சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.
சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை''
தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் ஒரு கருத்து நிலவுகிறது.
அந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
அதன் படி கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று கடலுக்கு அடியில், ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தை சேர்ந்த கடல் தளமானது உரசியபடி நகரும் பொழுது,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அத்துடன் அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு ,இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன், இந்திய நிலப் பகுதியானது,பூமத்திய ரேகைக்கு வடக்கிலும்,ஆஸ்திரேலியாக் கண்டமானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது.
எனவே கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின்படி இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. அது மட்டுமின்றி, அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு, இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது என்று நாசாவுக்கு தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், நாசாவைச்ச சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை.
எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட முதல் அறிவிப்பு
(The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together)
இந்த நிலையில்,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான், தெற்காசிய சுனாமி, ஏற்பட்டது என்று நாசாவுக்கு தெரிவித்து இருக்கின்றனர்.
நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பு, ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)
எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?
குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம் சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே தெற்காசிய சுனாமிக்கும் காரணம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
00000000000000000
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,இந்திய நிலப் பகுதியானது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமத்திய ரேகைக்கு தெற்கே, ஒரு தனித் தீவுக் கண்டமாக வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது இந்திய நிலப் பகுதிக்கு வடக்கு பகுதியில் இருந்த கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்ற பிறகு, உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு உயர்ந்ததால் இந்தோனேசியப் பகுதியில் உள்ள எரிமலைகள் உருவானதாக நம்பப் படுகிறது.
அதன் பிறகு, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப் பகுதியானது, ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட தரைப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும்,நம்பப் படுகிறது.அத்துடன் இமய மலைப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு இடையிலான மோதலே காரணம் என்றும் நம்பப் படுகிறது.
ஆனால், கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி , ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப் பகுதியானது, இந்தியப் பெருங் கடல் பகுதியில், ஒரு தீவுக் கண்டமாக வட கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை, இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் இன வகைகளின் புதை படிவங்களானது, வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது, தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
00000000000000000
000000000000000
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கு, கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட,சரியான விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில், 12.1.2010 அன்று, சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட, கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் என்று அழைக்கப் படும்,அமெரிக்க புவியியல் ஆய்வு கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட ,சரியான விளக்கத்தை கூற இயல வில்லை.
ஏனென்றால் தனி தனிக் கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியிலும் கூட, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அதே ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே,ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும்,அந்த தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
00000000000000000000000000
ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு அமெரிக்கப் புவியியல் ஆய்வு கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் ஏன் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை?
00000000000000000000000000
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து உருவான கதை.
கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது ,கடல் பகுதியைக் கடக்க இயலாத கண்டங்களில் காணப் படுவதற்கு, முன்பு ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ''பாஞ்சியா'' என்ற ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்.அதன் பிறகு அந்த ஒற்றைப் பெருங் கண்டமானது ,பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது இருக்கும் புவியியல் அமைப்பு உருவானது என்று நம்பப் பட்டது.
ஆனால் கண்டங்கள் எல்லாம் கடல் தளத்தை பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தளத்தில் காணப் படவில்லை.
இந்த நிலையில்,கண்டங்களைச் சுற்றிலும்,தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும்,அடிக்கடி எரிமலை சீற்றங்களும்,நில அதிர்ச்சிகளும் ஏற்படுவதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில்,பாஞ்சியா பெருங் கண்டத்திற்கு அடியில் பல இடங்களில் ,பூமிக்கு அடியில் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு மேற் பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து,மறுபடியும் பூமிக்கு அடியில் சென்றதாகவும்,இவ்வாறு பாஞ்சியா கண்டத்திற்கு அடியில்,கடல் தளம் புதிதாக உருவாகி,விலகி நகர்ந்தால் ,கடல் தளத்துடன் கண்டங்களும் தனித் தனியாகப் பிரிந்து விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக....
''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. அப்பொழுது கண்டங்களைச் சுற்றிலும், கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் படி, வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்து உண்மை என்றால்,அட்லாண்டிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதி வரை, தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிககள் பதிவாகி இருக்க வில்லை. இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது, ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' ( UNDEFINMED BOUNDARY )என்றும் அழைக்கப் படுகிறது.
எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் இருந்து ,தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை, என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அட்லாண்டிக் கடல் தளம் நிலையாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம். கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு, வெளி வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் மதியப் பகுதியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும், கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில், எரிமலை செயல் பாட்டால், கரீபியன் தீவுக் கூட்ட மானது, உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில், மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் தீவுகளுக்கு அடியில் சென்று, உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தை பொத்துக் கொண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்கு திசையில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இறுக்கும் எரிமலைத் தீவுகளாக உருவாகி இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது, ஆனால் இந்தக் கருத்தில் உள்ள முக்கியமான பிரச்சினை என்ன வென்றால், தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும், பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து, கரீபியன் பாறைத் தட்டு, பசிபிக் கடல் பகுதியில் இருந்து, தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, உருவாகி இருக்க வில்லை என்றும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகே , மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யூகித்தனர். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது. இவ்வாறு பசிபிக் கடல் மாதிரிக்கு, மத்திய அமெரிக்க நிலப் பகுதிப் புதை படிவ ஆதாரங்கள் முற்றிலும் முரணாக இருப்பதால், வேறு சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில், எரிமலை செயல் பாட்டால் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம், என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது. முக்கியமாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது, எரிமலைத் தீவுக் கூட்டம் ஆகும்.அதிலும் குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாகக் கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும், நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் எரிமலைத் தொடர்கள் உருவாக்குவதாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில்,அட்லாண்ட்டிக் கடல் தளமானது, அட்லாண்ட்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த நிலையில் பூமிக்குள் இருந்து எரிமலைப் பிழைப்புகள் கடல் தளத்தை துளைத்தால், கரிபியன் தீவுக்கு கூட்டமானது, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும். உதாரணமாக பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தீவுகளானது பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.இதன் அடிப்படையில்,பசிபிக் கடல் தளமானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்குள் இருந்து ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் ,பசிபிக் கடல் தளத்தின் மேல், தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி, ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகாமல், தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.எனவே ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்த 'அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு'முற்றிலும் முரணாக கரீபியன் தீவுக் கூட்டத்தின் அமைப்பு இருக்கிறது. இந்த நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது, மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் 'அட்லாண்டிக் கடல் மாதிரி'யை முன் மொழிந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தை கூறினார்கள். ஆனால் கரீபியன் தீவுகளில் உள்ள எரிமலைகளில், இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இது போன்ற குழப்பங்களால், இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் மூன்றாவதாக ஒரு புதிய விளக்கத்தையும், முன் மொழிந்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''தற்போது இருக்கும் இட'' மாதிரி' ( IN SITU )என்று அழைக்கப் படுகிறது. கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருந்தாலும் கூட,கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி, அட்லாண்ட்டிக் கடல் தளமானது, அட்லாண்ட்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்கிறது .அத்துடன் இன்றும் கூட கரீபியன் தீவுகளில் எரிமலை சீற்றங்கள் ஏற்படுவதால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.எனவே ஆராய்ச்சியாளர்கள் முன் மொழிந்த ''தற்போது இருக்கும் இட'' மாதிரிக்கும் ( IN SITU )கரிபியன் தீவுக் கூட்டத்தின் அமைப்பானது முற்றிலும் முரானாக இருக்கிறது. ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாக இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டும் விதமாக இருக்கிறது. ஆனால், இன்று வரை கரீபியன் தீவுக் கூட்டத்தின் தோன்றம் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு, உண்மையில்,கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகித் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது, தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு இன்று வரை, உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. அதனால் அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,ஒரு ' ' 'த ந் தி ர மா ன ' விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், பின்னர் அதன் தோற்றம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவானது என்ற கேள்விக்கு விளக்கம் கூற வேண்டும், என்பதால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு,கரீபியன் தீவுக் கூட்டமானது,குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற விளக்கத்தை கூறி இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும்.ஆக கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கூறத் தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால். வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.எனவே நிச்சயம் கரிபியன் தீவுக்கு கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்க இயலாது. குறிப்பாக அட்லாண்ட்டிக் கடல் பகுதியானது, கண்டங்களின் பிரிவால் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விரிவடைந்து நகர்ந்ததால் பெரிதானதாகக் கூறப் படுகிறது.எனவே கரிபியன் தீவுக்கு கூட்டமானது அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாக்கி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் நேர்கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியிலும் உருவாகி இருக்க வில்லை. என்பதும் தெளிவாகிறது.இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவாகி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை.ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் ,தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.இதன் மூலம் அட்லாண்ட்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில், கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், அதாவது நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தந்த ஒப்புதல் வாக்கு மூலம் போன்று, ''கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே'' கரிபியன் பாறைத் தட்டும், வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில், உறுதி படுத்தப் படாத விளக்கத்தை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
--விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments