ஆப்பிரிக்கக் கண்டம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது?விஞ்ஞானி.க.பொன்முடி.
Age of oceanic crust. The red is most recent, and blue is the oldest. ............................................................................ தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடல் தரையின் மேல் வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட கடலடி மலைத் தொடர் ஒன்று அமைந்து இருக்கிறது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருந்து பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகியதால் அந்த மலைத் தொடர் உருவானது என்று விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் புதிதாக கடல் தளப் பாறைகள் தொடர்ந்து உருவாகி இருபுறமும் விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும், கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.(குறிப்பு.1) தங்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் கடல் தளப் பாறைகளின் தொன்மையைக் குறிப்பிடுகின்றனர். அதாவது அட்லாண்டி...