன் தெரிவிக்கிறார்.

குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு பூமியின் மேற்பகுதிக்கு வந்ததும் அதிலிருந்து நீராவி, கரியமில வாயுக்கள் உள்பட பல்வேறுபட்ட வாயுக்களும் வெளியேறி விடும்.

இவ்வாறு பூமிக்கு மேல் வந்த பாறைக் குழம்பில் இருந்து வாயுக்கள் வெளியேறுவது டீகேசிங் (Degassing)என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாக பாறைக் குழம்பில் இருந்து ஹீலியம் போன்ற இலேசான வாயுக்களும் வெளியேறி விடுவதால் எரிமலைப் பாறைகளில் ஹீலியம் போன்ற வாயுக்களானது வளி மண்டலத்தில் இருப்பதைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பகுதியில் இருந்த பாறைகளில் ஹீலியம் -3 என்று அழைக்கப் படும் வாயு அதிக அளவில் இருந்தது.

இதன் அடிப்படையில் பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பகுதியில் இருந்த பாறைகளில் டீ கேசிங் நடைபெற வில்லை என்று டாக்டர் ஜாக்சன் தெரிவிக்கிறார்.

இந்த கண்டு பிடிப்பும் அடுக்குப் பாறை மலைகளில் உள்ள அடுக்குப் பாறைத் தட்டுகள் பூமிக்கு அடியிலேயே பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால் உருவாகி மேல் நோக்கி உயர்ந்து இருப்பதையே நிரூபிக்கிறது.

மேலும் ஜாக்சன் குழுவினர் பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பாறைகளில் இருந்த ஈயத்தின் அடிப்படையில் அந்தப் பாறைகள் நானூற்றி  ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைக் குழம்பில் இருந்து உருவான பாறைகள் என்றும் தெரிவிக்கிறார்.


(டாக்டர் ஜான்சனின் கையில் பாபின் தீவு தொண்மைப் பாறை)

குறிப்பாக பூமி போன்ற கிரகங்கள் விண்வெளியில் விண்கற்கள் போன்ற பாறைகள் ஒன்று சேர்ந்து உருவானதாகக் கருதப் பட்டது.அதன் அடிப்படையில் பூமியின் ஆதிகாலத்தில் உருவான பாறைகளில் விண்கற்களில் இருக்கும் அளவில் நியோடிமியம் என்ற தனிமம் இருக்கும் என்று கருதப் பட்டது.எனவே விண்கற்களில் இருக்கும் அளவில் பூமியில் தொண்மைப் பாறைகள் இதுவரை காணாப் படவில்லை. 

இந்த நிலையில் டாக்டர் ரிச்சர்ட் கார்ல்சன் 2005  ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பூமியில் விண்கற்களில் இருப்பதைக் காட்டிலும் இருபது சத வீதம் அதிக அளவில் நியோடிமியம் இருப்பதை கண்டறிந்தார்.

எனவே பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பாறைகளின் நியோடிமியம் தனிமத்தின் விகிதாச்சாரமும் மதிப்பிடப் பட்டதில் எதிர்பார்த்தபடியே விண்கற்களில் காணப் படுவதை விட அதிக அளவில் நியோடிமியம் இருந்தது.

இதன் அடிப்படையில் டாக்டர் ஜாக்சன் பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பாறைகளில் ஹீலியம் ,ஈயம் மற்றும் நியோடிமியம் ஆகிய மூன்று தனிமங்களும் சரியான விகிதத்தில் இருப்பது தற்செயலானது அல்ல என்று தெரிவிக்கிறார்.

குறிப்பாக பாபின் மற்றும் கிரீன்லாந்து தீவின் பாறைகளின் வேதிச் சேர்மாணமானது மிகவும் தனித் தன்மையுடன் இருப்பதாகவும் அதனால் பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவுப் பாறைகளை உருவாக்கிய தொண்மை நிலை பாறைக் குழம்பானது கடந்த நானூறு கோடி ஆண்டுகளாக பாபின் தீவிற்கு அடியிலேயே மற்ற பகுதிகளுடன் கலக்காமல் தூய நிலையில் தனித்து இருந்திருக்கிறது என்றும் டாக்டர் ஜாக்சன் தெரிவிக்கிறார்.

