கடலடிப் புதை படிவங்கள்.

கடலடிப் புதை படிவங்கள் இகுவானா உடும்புகள் எப்படி தீவுகளுக்குச் சென்றன? தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளின் வம்சாவளிகளானது,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், ஒன்றுக் கொன்று தொடர்பே இல்லாத வகையில்,அமைந்து இருக்கும்,தீவுகளில் காணப் படுவது உயிரியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவில் வந்திறங்கிய டார்வின்,அந்தத் தீவுகளில்,வாழ்ந்த ஆமைகள்,தீவுக்குத் தீவு வேறுபட்டு இருப்பதைக் கண்டார். குறிப்பாக, அதிக செழிப்புடன் ,குறைந்த உயரத்திலேயே தாவர வகைகள் இருந்த தீவில்,வாழ்ந்த ஆமைகளின் கால்களும் கழுத்தும் குட்டையாக இருந்தன,ஆனால்,வறண்ட சூழலுடன்,அதிக உயரத்தில் தாவர வகைகள் இருந்த தீவில் வாழ்ந்த ஆமைகளின் கால்களும்,கழுத்தும் நீண்டு இருந்தன. அந்த ஆமைகள் எல்லாம் ஒரே பொது மூதாதையின் வழித் தோன்றல்கள் என்றும் தீவுகளின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டவைகள் என்பதைப் புரிந்து கொண்ட பொழுதுதான், அவருக்கு விலங்கினங்கள் எல்லாம், ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள் என்ற முடிவுக்கு வந்தார். ஆனாலும், அந்த கலாபகாஸ் தீவில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கலாபகாஸ் தீவில்,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளும் காணப் படுகின்றன. ராட்சத ஆமை மற்றும் இகுவானாக்கள் எல்லாம் தரையில் வாழக் கூடிய விலங்கினங்கள். எனவே எப்படி இந்த விலங்கினங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று டார்வின் வியந்தார். கலாபகாஸ் தீவு ஆமையின் மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர். கலாபகாஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி, தற்செயலாகக் காலபாகஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. இந்த முறையில், இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவை அடைந்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. ராட்சத ஆமைகளின் உடலில் நிறைய கொழுப்பு இருப்பதால் பல மாதங்கள் கடலில் உணவும் நீரும் இன்றி ராட்சத ஆமைகள் பிழைத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. குறிப்பாக, ஆமைகளின் உடலில் அதிக அளவில் கொழுப்பும்,நீரும் இருப்பதால்,அந்த ஆமைகளானது,பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. இதே போன்று, காலபாகஸ் தீவில் 'நேசோரைசோமிஸ் டார்வினி' என்று பெயர் சூட்டப் பட்ட காலபாகஸ் தீவு எலிகளும் வாழ்ந்திருக்கின்றன. தற்பொழுது, அந்த எலி இனம் அழிந்து விட்டது. நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன. ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது சிறிய அளவுள்ள எலியின் உடலில் கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால் எலிகளால் பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து இருக்க இயலாது. இந்த நிலையில் , தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்பது, உறுதி செய்யப் படவில்லை. மரபணு ஆய்வில், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள் முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும் செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும் குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆமைகளின் கடல் பயணத்துக்குக் கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் 'ஹிங்கிபேக்' ஆமையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில் பல மாதங்கள் தத்தளித்த படி மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. கலாபாகஸ் தீவில்,காணப் படும் ,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளில், இரண்டு இனவகைகள் காணப் படுகிறது. குறிப்பாக,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,கலாபாகஸ் தீவை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில், கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழும் உடும்பானது,தரையில் வாழும் உடும்பினத்தில் இருந்து,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் உருவாகி இருப்பது,மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால்,கலாபாகஸ் தீவோ,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக உருவாகியது. அதாவது,கலாபாகஸ் தீவை விட அந்தத் தீவில் வாழும் உடும்புகளானது,அதிக தொன்மையானது. எனவே,தற்பொழுது,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில்,இருந்து,கலாபாகஸ் தீவை அடைவதற்கு முன்பே, வேறு சில தீவுகளில் வந்து வாழ்ந்து இருப்பதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட பரிணாம மாற்றத்தில், இரண்டு இனவகையாக உருவான பிறகு,அந்தத் தீவுகளானது கடலுக்குள் மூழ்கிய தாகவும்,அப்பொழுது, கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த, கலாபாகஸ் தீவுகளுக்கு,உடும்புகள் வந்ததாகவும், தற்பொழுது புதிய விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கலாபாகஸ் தீவுகளுக்கு ராட்சத