பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரி...