Naration
Narration ஆர்க்டிக் பகுதி புதை படிவப் புதிர்களுக்கு விடை என்ன? கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே ...