ஆப்பிரிக்கக் கண்டம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது?விஞ்ஞானி.க.பொன்முடி.



Age of oceanic crust. The red is most recent, and blue is the oldest.

............................................................................

தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடல் தரையின் மேல் வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட கடலடி மலைத் தொடர் ஒன்று அமைந்து இருக்கிறது.

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருந்து பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகியதால் அந்த மலைத் தொடர் உருவானது என்று விளக்கம் கூறுகின்றனர்.


குறிப்பாக அப்பகுதியில் புதிதாக கடல் தளப் பாறைகள் தொடர்ந்து உருவாகி இருபுறமும் விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும், கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.(குறிப்பு.1)



தங்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் கடல் தளப் பாறைகளின் தொன்மையைக் குறிப்பிடுகின்றனர்.

அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள பாறைகள் தொண்மை குறைவாகவும் மத்தியப் பகுதியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு திசையில் தொலைவில் உள்ள பாறைகள் அதிக தொன்மையுடன் இருப்பதாகவும் தெரிவிகின்றனர்.


இதன் அடிப்படையில் புதிய கடல் தரை மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி விரிவடைந்து கிழக்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதால்தா மத்தியப் பகுதியில் உள்ள பாறைகள் தொண்மை குறைவாகவும், தொலைவில் உள்ள பாறைகள் அதிக தொன்மையாகவும் இருக்கின்றன என்று விளக்கம் கூறுகின்றனர்.

புதிதாக கடல் தரை உருவாகி விரிவடைந்து கொண்டு இருபதாகக் கூறப் படும் பகுதியை கடல் தரை விரிவுப் பகுதி என்று அழைக்கப் படுகிறது.


கடல் தளப் பாறைகளின் தொன்மையைக் குறிப்பிடும் வரை படம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.(வரை படம்)


அந்த வரை படத்தில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதைப் போன்றே கடல் தரை விரிவுப் பகுதியானது தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு மட்டுமல்லாது ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் அமைந்திருகிறது.

இதன் அடிப்படையில் சில ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிரிக்கக் கண்டமானது வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்து இருகிறார்கள்.(குறிப்பு.2)

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியிலும் கடல் தரை விரிவடைந்து கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும்''தென் மேற்கு கடல் தரை விரிவுப் பகுதி'' என்று அழைக்கப் படும் கடல் தரை விரிவுப் பகுதியானது மெதுவாக விரிவைந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருகிறார்கள்.(குறிப்பு.3)


ஆக மொத்தம் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப் படி ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றிலும் கடல் தரையானது விரிவடைந்து எதிரெதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.



அப்படியென்றால் உண்மையில் ஆப்பிரிக்கக் கண்டம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது?


மேலும் கடல் தரை விரிவடைந்து கொண்டு இருப்பதால்தான் கடல் தரையின் மேல் உள்ள கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வது?


குறிப்புகள்:
#1

The result of the addition of new sea floor rock is that the Atlantic Ocean between these sets of continents is widening. North and South America move farther away from Eurasia and Africa each year.

http://www.beloit.edu/sepm/Earth_Works/Sea_floor_spreading.html

#2,
Africa has been slowly colliding with Europe for millions of years, Scotese said.

http://science.nasa.gov/science-news/science-at-nasa/2000/ast06oct_1/
#3,
. The southwest Indian ridge is a particularly intriguing region, as it is both the slowest-spreading of the main ridges.

http://www.nature.com/nature/journal/v395/n6701/abs/395490a0.html

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?