குறிப்பாக டாக்டர் ஜாக்சனின் இந்தக் கண்டு பிடிப்பும் பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு சுழன்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கதிற்கு முரணாக இருக்கிறது.

மேலும் டாக்டர் ஜாக்சன் இந்தியாவின் தக்காணப் பீட பூமிப் பகுதியில் உள்ள பாறைகளின் வேதிச் சேர்மாணம் உள்பட சைபீரியா, வட அமெரிக்காவின் கொலம்பியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பீட பூமிப் பகுதி பசால்ட் பாறைகளின் வேதிச் சேர்மாணத்தை பாபின் தீவு மற்றும் கிரீன்லாந்து தீவின் பாறையின் வேதிச் சேர்மாணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் அந்தப் பாறைகளின் வேதிச் சேர்மாணம் பாபின் மற்றும் கிரீன்லாந்து தீவின் தொண்மைப் பாறையின் வேதிச் சேர்மானத்தை ஒத்திருந்தது.

இதன் அடிப்படையில் டாக்டர் ஜாக்சன் இந்தியா ரஷ்யா அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் உள்ள பசால்ட் பாறைகளானது பூமிக்கு அடியில் பல கோடி ஆண்டுகளாக தங்கி இருந்த தொண்மைப் பாறைக் குழம்பில் இருந்து உருவான பாறைகள் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று சைபீரியப் பீட பூமியில் இருநூற்றி ஐம்பது கோடி ஆண்டு களுக்கு முன்பு உருவான பசால்ட் அடுக்குப் பாறை அமைப்பானது பல லட்சம் ஆண்டு கால கட்டத்தில் உருவாகி இருப்பது, பூமிக்கு அடியில் இருக்கும் மேண்டில் பாறைப் பகுதியானது சுழன்று கொண்டு இருக்கிறது என்பதற்கு முரணாக இருப்பதாக பிரிட்டனின் லெய்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆன்ட்ரூஸ் டி சாண்டர்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

எனவே பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு சுழன்று கொண்டு இருக்க வில்லை.ஆனால் பூமிக்கு அடியில் பாறைத் தட்டுகள் உருவாகி மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பது ஆய்வு முடிவுகள் மூலம் நிரூபணமாகிறது.

எனவே மேண்டில் என்று அழைக்கப் படும் பாறைக் குழம்பு பகுதிக்கு மேல் இருந்தபடி கடல்தரையும் கண்டங்களும் கண்டங்களும் நகர்ந்து கொட்னுன் இருப்பதாகக் கூறப் படும் விளக்கங்கள் முற்றிலும் கற்பனையே.

கண்டங்களும் கடல் தரையும் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே நிலையாக இருக்கின்றன.



எரிமலையால் உருவானது ஜப்பான் சுனாமி

 



(ஜப்பானில் நில அதிர்ச்சியினால் தரையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வை புலப் படுத்தும்  செயற்கைக் கோள் படம். சிவப்பு நட்சத்திரக் குறி நில அதிர்ச்சி மையத்தைக் குறிக்கிறது.ஒவ்வொரு வளையமும் ஐம்பது சென்டி மீட்டர் உயரத்தைக் குறிக்கிறது))

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் மார்ச் 11 /2011அன்று ரிக்டர் அளவில் 9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதற்கு முன்பு ஐரோப்பாவின் என்விசாட் செயற்கை கோளானது ஜப்பானுக்கு மேலே பிப்ரவரி 19 அன்று பறந்து சென்ற பொழுது ஜப்பான் தரைப் பகுதியை  படம் எடுத்தது அனுப்பியது.

அதே போன்று ஜப்பானில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்ட பிறகு மார்ச் மாதம் 21 அன்று ஜப்பானுக்கு மேலே கடந்து சென்றபோதும் தரைப் பகுதியை  படம் எடுத்து அனுப்பியது.இந்த இரண்டு படங்களையும் கணினி மூலம் ஒன்றாக தொகுத்து உருவாக்கப் பட்ட படத்தில் தரைப் பகுதியில் எண்ணூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐம்பது சென்டி மீட்டர் உயர மேடு பள்ள வளையப் பகுதி உருவாகி இருந்தது தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக நில அதிர்ச்சியினால் எரிமலையைச் சுற்றிலும் தரைப் பகுதியில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு வளையங்கள் நில அதிர்ச்சியின் காரணமாக ஜப்பானின் தரைப் பகுதியிலும் ஏற்பட்டு இருப்பது எரிமலை உயர்ந்ததால்தான் ஜப்பானின் கடல் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதை உறுதிப் படுத்துகிறது.

அந்த நில அதிர்ச்சியின் பொழுதும் அதற்கு பிறகு ஏற்பட்ட பல தொடர் நில அதிர்ச்சிகளின் பொழுதும் ஜப்பானில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்னத் ஹட் நட் என்ற புவியியல் வல்லுநர், ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதியில் நிறுவப் பட்டு இருந்த ஒரு செயற்கைக் கோள் நிலையம் எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இருந்தது என்று கூறி அதன் அடிப்படையில் ஹோண்சு தீவே எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து விட்டது என்று அறிக்கை வெளியிட்டார்.

குறிப்பாக ஜப்பானில் எண்ணூறு நில அதிர்ச்சி ஆய்வு மையங்கள் உள்ளன.அத்துடன் ஆயிரத்தி இருநூறு செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் நிறுவப் பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில்தான் டாக்டர் கென்னத் ஹட் நட் ஹோண்சு தீவின் வட மேற்கு பகுதியில் இருந்த ஒரு செயற்கைக் கோள் தொடர்பு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருந்ததாகக் கூறி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

உடன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரெய்னர் கைன்ட் என்ற நிலநடுக்கவியல் வல்லுநர் ஜப்பான் தீவில் உள்ள மற்ற செயற்கைக் கோள் நிலையங்கள் பற்றிய விபரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்காமல் ஒரே ஒரு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருப்பதன் அடிப்படையில் எப்படி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டது என்று கருத முடியும் என்று கேள்வி எழுப்பி டாக்டர் கென்னத் ஹட் நட் கூறிய விளக்கத்தை  ஏற்கவில்லை.

மேலும் டாக்டர் ரெய்னர் கைன்ட் அவர்கள் டாக்டர் கென்னத் ஹட் நட் கூறியது ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் இன்று வரை ஹோண்சு தீவின் மற்ற செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரோன்ஜியாங் வாங் மற்றும் தாமஸ் வால்டர் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானில் உள்ள ஐநூறு செயற்கைக் கோள் நிலையங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ஜப்பான் தீவின் கிழக்குக் கடற் கரைப் பகுதி கிழக்கு திசையில் ஐந்து அடி நகர்ந்து விட்டது என்று தெரிவித்து இருகிறார்கள்.

இதே போன்று ஸ்டீபன் ஸ்டோபோலவ் என்ற புவியியல் வல்லுநர்  தலைமையிலான குழுவினர் கணிப் பொறி உதவியுடன் ஆய்வு செய்து ஜப்பான் எண்பத்தி எட்டு அடி வரை நகர்ந்து விட்டது என்றும் தெரிவித்து இருகின்றனர்.

முக்கியமாக ஜப்பானில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு நானூற்றுக்கும் அதிகமான முறை கடும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.எனவே செயற்கைக் கோள் நிலையங்களின் வேறுபட்ட வீதத்திலான இடப் பெயர்ச்சிக்கு நிலச் சரிவே காரணம் என்பது நிரூபணமாகிறது.

குறிப்பாக தொடர் நில அதிர்ச்சியால் ஜப்பான் குலுங்கிய பொழுது  சில மணி நேரத்தில் ஹோன்சு தீவின் மறு புறமான மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் நிகாட்டா என்ற நகரில் ஏற்பட்ட பயங்கர நில அதிர்ச்சியின் காரணமாக பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.



ஹோண்சு தீவுக்கு கிழக்கு பகுதியில் பசிபிக் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பசிபிக் கடல் தரை நகர்ந்து ஹோண்சு தீவிற்கு அடியில் சென்றதால் ஏற்பட்டது என்று விளக்கம் கூறப் பட்டது.



