earth files
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
மே ட் சி ங் கோ ஸ் ட் லை னு ம், ஐ டெ ன் டி க் க ள் பா சி ல் ஸ் க ளு ம் . கா ர ண ம் எ ன் ன?
அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி அறிவியல் உலகில் இடம் பிடித்தது?
1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது.
அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார்.
இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று, ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப் படியாக, பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும், ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது.
அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது.
அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது, சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது, மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும், அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள்.
இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர், ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது, தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
குறிப்பாக கண்டங்களானது, இலேசான கிரானைட் வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர்.
ஆனால் கடல் தளமானது அதிக கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர்.
அதன் அடிப்படையில்,வெக்னர்,கண்டங்களானது, இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருந்தால், அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக கனமான கடல் தரைக்குள் மூழ்கி இருக்க இயலாது.
அவ்வாறு இன்றி தற்காலிக நிலப் பலமானது, அதிக கனமான கடல் தள பாறையால் ஆகி இருந்தால், அந்த பாலமானது, கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது,
எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார்.
ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள்.
இந்த நிலையில் ஆக்ரோஷமான கடலால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
இந்த விலங்குக்கு பற்களுக்குப் பதிலாக யானையை போன்று தந்தங்கள் மட்டுமே உண்டு.அதன் அடிப்படையில் இந்த விலக்கானது தரைக்கு அடியில் இருக்கும் கிழங்கு மற்றும் வேர்களை தோண்டி எடுத்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களானது ஏற்கனவே இந்தியா, சீனா, ரஸ்யா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சைனோ நேதஸ் என்ற விலங்கின் .புதை படிவங்களும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இந்த விலங்கின் பல்லானது நாயின் பல்லை போன்று இருப்பதால் சைனோ நேதஸ் என்று அழைக்கப் படுகிறது.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு 'மந்தமான விலங்கால்' கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி கடலில் தத்தளித்தபடி ஆக்ரோஷமான கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது.
எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் தரை, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் கட்சிதமாகப் பொருந்த வில்லை.
ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒரப் பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்தார்.பிறகு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து குறித்து ஆராய்ச்சி செய்த பொழுது, ‘விரிவடையும் பூமி’ கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.
அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார்.
அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார்.
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.
விரிவடையும் கடல் தளம்
இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர் ,நில அதிர்ச்சி அலைகள் பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக் கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பணி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார் அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன், அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரை படத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது, ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
000000000000000000000000000000000
000000000000000000000000000000000
எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது.
இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
கடல் தளம் தொடர்ச்சியாக இருக்கிறது கண்டங்கள் நிலையாக இருக்கிறது.
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.
முதல் ஆதாரம்
கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில், இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரவலாக வாழ்ந்த தாவர உண்ணி வகை டைனோசரான, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும், பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த, டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர், அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து, எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில், ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதே போன்று, கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர். அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது. எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள். அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார். ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார். எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை.
எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார். அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார். பேலியோ டிக்டைன் என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது, முதன் முதலில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும், அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று கலா பாகாஸ் தீவுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்த்து பல்லாயிரம் அடி ஆழத்தில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
காலபாகஸ் தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் கடலடி மேட்டுப் பகுதியில் பேலியோடிக்டின் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம் ஆகிறது.அத்துடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த காரணத்தாலேயே கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த நீலத் தொடர்பு வழியாகவே ராட்சத ஆமைகள் மற்றும் இக்குவானாக்கள் போன்ற விலங்கினங்களும் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார். டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார். ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் படிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை. குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது. ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும் கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும். அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும். குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில்,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு,சூரிய ஒளியில் காய்ந்து,காலப் போக்கில், இறுகி புதை படிவங்களாக உருவாக்குகின்றன.எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த காலத்தில், கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து இருப்பதும் அதன் பிறகு, அதன் பிறகு, வெய்யில் காய்ந்து சேறும் சகதியும் பாறையாக உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும், பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இதே போன்று பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார்டிப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேவிட் எம் பக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும், கரீபியன் கடலடிப் பீட பூமி பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட எரிமலைப் படிவுகளின் வேதித் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டத்துக்கு மேலே இருந்ததாக தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அவ்வாறு கடல் மட்டத்துக்கு மேலே அந்தக் கடலடி பீட பூமி இருந்த பொழுது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்துக்கும் பயன் பட்டு இருக்கிறது, என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் இந்தக் கண்டு பிடிப்பானது, இதற்கு முன்பு பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ஒண்டாங் ஜாவா கடலடிப் பீட பூமி மற்றும் சாக்ஸ்டி கடலடிப் பீடப் பூமியும் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து, எரிமலைக் குழம்பைக் கக்கியதற்கு, ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த ஆதாரங்களுடன் ஒத்துப் போவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின்
வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதைப்படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில் பூமியானது சிறியதாக இருந்ததால் துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
ஆக மேட்சிங் கோஸ்ட் லைனுக்கும் ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும் காரணம் 'பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதே' காரணம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கடல் பூமிக்குள் இருந்தது வந்தது.
இந்த நிலையில்,ஜப்பானின் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் யோஷிதா ,ஜப்பானில் உள்ள மாச்சுஹிரோ நகரில் உள்ள சூடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்த பாறைக்கு குழம்பில் இருந்து வெளிவந்த நீர் (magmatic water) என்று தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நிலவில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அந்த நீரானது.நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீர், மேற்பகுதிக்கு வந்து பனிக் கட்டியாக மாறி இருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
பூமி ஏன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது?
ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள், புவியின் மேற்பகுதிக்கு வந்ததால், வளி மண்டலத்தின் அடர்த்தி அதிகமானது.இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறை அடுக்குகளானது மேல் நோக்கி உயர்கிறது. அதே போன்று பூமியின் உட்கருக் கோளமும் விரிவடைகிறது, இதனால் பூமியின் மேலோடு பிளவு பட்டு பிரிந்து விலகியது.இதனால் மேல் அடுக்கில் இடைவெளி ஏற்பட்டது .அந்த இடை வெளி வழியாக பூமிக்குள் இருந்த கடல்தளப் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானது அதவாது நமது மேல் தோலில் கீறல் ஏற்படும் பொழுது, அதன்வழியாக வெளியேறும் இரத்தமானது, உலர்ந்து இறுகி, ஒரு படலமாக உருவாகுவதைப் போன்று, பூமியின் மேலோடு விலகிப் பிரியும் இடத்தில் புதிய கடல் தளம் உருவாகுகிறது.
முக்கியமாக அட்லான்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகள் ஒன்றிற் கொன்று இணையாக இருப்பதை போன்றே,பிரிட்டிஷ் தீவுகள்,கரீபியன் தீவுகள்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா,பப்புவா நியூ கினியா,டாஸ்மேனியா,நியூசிலாந்து தீவின் வடக்கு மற்றும் தென் பகுதித் தீவுகளின் ஒரப் பகுதிகளும், ஒன்றிற் கொன்று இணையாக இருப்பது, பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே புலப் படுத்துகிறது.
000000000000000000000000000000000000000000000000000
தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும்,அடிப்படை இல்லாத கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில், தெற்காசிய சுனாமிக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்களால், விளக்கம் கூற இயல வில்லை.
000000000000000000
Comments