பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதை முன்னறிவிக்கும் மகாபலிபுரக் கடலடிக் கோவில்கள்.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. ஸ்டீகோ டோன்ட் என்று அழைக்கப் படும் தற்கால யானைகளின் மூதாதை யானைகள் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன.இன்று இந்த ஸ்டீகோ டோன்ட் யானையின் எலும்புப் புதை படிவங்கள் உலகில் பல இடங்களில் காணப் படுகின்றன. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் சீன ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா தென் அமெரிக்காவிலும் காணப் படுவதுடன், இந்தோனேசியத் தீவுகளான சுமத்ரா ஜாவா சுலாவெசி புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன. ஆனால் புளோரஸ் தீவை அடைய வேண்டும் என்றால் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் பகுதியைக் கடக்க வேண்டும்.அத்துடன் லம்போக், ஸ்ட்ரைட் என்று அழைக்கப் படும் இரண்டு கடல் நீரோட்டப் பகுதிகளையும் கடந்தாக வேண்டும். மேலும் புளோரஸ் தீவில் இருந்து திமோர் தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஓம்பை என்று அழைக்கப் படும் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் நீரோட்டப் பகுதியைக் கடக்க வேண்டும். மேலும் திமோர் தீவு மூவாயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.(பத்தாயிரம் அடி ). இதன் அடிப்படையில் ,டி .எ .ஹூய்ஜர் என்ற ...