ஆமைகளானது,கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்ததாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால்,அதே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,இகுவானாக்களானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,தென் அமெரிக்கக் கண்டதுக்கும்,காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக வந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ரின் ஹார்ட் வெர்னெர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் காலபாகஸ் தீவுக்கு அடியில் உருவாகி இருக்கும் கடலடித் திட்டுகள் மற்றும் கடலாடி மலைகளின் மேல் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைகளின் வேதியியல் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது மூவாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த எரிமலைத் திட்டுகளும் மலைகளும் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்து இருக்கின்றன என்று கண்டு பிடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்தக் கண்டு பிடிப்பானது காலபாகஸ் தீவில் வாழும் இகுவானாக்கள் சில மூழ்கிய தீவுகளில் பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார்டிப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேவிட் எம் பக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் கடலடிப் பீட பூமி பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட எரிமலைப் படிவுகளின் வேதித் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்ததாக தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அவ்வாறு கடல் மட்டத்துக்கு மேலே அந்தக் கடலடி பீட பூமி இருந்த பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்துக்கும் பயன் பட்டு இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இந்தக் கண்டு பிடிப்பானது இதற்கு முன்பு பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒண்டாங் ஜாவா கடலடிப் பீட பூமி மற்றும் சாக்ஸ்டி கடலடிப் பீடப் பூமியம் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து எரிமலைக் குழம்பைக் கக்கியதற்கு ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த ஆதாரங்களுடன் ஒத்துப் போவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். காலபாகஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது. கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும். குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது. தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை. கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது. இன்னொன்று கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது. கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு விசேஷ சுரப்பிகள் மூக்குக்கு அருகில் இருக்கின்றன. கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும். கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன. அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன. சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன. அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும்,இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும். குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாக செயல் பட இயலாது. இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. இகுவானா மழை- கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன. அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின. அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின.இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது. இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்? இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது,அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவின் தரை வாழ் இகுவனாக்களில் இருந்து பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர். அத்துடன், அந்த சமதளப் பரப்பின்மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் வழியாகவே வந்திருக்கின்றன என்று,தற்பொழுது தெரிய வந்துள்ளது. எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது. முக்கியமாக ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது. இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும் பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார். ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது. தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி? ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது. இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது. இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார். ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும். எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது. ஜெர்மன் நாட்டின்,ஜியார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் வல்லுனரான ஸ்வென் பிராட்லர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,உலக அளவில் காணப் படும் ,நூற்றி இருபது வகையான குச்சிப் பூச்சிகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது,மாஸ்கரீனா தீவுகளில் காணப் படும்,குச்சிப் பூச்சிகள் மற்றும் இலை வடிவப் பூச்சிகளானது,அந்தத் தீவுகளுக்கு அருகில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப் படும்,குச்சிப் பூச்சிகளின் இன வகைகளைச் சேர்ந்ததல்ல என்பதுடன்,அந்தப் பூச்சிகளானது,ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய வகைக் குச்சிப் பூச்சிகளின் வம்சாவளி என்பதும் தெரிய வந்தது. குறிப்பாக அந்தப் பூச்சிகளானது ,ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த குச்சிப் பூச்சி இனத்தில் இருந்து ,இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து வந்த மிதவைத் தாவரங்கள் மூலம் மாஸ்கரீனா தீவுக்கு வந்த பிறகு,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொது மூதாதையில் இருந்து , பரிணாம மாற்றமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாகக் குச்சிப் பூச்சிகளுக்கு ,இறக்கைகள் இருந்தாலும் அதனால் உயர்ந்த மரங்களில் இருந்து பறந்தபடி இறங்குவதற்கே பயன் படுத்தும்.ஆனாலும்,குச்சிப் பூச்சிகளானது,மரக் கிளைகளில் ஓட்டும் முட்டைகளை இடக் கூடியது,எனவே,குச்சிப் பூச்சிகளானது,மாஸ்கரீனா தீவுகளுக்கு,கடலில் மிதந்து வந்த மிதவைத் தாவரங்கள் மூலமாகவே வந்திருக்க வேண்டும் என்று,ஸ்வென் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும் ஒரு சிக்கல். குறிப்பாக மாஸ்கரீனா தீவுகளில் காணப் படும் குச்சிப் பூச்சிகளானது,மாஸ்கரீனா தீவில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனத்தில் இருந்து பரிணமித்து இருக்கிறது. ஆனால், மாஸ்கரீனா தீவுகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடல் மட்டத்துக்கு மேலாக எரிமலைத் தீவுகளாக உயர்ந்து இருக்கின்றன. எனவே,மாஸ்கரீனா தீவுக் குச்சிப் பூச்சிகளானது,எங்கே பரிணாம மாற்றமடைந்தது என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு,ஸ்வென் குழுவினர் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர். குறிப்பாக மாஸ்கரீனா தீவுக்கு அருகில் ,கடலுக்கு அடியில் சில தீவுகள் மூழ்கிய நிலையில்,இருக்கின்றன. அதன் அடிப்படையில்,குச்சிப் பூச்சிகளானது முதலில் அந்தத் தீவுகளுக்கு வந்து வாழ்ந்த பொழுது, பரிணாம மாற்றமடைந்த பிறகு,அந்தத் தீவுகள் மூழ்கிய பிறகு,புதிதாகக் கடலுக்குள் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த தீவுகளுக்கு வந்திருப்பதாக, ஸ்வென் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஜோன் கார்த்தியா லோகோ ஸ்டோமோ என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவான, அசென்சன் எரிமலைத் தீவில் காணப் படுகிறது. இதன் நெருங்கிய இனவகையான, '' ஜோன் கார்த்தியா பிளேனேட்டா''(J. malpilensis and J. planata) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது, பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்து இருக்கும் கிளிப் பெர்டன் (Clipperton Island) தீவில் காணப் படுகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகம். இதன் நெருங்கிய இனவகையான ''ஜோன் கார்த்தியா வெய்லேறி'' (J. weileri) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின், கினியா வளை குடாப் பகுதியில் காணப் படுகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகம். ஆனால்,நன்னீர் நண்டுகளுக்கும்,அதன் இளரிகளுக்கும்,கடல் நீர் ஒத்துக் கொள்ளாது. எனவே,மற்ற நிலப் பகுதிகளில் இருந்து அதிக தொலைவில் அமைந்து இருக்கும்,அசென்சன் எரிமலைத் தீவில் காணப் படும், இந்த நன்னீர் வாழ் நண்டானது,அந்தத் தீவை அடைந்ததற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக, அந்த நன்னீர் நண்டானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும்,தீவுக்கு சென்று இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதே போன்று,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,செஷல்ஸ் தீவில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும்,இனவகையைச் சேர்ந்த, செசல்லம் அல்டிலுயாடி என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டு (Seychellum alluaudi) காணப் படுவதற்கும்,அந்தத் தீவுக்கு எப்படி,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நன்னீர் நண்டுகள் பரவி இருக்கும் என்று , உயிரியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயல வில்லை. கடல் பசுக்கள் எப்படிக் கடல் கடந்தது ? கடல் பசு என்று அழைக்கப் படும் விலங்கினம்,கண்டங்கள் மற்றும் தீவுகளை ஒட்டி இருக்கும் ஆழமற்ற கடல் பகுதியில் வசிக்கின்றன.பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த விலங்கு ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. தரையில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஆறு குளம் மற்றும் ஏ ரி க்கு அடியில் வளர்ந்து இருக்கும் தாவரங்களை உண்ணத் தொடங்கியது.பின்னர் தண்ணீரிலேயே அதிக நேரம் வசிக்க ஆரம்பித்தது.அதனால் கால்களை நடப்பதற்கு பயன் படுத்துவதற்கு பதிலாக,நீருக்கு அடியில் உள்ள தரையில் ஊன்றி உந்தி உந்தி நீந்தவும்,தண்ணீருக்கு அடியில் இருந்து எம்பி மேற்பகுதிக்கு வந்து காற்றை சுவாசிக்கவும் பயன் படுத்தியதில் காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகளைப் பெற்றது. தண்ணீருக்கு அடியில் வாழும் பொழுது இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து மூக்கை திறந்து காற்றை சுவாசிக்கும்.அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் மூச்சை அடக்கி தண்ணீருக்கு அடியில் இருக்கும் தாவரங்களை உண்ணும். காலப் போக்கில் ஆறும் கடலும் சந்திக்கும் முகத் துவாரப் பகுதியில் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரிலும் வசிக்க ஆரம்பித்த பிறகு பின்னர் கடல் நீரிலும் வசிக்க ஆரம்பித்தது.ஆனாலும் கடற் பசுக்கள் நல்ல நீரையே குடிக்கும்.சாதாரணமாக ஏழு அடி ஆழத்தில் வசிக்கும்.அரிதாக இருபது அடி ஆழத்திலும் கடற் பசுக்கள் காணப் படும். இந்த விலங்கின் உடற் செயலில் மந்தமாக நடை பெறுவதால் முதுவாகவே இயங்கும்.ஆனாலும் மணிக்கு ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இருபது சென்டி கிரேட் வெப்ப நிலையில் வசிக்கும் கடற் பசுக்கள் அதற்கும் கீழே வெப்ப நிலை குறைந்தால் வெப்பமான பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும். தற்பொழுது கடற் பசுக்கள் வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதியிலேயே வசிக்கின்றன. கடற் பசுக்களில் தற்பொழுது இரண்டு வகைகள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் பெருங் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டூகாங் என்று அழைக்கப் படுகின்றன.இதன் துடுப்பு போன்ற வால் பகுதியானது திமிங்கிலம் மற்றும் டால்பின்னுக்கு இருப்பதைப் போன்று பிளவு பட்டு இருக்கும். மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் காணப் படுகின்றன. துடுப்பு போன்ற இதன் வால் பகுதியானது பிளவு படாமல் முறம் போன்று வளைந்து இருக்கும். டூகாங் வகைக் கடற் பசுக்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் டூகாங் வகையைச் சேர்ந்த கடற் பசுக்கள், பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன.தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது. அதே போன்று ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் டூகாங் வகைக கடற் பசுக்களின் மூதாதைக ளின் புதை படிவங்கள்,ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகின்றன. உதாரணமாக பெல்ஜியம்,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஹாலி தீரியம் வகைக கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று டூகாங் வகையின் மூதாதை எனக் கருதப் படும் மெட்டாக்சி தீரியம் என்று அழைக்கப் படும் அழிந்து போன இனத்தைச் சேர்ந்த கடற் பசுக்களின் புதை படிவங்கள், அட்லாண்டிக் கடல் பகுதியிலும் தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டைனா பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகிடே என்ற இனத்தைச் சேர்ந்தது.இதில் தற்பொழுது மூன்று இன வகைகள் உள்ளன. கரீபியன் தீவுப் பகுதியில் காணப் படும் மேற்கு இந்தியக் கடற் பசுக்களும் ,மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப் படும் ஆண்டிலியன் கடற் பசுக்களும் , ட்ரைகேகஸ் மானட்டஸ் மானட்டஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது. புளோரிடா பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகஸ் லாட்டிராஸ்ட்ரிஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது.அமேசான் ஆற்றுப் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானட்டி இனுங்குயிஸ் என்று அழைக்க படுகிறது. ட்ரைகேகஸ் செனகலிஸ் என்று அழைக்கப் படும் மூன்றாவது இனம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியுள்ள கடற் பகுதியில் காணப் படுகின்றன. dispersal3.jpg dispersal3.jpg கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றிய விலங்கினம். கடற் பசுவும், யானை, நீர் யானை,மற்றும் ஹைராக்ஸ் என்று அழைக்கப் படும் கொறித்துண்ணி ஆகிய விலகினங்களும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. dispersal10.gif dispersal10.gif இதன் அடிப்படையில் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று விலங்கியல் வல்லுனர்கள் கருதினார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான கடற் பசுக்களுக்கு, சிறிய அளவிலான தொடை எலும்புகளுடன் இருந்தன. கடற் பசுக்களின் மூததையானது தரையில் நடந்த விலங்கு என்பதால், தரையில் நடக்கக் கூடிய அளவுக்கு நான்கு கால்களும் உடைய தொன்மையான புதை படிவங்கள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதியில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் 1855 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், கடற் பசுக்களின் மூததையின் தலைப் பகுதியை,ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார். டாக்டர் டாரில் டொம்னிங் டாக்டர் டாரில் டொம்னிங் இதே போன்று ,2001 ஆம் ஆண்டு,வாசிங்டன் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் , டாக்டர் டாரில் டொம்னிங்,ஜமைக்கா தீவில் நான்கு கோடியே எண்பது லட்சம் தொன்மையுள்ள, கடற் பசுவின் மூதாதையின் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார். அந்த விலங்கானது தரையில் நடப்பதற்கு ஏற்ற படி நான்கு கால்களுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்த விலங்கானது நீர் யானையைப் போன்று, நீரிலும் நிலத்திலும் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜமைக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ விலங்கானது ,கடற் பசுவின் மூததையான நடக்கும் விலங்குக்கும் தற்பொழுது உள்ள நீர் வாழ் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்று தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் டாக்டர் டாரில் டொம்னிங், கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் குறிப்பாக தென் அமெரிக்கப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கி பயணம் செய்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று 2005 ஆம் ஆண்டு ,விளக்கம் தெரிவித்து இருந்தார். அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தில் பாயும் அமேசான் ஆறானது அட்லாண்டிக் கடலில் பாய்ந்ததாகவும், அதனால் அந்த நீரோட்டத்துடன் கடற் பசுக்களும் நல்ல நீரைக் குடித்த படி,ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்ததாகவும் விளக்கம் தெரிவித்து இருந்தார். மூததையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில், நடக்கக் கூடிய கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனவே கடற் பசுக்கள் எங்கே பரிணாம வளர்ச்சி அடைந்து, எப்படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் பரவியது ? என்ற கேள்வி எழுந்தது. தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும் அதனால் கண்டங்களுக்கு இடையில் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதன் அடிப்படையில் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்த பொழுது கடற் பசுக்களும் இரண்டு பிரிவாகப் பிரிந்து விட்டதாக நம்பப் பட்டது. தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானது என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு, ஜார்ஜ் கேய்லார்ட் சிம்சன் என்ற ஆராய்ச்சியாளர் மானட்டி இனக் கடற் பசுக்கள், அட்லாண்டிக் கடலின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு திசையை நோக்கி இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று விளக்கம் தெரிவித்து இருந்தார். ஆனால் மெதுவாக இயங்கக் கூடிய, காற்றை சுவாசித்து வாழக் கூடிய,எட்டு மணி நேரம் உணவை உண்டு வாழக் கூடிய கடற் பசுக்களால்,உன்ன உணவின்றி பல நாட்கள் தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலை நீந்திக் கடக்க இயலாது . இந்த நிலையில்,2008 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ,டாக்டர் ஜுலியன் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள டுனிசியாவில் உள்ள சாம்பி தேசியப் பூங்காப் பகுதியில் ,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் காதுப் பகுதியில் இருக்கும் எலும்புப் பகுதியையும் கண்டு பிடித்தார். கடற் பசுவின் காதுப் பகுதி எலும்பில் காணப் படும் தனித் தன்மைகளின் அடிப்படையில் அந்த எலும்பானது, ஒரு கடற் பசுவின் புதை படிவம் என்றும்,அந்த எலும்பானது இது வரை கண்டு பிடிக்கப் பட்டதிலேயே மிகவும் தொன்மையான அமைப்புடன் இருப்பதாகவும் டாக்டர் ஜுலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார். அந்த எலும்புப் புதை படிவமானது நான்கு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும்,கடற் பசுக்களின் மூதாதைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தற்பொழுது கடற் பசுவினம் எந்தத் திசையில் பயணம் செய்து அட்லாண்டிக் கடலைக் கடந்தது ? என்ற கேள்வி எழுகிறது. அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் 2100 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் தீவு. அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது. அந்த கடலடி எரிமலைத் தொடரில் இருந்து ஒரு கடலடி மேட்டுத் தொடர் பிரிந்து கிழக்கு திசையை நோக்கி நீண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு பகுதியை அடைகிறது. இந்த கடலடி மேடானது வாழ்விஸ் மேடு என்று அழைக்கப் படுகிறது.இதே போன்று அந்த கடலடி எரிமலைத் தொடரில் இருந்து ஒரு கடலடி மேட்டுத் தொடர் பிரிந்து மேற்கு திசையை நோக்கி நீண்டு தென் அமெரிக்காவின் பிரேசில் கண்டத்தின் பகுதியை அடைகிறது. இந்த கடலடி மேடானது ரியோ டி கிராண்ட் மேடு என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த சா பால் பல்கலைக் கழகத்தை சேர்ந்த லூசி ஜோவேனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு ஆராய்ச்சிக் கப்பலில் இருந்து இயக்கக் கூடிய நீர் மூழ்கிக் கலன் மூலம் அந்தக் கடலடி மேட்டுப் பகுதியை ஆய்வு செய்தனர். அப்பொழுது அதில் சிவப்பு நிற களிமண் இருப்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நீர் மூழ்கிக் கலனில் இருந்த இயந்திரக் கரங்கள் மூலம் அந்தக் களி மண்ணை எடுத்து வந்து கப்பலில் வைத்து ஆய்வு சேந்தனார்.