பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் நாசா ஆராய்ச்சியாளர்களால் அந்தக் கருத்தின் அடிப்படையில் இந்தோனேசியா சுனாமிக்கும் நில அதிர்ச்சிக்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு அப்பகுதியில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்திருந்தது.
அதே போன்று கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பும் ஆராய்ச்சியாளர்களால் கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நில அதிர்ச்சிக்குப் பிறகு தரைப் பகுதிகள் உயர்ந்து இருக்கின்றன.
எனவே தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.விஞ்ஞானி.க.பொன்முடி
Comments