இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி-விஞ்ஞானி.க.பொன்முடி.
வணக்கம்! கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகிறன்றன. நிலத்தின் மேல் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான திருவப் பகுதிகளில் காணப் படுகிறது. கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் காணப் படுகின்றன. இந்தப் புதிர்களுக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக நான் மேற்கொண்ட ஆய்வில் புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன். புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி குறித்து...ஒரே பக்கத்தில். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல்...