அப்பொழுது அந்த களிமண்ணானது கையோலினைட் என்று அழைக்கப் படும் மண் வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. அதன் வேதிச் சேர்மானங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த மண்ணானது எரிமலையில் இருந்து வெளிப் பட்ட பிறகு வளி மண்டலத்தில் உள்ள காற்றுடன் வினை புரிந்து இருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து 2100 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த கடலடி மேட்டுப் பகுதியானது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருப்பதாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு அந்த எரிமலைத் தீவானது கடலுக்கு அடியில் 2100 அடி ஆழத்துக்கு சென்றதற்கு ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்த எரிமலைத் தீவானது அட்லாண்டிக் கடல் தரையானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்த பொழுது ஆழமான பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதன் அப்படிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில் அந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது எனவே கடல் மட்டமானது உயர்ந்ததாலேயே ரியோ டி கிராண்ட் எரிமலைத் தீவு, கடலுக்கு அடியில் 2100 அடி ஆழத்தில் மூழ்கி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் திட்டு. ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வடபகுதி கண்டத் திட்டு சாகுல் நிலம் என்று அழைக்கப் படுகிறது.தற்பொழுது இந்த நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் கிரிபித் பல்கலைக் கழகத்தை சேர்ந்த தொல் பொருளாராய்ச்சியாளரான டாக்டர் காசிக் நார்மன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் அந்தக் கடலடி நிலப் பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப் பட்ட தொல் பொருட்களையும் கற்கருவிகளையும் ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில்; 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வடபகுதியில் ஏராளமான தீவுக் கூட்டங்கள் இருந்ததாகவும் ,அப்பொழுது அங்கு இருந்த நிலப் பகுதியில் ஆறுகள் ஏரிகளுடன் காடுகளும் விலங்கினங்களும் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.குறிப்பாக அந்த நிலப் பகுதியானது 39,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் நியூ சிலாந்து தீவை விட, ஒன்றரை மடங்கு பெரிதாக இருந்ததாகவும், அந்த நிலப் பகுதியில் ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் மக்கள் வரை வாழ்ந்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கற்கருவிகள் மற்றும் தொல் பொருட்கள் வட கடல் பகுதியிலும்,பால்டிக் கடல் பகுதியிலும்,மத்திய தரைக் கடல் பகுதியிலும்,வட அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் கடலோர பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் உலகில் பல கண்டங்களின் பகுதிகள் கடலால் மூழ்கடிக்கப் பட்டு இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். கடலுக்குள் மூழ்கிய கண்டம். கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன என்று தெரிவித்து இருந்தேன்.அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருந்ததன் அடிப்படையில் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தேன்.அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தேன் இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதுடன் ,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது ஒரு முக்கியமான ஆதாரம் மூலம் உறுதிபடத் தெரிய வந்துள்ளது. ஜிலாந்தியா. கண்டங்களானது சராசரியாக முப்பது முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வரை தடிமன் உடையது அத்துடன் கண்டங்களானது அடர்த்தி குறைந்த இலேசான கிரானைட் பாறையால் ஆனது.ஆனால் கடல் தளப் பாறையானது நீரை உறிஞ்சாத அடர்த்தி அதிகமான கடினமான கடப்பாக் கல்லால் ஆனது.கடல் தளப் பாறைகளின் தடிமனானது சராசரியாக ஏழு கிலோ மீட்டர் ஆகும். இந்த நிலையில் நியூ சிலாந்து தீவை சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்காக சில எண்ணெய் நிறுவனங்கள் கடலுக்கு அடியில் துளையிட்ட இடங்களில் கண்டங்களில் காணப் படும் கிரானைட் பாறைகள் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் நியூ சிலாந்து தீவை சுற்றி ஐம்பது லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவை விடப் பெரிய நிலப் பரப்பு மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது தெரிய வந்தது.அந்த நிலப் பகுதியானது ஜிலாந்தியா என்று அழைக்கப் படுகிறது.சில ஆராய்ச்சியாளர்கள் ஜிலாந்தியாவை கண்டம் என்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஜிலாந்தியாவை கண்டத்தின் பகுதி என்றும் மற்றும் சிலர் ஜிலாந்தியாவை குறுங் கண்டனம் என்றும் வகைப் படுத்துகின்றனர்.இந்த நிலையில் ஜிலாந்தியாவின் கடந்த காலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியரான ஜெரால்டு டிக்கென்ஸ் தலைமையில் 12 நாட்டைச் சேர்ந்த 32 ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சிக் கப்பலில் சென்று ஜிலாந்தியாவில் குறிப்பிட்ட ஆறு இடங்களைத் தேர்வு செய்து துளையிட்டு பாறை மாதிரிகளையும் படிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது கடந்த ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில் ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் பெரிய அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக ஜிலாந்தியாவின் வடா பகுதியில் ஆழம் குறைந்த வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த கடல் நுண்ணுயிரிகளின் ஓடுகளும் ,தரை மேல் வளர்ந்த தாவரங்களின் மகரந்தத் துகள்களும், பாகங்களும் இருப்பது தெரிய வந்தது