(படம்-ஜப்பான் தீவுப் பகுதியில் பல பாறைத் தட்டு தட்டுகள்.அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கப் படம்)

இந்த நிலையில் ஹோண்சு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடற் கரை நகரமான நிகாட்டாவில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது.குறிப்பாக அந்தப் பகுதியில் கடல் தரையோ கண்டத் தரையோ இருப்பதாக குறிப்பிடப் படாத நிலையில் நிகாட்டாவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்.





(படம் ஹோண்சு தீவுப் பகுதியில் சுடு நீர் ஊற்றுக்கள் அமைந்திருக்கும் இடங்கள்)

ஹோண்சு தீளில் அதிக எண்ணிக்கையில் சுடு நீர் ஊற்றுக்கள் காணப் படுகின்றன.இந்த சுடு நீர் ஊற்றுக்கள் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெளியிடப் படும் நீர்

குறிப்பாக ஜப்பானில் உள்ள மாட்சு சிரோ பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சி ஏற்பட்டது.அந்த நில அதிர்ச்சியின் காரணத்தை அறிவதற்காக டாக்டர் யோசித்தா என்ற புவியியல் வல்லுனர் அப்பகுதியில் இருந்த சுடு நீர் ஊற்றில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்தார்.அப்பொழுது அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெளிவந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.

எனவே ஜப்பானில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு எரிமலைச் செயல் பாடுகளே காரணம்.



முக்கியமாக நில அதிர்ச்சிகள் ஜப்பான் தீவுகளை சுற்றியும் ஏற்பட்டு இருக்கிறது.எனவே நில அதிர்ச்சிகளுக்கு எரிமலைகளே காரணம்



 பசிபிக் கடல் தரையில் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலை வரிசைத் தீவுகள்.  

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11  ஆம் நாள் ஜப்பானின் ஹோண்சு தீவிற்கு கிழக்கே பசிபிக் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து சுனாமி உருவானது.

ஹோண்சு தீவிற்கு அடியில் பசிபிக் கடல் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக பசிபிக் கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் உருவாகி ஜப்பான் தீவுகள் அமைந்து இருக்கும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கருதப் படுகிறது.

இந்தக் கருத்திற்கு ஆதாரமாக பசிபிக் கடல் தரையில் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி உருவாகி இருப்பது குறிப்பிடப் படுகிறது.

அதாவது பசிபிக் கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் தென் கிழக்குப் பகுதியில் கடல் தரைக்கு அடியில் இருந்த ஒரு எரிமலை வெப்ப மையத்தில் இருந்து வெளிப் பட்ட எரிமலைக் குழம்பு கடல் தரையைப் பொத்துக் கொண்டு கடல் தரைக்கு மேலே எரிமலையாக உருவானது என்று கருதப் படுகிறது.




இந்த நிலையில் கடல் தரை வட மேற்கு திசை நோக்கி நகர்ந்த பொழுது கடல் தரையின் மேல் இருந்த எரிமலையும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தது.


(படம்-பசிபிக் கடல் தரையில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையின் திசைக்கு மாறாக லைன் எரிமலைத் தீவு வரிசை வேறு திசையில் உருவாகி இருக்கிறது-)

அதே நேரத்தில் கடல் தரைக்கு அடியில் இருந்த எரிமலை மையத்திற்கு மேலே வந்த கடல் தரை மறுபடியும் எரிமலை வெப்ப மையத்தால் துளைக்கப் பட்டதால் கடல் தரைக்கு மேலே மறுபடியும் ஒரு புதிய எரிமலை உருவாகி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தது.இது போன்று தொடர்ச்சியாக நடைபெற்றதால் பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி வரிசையாக உருவானது என்று விளக்கம் கூறப் படுகிறது.

மேலும் பசிபிக் கடல் தரை இவ்வாறு தென் கிழக்கு திசையில் உருவாகி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பதே ஆதாரம் என்றும் குறிப்பிடப் படுகிறது.

ஆனால் பசிபிக் கடல் தரையில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையைப் போலவே பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவு வரிசைகள் உருவாகி இருக்கின்றன.

