துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதைபடிவங்கள் நீண்டகாலப் புதிர் விடுவித்தல்.
Dots தற்பொழுது அறிவியல் உலகில் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு விடை காண இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டு இருந்த நிலையில், தற்பொழுது இறுதி கட்ட முயற்சியாக, தலை கீழாக நடந்து கொண்டு யோசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கேள்வி - ஒன்று. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைபடிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு காரணம் என்ன? கேள்வி- இரண்டு. வெப்ப மண்டலக் கால நிலையில் காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, துருவப் பகுதிகளில், காணப் படுவதற்கு காரணம் என்ன? 0000000000000000000000000000000000 பூமியானது தன் அட்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதால், துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகலும், அதே போன்று, ஐந்து மதங்கள் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இந்த நிலையில் வட துருவப் பகுதியில் இருந்து எழுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபர்க் என்ற தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்க...