அண்ணா சாலையில் ஒரு கண்டு பிடிப்பு
கண்டங்கள் உயர்ந்து கொண்டு இருக்கின்றன.
தற்பொழுது நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் ஓரப் பகுதி செல்வதால் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவாகுவதாக அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் கூறப் படுகிறது.
உண்மையில் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பழைய புத்தக கடையில் புத்தகங்களை தேடிக் கொண்டு இருந்தேன்.அப்பொழுது கண்ணில் பட்ட ஒரு நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை (இதழ்-அக்டோபர் 1993)எடுத்துப் புரட்டிய பொழுது அதில் வெளியாகி இருந்த ஒரு புகைப் படம் ( படம்1) என் கவனத்தைக் கவர்ந்தது.
அதில் ஒரு மலையின் மேல் இரண்டு பேர் நின்று கொண்டு தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.அவர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடன் எனக்கு அந்த மலைப் பகுதி கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது புரிந்தது.
( படம்2)
அடுத்த பக்கத்தில் வெளியாகி இருந்த மற்றொரு படத்தில் சீனாவின் உள்நாட்டுப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பது பற்றியும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ( படம்2)
உடன் எனக்கு மலைப் பகுதியயைப் போலவே நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது.
என் கண்டு பிடிப்பை உறுதிப் படுத்திக் கொள்ள நான் இணைய தளத்தின் உதவியுடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இருக்கும் இடங்களைப் பற்றிய விபரங்களை சேகரித்த பொழுது, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ட்ரைலோபைட் என்ற கடல் உயிரினத்தின் புதை படிவங்கள் எழு கண்டங்களிலும் உள்ள மலைகள் பாலைவனம் உள்பட பரவலாக காணப் படுவது பற்றி அறிந்தேன்.
(கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள்.கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து கொண்டு இருப்பதை புலப் படுத்தும் ஆதாரம்)(map courtesy-Department of Earth Sciences at University of Bristol)
எனவே கண்டங்கள் எல்லாம் பூமிக்கு அடியில் இருந்து குறிப்பாக கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதை அறிந்தேன்.
இந்த நிலையில் கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படும் நிலையில், தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்தது.
அதே போன்று தனித் தனிக் கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்க வில்லை என்பதும் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடத்தைக் குறித்து வரையப் பட்ட நில அதிர்ச்சி வரை படத்தின் மூலம் தெரிய வந்தது.
எனவே நில அதிர்ச்சிக்கு கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதால்தான் ஏற்படுகிறது. என்ற விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பது தெரிய வந்தது.
மேலும் நில அதிர்ச்சியானது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படும் நிலையில் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு இருக்கும் நிலையில் நில அதிர்ச்சியானது சுற்றுவட்டப் பகுதியைச் தவிர்த்து மத்தியப் பகுதியில் மட்டும் ஏற்படுவதும் நில அதிர்ச்சிக்கு கூறப் படும் கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் தவறு என்பதும் தெரியவந்தது.
முக்கியமாக கண்டங்கள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படும் நிலையில் கண்டங்களின் மத்தியப் பகுதியிலும் நில அதிர்ச்சி ஏற்படுவது, கண்டத் தட்டு கருத்தாக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பதுடன் நில அதிர்ச்சிக்கு கூறப் படும் தவறான விளக்கம் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள்கள் மூலம் எரிமலைகள் கண்காணிக்கப் பட்ட பொழுது, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு நுழைவதாலும், எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறுவதாலும் எரிமலைகள் உயர்ந்து இறங்குவதுடன் எரிமலையை சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறக்குவதால் எரிமலையைச் சுற்றி பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு வட்ட வடிவில் சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வு உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
இதே போன்று தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப் பட்டதில் ,ஹோண்சு மற்றும் ஹைத்தி தீவுகளில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.