சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.
சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை'' தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அதன் படி கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில், ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தை சேர்ந்த கடல் தளமானது உரசியபடி நகரும் பொழுது,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அத்துடன் அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு ,இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பிரிந்து, வட கிழக்கு ...