இந்த நிலையில் பசிபிக் கடல் தரையானது உண்மையில் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையைப் போலவே எல்லா எரிமலைத் தீவுகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் ஹவாய் எரிமலைத் தீவுகளுக்கு அருகில் உள்ள லைன் தீவு வரிசையானது ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.ஹவாய் எரிமலைத் தீவுகளைப் போல் தென் கிழக்கு திசை நோக்கி உருவாகாமல் சற்று தெற்கு திசை நோக்கி உருவாகி இருக்கிறது.

இதே போன்று லூயிஸ் வில்லி என்ற எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகியிருக்க வில்லை.எனவே உண்மையில் பசிபிக் கடல் தரை நிலையாக இருப்பதையே பசிபிக் கடல் தரையில் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள் மூலம் நிரூபணமாகிறது.

இந்த நிலையில் பசிபிக் கடல் தரையில் வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் ஹவாய் தீவிற்கு அடுத்த படியாக கடலுக்கு அடியில் லோகி என்ற எரிமலை உருவாகி இருக்கிறது.ஆனால் லோகி எரிமலியானது ஹவாய் தீவிற்கு தென் கிழக்குப் பகுதியில் உருவாகாமல் ஹவாய் தீவிற்கு சற்று தெற்குப் பகுதியில் உருவாகி இருக்கிறது.

இவ்வாறு லோகி எரிமலை ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் இருந்து விலகி தெற்கு பகுதியில் உருவானதற்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது.அதாவது ஹவாய் எரிமலையும் லோகி எரிமலையும் ஒரே எரிமலைப் பிளம்பில் இருந்தே உருவாகி இருக்கிறது.ஆனால் எரிமலைப் பிழம்பானது பூமியின் மேற்பகுதிக்கு வரும் பொழுது கடல் தரையால் இரண்டாகப் பிரிக்கப் பட்டதால் லோகி எரிமலையானது வரிசையில் இருந்து விலகி உருவாகியது என்று விளக்கம் கூறப் பட்டது.

அதாவது ஒரு அடுப்பு ஆனால் இரண்டு திறப்பு என்று விளக்கம் கூறப் பட்டது.இதன் அடிப்படையில் ஹவாய் எரிமலையும் லோகி எரிமலையும் இரட்டை எரிமலைகள் என்று அழைக்கப் பட்டன.

இந்த நிலையில் ஹவாய் மற்றும் லோகி எரிமலைப் பறைகளின் வேதிச் சேர்மாணங்கள் ஒப்பாய்வு செய்யப் பட்டதில் அவைகள் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

இதன் அடிப்படையில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிசுன் ஹுவாங் என்ற புவியியல் வல்லுனர் வட பகுதியில் இருக்கும் ஹாவாய் தீவும் தென் பகுதியில் இருக்கும் லோஹி தீவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு தனித் தனி எரிமலைப் பிளம்புகளால் உருவாகிய தீவுகள் என்று தெரிவித்து இருகிறார்கள்.

குறிப்பாக பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கருதப் பட்ட நிலையில் வட மேற்கு திசையில் உள்ள ஹாவாய் எரிமலையின் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் தெற்கு பகுதியில் உள்ள லோகி எரிமலையின் வேதிச் சேர்மாணமும் வேறு பட்டு இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.

முக்கியமாக ஹவாய் எரிமலைப் பாறைகளின் வேதிச் செர்மாணத்தை ஆய்வு செய்ததின் அடிபடையில் ஹவாய் தீவின் பாறைக் குழம்பானது பூமியில் ஆயிரத்தி எண்ணூறு கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து மேற் பகுதிக்கு வரும் பாறைக் குழம்பு என்று புவிவேதியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அருகருகே அமைந்து இருக்கும் ஹவாய் எரிமலையின் வேதிச் சேர்மாணம் கூட வேறு பட்டு இருப்பது பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு சுழன்று கொண்டு இருக்கிறது என்ற கருத்தாக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.

இந்த நிலையில் பசிபிக் கடல் தரையில் அமைந்து இருக்கும் சமோவா மற்றும் மார்கோசஸ் எரிமலைத் தீவு வரிசையிலும், ஹவாய் தீவில் காணப் படுவதைப் போலவே அருகருகே அமைந்து இருக்கும் எரிமலைத்  தீவுகளின் வேதிச் சேர்மாணம் வேறு பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே பசிபிக் கடல் தரையானது நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் உண்மையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்து.

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?