எனது புத்தகத்தின் முதல் அத்தியாயம்.
எனது புத்தகத்தின் முதல் அத்தியாயம்.
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
00000000000
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு உருவான, நிலஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வுக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரமற்ற விளக்கத்தை தெரிவித்து, உலகை ஏமாற்றி இருக்கின்றனர்.
அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள .ஹைத்தி தீவில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வுக்கு என்று அழைக்கப் படும் அமெரிக்க ஐக்கிய புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடிப்படை ஆதாரமற்ற விளக்கத்தை தெரிவித்து உலகை ஏமாற்றி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த நிகழ்வுகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சற்று விரிவாக ...
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அத்துடன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, வெவ்வேறு வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.. அதிலும் குறிப்பாக, இந்தியக் கண்டமானது, மிக வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகம் முழுவதும் ஏற்பட்ட, 3,58,214 நில அதிர்ச்சிகள், ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் வரை படம் ஒன்றைத் தயாரித்தனர்.
அந்த வரை படத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில்,இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்சிகள் ஏற்பட்டிருக்க வில்லை. இந்த நிலையில், அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி, இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால், இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த இரண்டு விளக்கங்களில், எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும், நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட முதல் அறிவிப்பு
(The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together)
இந்த நிலையில்,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான், தெற்காசிய சுனாமி, ஏற்பட்டது என்று நாசாவுக்கு தெரிவித்து இருக்கின்றனர்.
நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பு, ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)
ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அதே போன்று,கடந்த 12.01.2010 அன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு, இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, .ஹைத்தி தீவில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமியில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால்,அந்த கரீபியன் பாறைத் தட்டானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா, அல்லது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வில்லை.
அதனால்,குறிப்பாக அந்த கரீபியன் பாறைத் தட்டு, எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாக கூறாமல்,''கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது'' என்று மிகவும் சாமார்தியமாக ஒரு விளக்கத்தைக் கூறி,தங்களின் அறியாமையை மறைத்து, உலகை ஏமாற்றி இருக்கின்றனர்.
( The USGS reported that the earthquaks occurred along the boundary between the Caribbean and north America plates.the two tectonic plates meet at a strike-slip fault,with the Caribbean plate moving eastward with respect to the North America plate)
முக்கியமாக, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட, 'உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்' மூலம்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு, காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில், நார்வே நாட்டுக் கடல் பகுதியில், எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள, கடல் தரையைத் துளையிட்ட பொழுது, கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில், இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரவலாக வாழ்ந்த, தாவர உண்ணி வகை டைனோசரான, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும், பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடக்கும், கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது, என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த, டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர், அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின், மத்தியப் பகுதியில் இருந்து, எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்தனர்,அப்பொழுது அந்த படிவுகளில், ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில், அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக, ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து, மேற்பகுதிக்கு வந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்,கண்டங்களின் மேலும் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
இவ்வாறு கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும்,கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம்,கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம்,பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
பூமி ஏன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது?
ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள், புவியின் மேற்பகுதிக்கு வந்ததால் வளி மண்டலத்தின் அடர்த்தியும் அதிகமானது.இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து, நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளின் அடர்த்தியானது, குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும், அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறை அடுக்குகளானது,கடல் நீர்ப் பரப்புக்கு மேலாக உயர்கிறது. அதே போன்று பூமிக்குள் இருக்கும் பாறைக் கோளமானது, மேல் நோக்கி உயர்வதால், பூமியின் மேலோடு பிளவு பட்டு பிரிந்து விலகியது.இதனால் மேல் அடுக்கில் இடைவெளி ஏற்பட்டது .அந்த இடை வெளி வழியாக பூமிக்குள் இருந்த கடல் தளப் பாறைக் குழம்பு, மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானது. அதவாது நமது மேல் தோலில் கீறல் ஏற்படும் பொழுது, அதன் வழியாக வெளியேறும் இரத்தமானது, உலர்ந்து இறுகி, ஒரு படலமாக உருவாகுவதைப் போன்று, பூமியின் மேலோடு விலகிப் பிரியும் இடத்தில், புதிய கடல் தளம் உருவாகுகிறது.
பர்மா நில அதிர்ச்சிக்கு பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம்.
இந்திய நிலப் பகுதி மற்றும் யுரேசிய நிலப் பகுதிகளானது பர்மாவுக்கு அடியில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பர்மா பகுதியில் நிலத்தில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாக நம்புகின்றனர். இவ்வாறான நிலப் பகுதிகளின் நகர்ச்சியால் பர்மா நில முறிவுப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.குறிப்பாக இந்தக் கருத்தின் படி இந்திய நிலப் பகுதியானது, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பெருங் கடலில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. எனவே கண்டங்களின் நகர்ச்சியால் பர்மாவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது, அடிப்படை ஆதாரமில்லாத விளக்கம் ஆகும்.
பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குக்கிறேன்.
