மத்திய அமெரிக்காவில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு எரிமலைகளே காரணம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில் ஒரு பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது. அந்த நிலப் பகுதியில் உள்ள கவுதமாலா, ஹோண்டு ராஸ் ,கோஸ்டா ரிகா,மற்றும் பனாமா போன்ற நாடுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு அடியில் கோகோஸ் என்று அழைக்கப் படும் கடல் தட்டு உரசியபடி நகர்ந்து செல்வதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மலைத் தொடர் தெற்கு வடக்காக அமைந்து இருக்கிறது.அந்த கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு தென் மேற்கு திசையில் கோகோஸ் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இந்த வகையான விள...