அதன் அடிப்படையில் ஜிலாந்தியாவின் வடபகுதியானது ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் உயர்ந்ததாகவும்,அதே நேரத்தில் ஜிலாந்தியாவின் மற்ற பகுதிகள் அதே அளவுக்கு கீழே இறங்கியதாகவும் அதன் பிறகு மொத்த ஜிலாந்தியாவும் மேலும் ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்கு மூழ்கியதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஜிலாந்தியாவின் வட பகுதி கடல் மட்ட்டத்துக்கு அருகில் இருந்த பொழுது சில பகுதிகள் கடல் மட்டத்துக்கு மேல் தீவுகளாக இருந்ததாகவும் அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நிகழ்ந்ததாகவும் ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் பெரும் அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் தளமானது கண்டங்களுக்கு அடியில் உரசிய படி நகர்ந்து சென்றதால் கடல் தளத்தின் மேல் இருந்த ஜிலாந்தியாவின் நில மட்டத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதன் அப்படிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில் அந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே ஜிலாந்தியாவின் நிலமட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது ஜிலாந்தியாவின் வட பகுதியானது கடல் மட்டம் உயர உயர கடல் மட்டத்துடன் நில மட்டமும் உயர்ந்து இருக்கிறது.அதன் பிறகு ஜிலாந்தியாவின் வட பகுதி உயராமல் நின்று விட்ட நிலையில் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து இருக்கிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நிலப் பகுதிகள் ஒன்றாக இருந்து இருக்கின்றன. அதன் பிறகு பூமியானது விரிவடைந்ததால் இந்த நிலப் பகுதிகளுக்கு இடையில் புதிதாக கடல் தளம் உருவாகி விரிவடைந்ததால் நிலப் பகுதிகள் பிரிந்து இருக்கின்றன. அதாவது பூமி விரிவடைந்ததால் நிலப் பகுதிகள் பிரிந்து இருக்கின்றன.இதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் ஒன்றாக இருந்த நிலையில் பூமி விரிவடைந்ததால் இன்று நாம் காணும் நிலப் பகுதிகளாக பிரிந்து இருக்கின்றன. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளும் அதில் ராட்சத ஆமைகள்,முதலைகள்,பாம்புகள்,குரங்குகள் என வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய விலங்கினங்கள்,குறிப்பாக சதுப்பு நிலக் காடுகளில் வாழக் கூடிய விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அலாஸ்கா பகுதியிலும் அண்டார்க்டிக்காக் கண்டத்திலும் வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய பனை மரங்கள் வளர்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதற்கும் முன்பு துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகளும் அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதன் அடிப்படையில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை நிலவி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இவ்வாறு வெப்பக் காடாக இருந்த பூமி எப்படி நாம் காணும் பனிப் படலங்கள் மூடிய துருவங்களுடன் குளிர் பூமியாக மாறியது எப்படி அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த மாற்றத்துக்கு அஜோலா என்ற நன்னீரில் வாழக் கூடிய பெரணி வகை மிதவைத் தாவரம்தான் காரணம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்த பொழுது அதில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான அஜோலா என்ற தாவரத்தின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பு பல நாட்டு ஆராய்ச்சியாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.காரணம்,அஜோலா என்பது வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் உள்ள நன்னீர் நிலைகளான குளம் குட்டை மற்றும் ஏரிகளில் மேற்பரப்பில் வளரக் கூடிய சிறிய மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகள் அரிசியின் அளவே இருக்கும் அதில் இருந்து தூவிகள் போன்ற வேர்ப் பகுதியின் உதவியால் நீர்ப் பரப்பின் மேல் மிதந்தபடி வாழக் கூடிய ஒரு மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகளில் உள்ள குழிகளில் அனபீனா என்று அழைக்கப் படும் நீலப் பசும் பாசி வகையை சேர்ந்த சயனோ பாக்டீரியா வாழ்கிறது.இந்த பாக்டீரியா காற்றில் இருக்கும் நைட்ரஜனை சிதைத்து தாவரங்கள் பயன் படுத்தக் கூடிய நைட்ரஜனாக மாற்றுகிறது அதனை அஜோலா பயன் படுத்திக் கொள்கிறது அதே நேரத்தில் அஜோலா பாக்டீரியாவுக்கு வாழ இடமும் பாது காப்பும் அளிக்கிறது.அஜோலாவின் இந்த பண்பால் அஜோலா சிறந்த தழை உரமாக சீனாவில் அரிசி வயல்களில் பதினோராம் நூற்றாண்டு முதல் பயன் படுத்தப் பட்டு வருகிறது கால் நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தப் படுகிறது.முக்கியமாக அஜோலா ஓரிரு நாட்களிலேயே இரு மடங்கு பெருக்க கூடியது.ஆனால் அஜோலாவுக்கு உப்பு நீரும் ஒத்துக் கொள்ளாது பனியும் ஒத்துக் கொள்ளாது. எனவே அஜோலா எப்படி ஆர்க்டிக் கடலின் மத்திய பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஏற்கனவே ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் ஒம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்த பொழுதும் இதே கேள்வி எழுந்தது. அதற்கு ஒண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பம் இருந்திருக்கிறது என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் பாய்ந்து இருக்கிறது என்றும் அதனால் அந்த நீரோட்டத்துடன் ஆசிய வகை நன்னீர் ஆமைகள் ஆசியப் பகுதியில் இருந்து ஆர்க்டிக் கடல் வழியாக வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருந்தார்.குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு மேலே பல இடங்களில் நன்னீர் பரப்பு இருந்திருக்கலாம் என்றும் அல்லது ஆர்க்டிக் கடலில் பல எரிமலைத் தீவுகள் வரிசையாக இருந்து அதன் வழியாகவும் ஆமைகள் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம் தெரிவித்து இருந்தார். அதே போன்று தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் கடலானது கண்டத் தட்டுகளின் நகர்ச்சியால் மற்ற கடல் பகுதியில் இருந்து பிரிக்கப் பட்டு மத்திய தரைக் கடலைப் போன்று முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டு இருக்கலாம் என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலில் மேற்பரப்பில் உப்புத் தன்மை குறைந்த நீர்ப் பரப்பும் அதற்கு அடுத்து உப்புத் தன்மை அதிகமான நீரால் ஆன அடுக்குகளும் உருவாகி இருக்கலாம் என்றும் இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் வேகமாக பாய்ந்து இருக்கலாம் என்றும் அதன் வழியாக அஜோலா ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கு வந்த பிறகு இறந்து மூழ்கி லாமனோவ் கடலடி மேடு மேல் படிவுகளாக உருவாகி இருக்கிறது என்று தற்பொழுது அராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.உதாரணமாக அட்லாண்டிக் கடலுக்குள் பாயும் அமேசான் ஆறானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நன்னீர் பரப்பைக் கொண்டுள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.குறிப்பாக மற்ற தாவரங்களை விட அஜோலா பத்து மடங்கு அதிக அளவு கரிய மில வாயுக்களை உரிஞ்ஜக் கூடியது. குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட அஜோலா படிவுகளானது இருபது மீட்டருக்கும் அதிக தடிமனுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்தப் படிவுகள் உருவாக 800,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது.இவ்வாறு நீண்ட காலம் ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்த அஜோலா தாவரமானது வளி மண்டலத்தில் இருந்து பெரும் பகுதி கரிய மில வாயுவை கிரகித்த பிறகு இறந்து ஆர்க்டிக் கடலுக்கு அடியில் வீழ்ந்து படிவுகளாக மாறியதால் வளி மண்டலத்தில் இருந்த கரிய மில வாயுவின் அளவு குறைந்ததால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் பனிப் படலங்கள் உருவாகியதால் டைனோசர்கள் காலம் முதல் வெப்பக் காடாக இருந்த வெப்ப பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் சூழ்ந்த குளிர் பூமியாக மாறி விட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.ஆனாலும் இந்த விளக்கத்தை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. இருப்பினும் எதிர் காலத்தில் அஜோலாவைப் பயன் படுத்தி புவி வெப்ப மயமாதலை மட்டுப் படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனது விளக்கம். இந்திய பெருங் கடலின் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி 5000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது,இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக இருப்பதால், இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படுகிறது.இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 4000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.இந்த நிலையில் இந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தப் படிவுகளில் ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் பாகங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.குறிப்பாக 15 வகையான பூக்கும் தாவரங்கள்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் அரிகேசியே,குளோரான்தேசியே, ,லாரேசியே,குன்னேரா,கில்பீயா,ஆகிய தாவரக் குடும்பங்களை சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது சில காலம் கடல் மட்டத்துக்கு மேலே எரிமலைத் தீவுகளாக இருந்து இருக்கின்றன என்று ரெய்மண்ட் கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஆர்க்டிக் கடலுக்கு அடியில் லாமனோவ் கடலடி மேட்டுத் தொடருக்கு அருகில் இருக்கும் மெண்டலீவ் கடலடி மேட்டுத் தொடரில் துளையிட்டு சேகரித்த பாறைப் படிவுகளை ஆய்வு செய்த ரஷ்ய அகடெமியை சேர்ந்த செர்ஜி ஸ்கோலோட்னோவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் அதில் ஆழமற்ற வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவுகள் உள்பட தாவரங்களின் மகரந்தத் துகள்கள் மற்றும் பாகங்களின் புதை படிவங்களை கண்டதன் அடிப்படையில் அந்த புதை படிவங்களானது ஆழம் குறைந்த கடல் பகுதியில் படிந்தது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலுக்கு அடியில் தற்பொழுது மூழ்கிக் கிடைக்கும் பல கடலரி எரிமலைத் தொடர்கள் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக இருந்த பொழுது அதில் நன்னீர் நிலைகளும் அதில் தாவரங்களும் வளர்ந்து இருக்கின்றன.கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகி பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?