பூமியின் மையமானது ஒரு அடர்த்தியான வெண்ணெய்யால் ஆன கோளம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனைச் சுற்றிலும் கிரீம் பிஸ்கெட்டில் அல்லது கேக்கில் இருக்கும் கிரீம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மேற்புறமானது பொறுக்கு போன்ற பிஸ்கெட்டால் ஆனது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது மையக் கோளம் விரிவடைவடைந்தால் என்ன ஆகும்.அதனை சுற்றி இருக்கும் கிரீம் போன்ற பகுதி விரிவடையும்.அதனால் அதனை சுற்றி இருக்கும் மேற்புற பொறுக்கு போன்ற பிஸ்கெட் பகுதியானது உடைந்து சிதறி பல பகுதிகளாக பிரிந்து,ஒன்றில் இருந்து ஒன்று விலகும்.இதனை கண்டங்களாக கற்பனை செய்து கொள்ளலாம்.அதற்கு அடுத்த அடுக்காக இருக்கும் கிரீமை, கடல் தளமாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படித்தான் நமது பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.குறிப்பாக மேற்பகுதி விரிவடையும் பொழுது, அதில் ஏற்படும் பிளவுகள் மற்றும் இங்கு இடுக்குகள் வழியாக, பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக் குழம்பால் நிரப்பப் படும் பொழுது, மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பால், பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் மேலும் பாறைக் குழம்பு உயரும் பொழுது, எரிமலையாக வெடித்து வெளியேறுகிறது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிக்கும் பொழுது சுனாமி அலைகள் உருவாகுகிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதால் விரிவடைகிறது.குளிரும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணையும் வெளியேறுகிறது.வெளியேறிய நீரால் கடல் உருவானது. வெளியேறிய வாயுக்களால் வளி மண்டலம் உருவானது.
முக்கியமாக அட்லான்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகள் ஒன்றிற் கொன்று இணையாக இருப்பதை pபோலவே ,பிரிட்டிஷ் தீவுகள்,கரீபியன் தீவுகள்,இந்தோனேசியாதீவுகள்,பிலிப்பைன்ஸ் தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா,டாஸ்மேனியா,நியூசிலாந்து தீவின் வடக்கு மற்றும் தென் பகுதித் தீவுகளின் ஒரப் பகுதிகளும் ஒன்றிற் கொன்று இணையாக இருப்பது, பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே புலப் படுத்துகிறது.
தற்பொழுது, அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை, மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
குறிப்பாக, ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, 12 இன வகை டைனோசர்களின் புதை படிவங்கள், மிகவும் இள வயது
டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
ஏனென்றால், கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில், டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா பகுதிகளானது ,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து
வந்து விட்டது.
எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்கள் எப்படி வட துருவப் பகுதியில் வாழ்ந்தன,அடர்ந்த காடுகள் எப்படி வளர்ந்தன.
குறிப்பாக, பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் ஆர்க்டிக் பகுதியில் எப்படி வளர்ந்தன, என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத, ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின்
வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில் பூமியானது சிறியதாக இருந்ததால் துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட, குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து, இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப்
படும்.
000000
சில கேள்விகள் ...
தெற்காசிய சுனாமிக்கு நாசா ஏன் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை தெரிவித்த நிலையில், சரியான விளக்கத்தை ஏன் தெரிவிக்க வில்லை?
அதே போன்று, ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு பாறைத்த தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், அந்தப் பாறைத் தட்டானது, பசிபிக் கடலில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா, அல்லது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா, அல்லது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறதா, என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, வட அமெரிக்கக் கண்டத் தட்டும், கரிபியன் பாறைத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத்த தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டது, என்று USGS என்று அழைக்கப் படும், அமெரிக்க ஐக்கிய புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறியது சரியா ?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,நாசா வெளியிட்ட, 'உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்' இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது எதைக் குறிக்கிறது?
அதே போன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,நாசா வெளியிட்ட, 'உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்' இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது எதைக் குறிக்கிறது?
இந்த நிலையில் சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில், நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களில், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும்,எரிமலைகளைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது எதைக் குறிக்கிறது?
1-கண்டங்களுக்கு இடையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருக்கிறது.கண்டங்கள் நிலையாக இருக்கிறது.
2-பூமிக்குள் ஏற்படும் எரிமலைச் செயல் பாடுகளால் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலைச் செயல் பாடுகளால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில், டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலத்தில், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும், அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்களானது, பல்வேறு கண்டங்களுக்கும் , தற்பொழுது தீவுகளாக இருக்கும் நிலப் பகுதிகளுக்கும் சென்று இருக்கின்றன.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலத்தில், கடலின் பரப்பளவு குறைவாக இருந்த காலத்தில், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அதிகமாக இருந்து இருப்பது, துருவப் பகுதிகளில்கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதே போன்று துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே போன்று கடல் மட்டம் உயர்ந்த பிறகு, கடலின் பரப்பளவு அதிகரித்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து இருப்பதும், துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்ட உயர்வால்,கடலின் பரப்பளவில் அதிகரிப்பால், பூமியின் வளி மண்டலமானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில், தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம மாற்றத்தில் தோன்றிய குள்ள வகை நீர் யானைகளின், புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில், இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு நில மட்டத்தை விட, கடல் மட்டம் வேகமாக உயர்ந்து இருப்பதன் மூலம், பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments