பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
ஒரு பலூனைப் போன்று பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
நானூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை வரைந்த பொழுது அதில் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்கில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு கடற் கரை ஒர பகுதியும் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் புறம் உள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு கடற் கரை ஒர பகுதியும் ஒன்றில் ஒன்று பொருந்தி இருப்பதைக் கவனித்தனர்.
இந்த வினோத அமைப்பானது ''மேட்சிங் கோஷ்ட் லைன்'' என்று அழைக்கப் படுகிறது.
அதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணையானது இருந்திருக்க வேண்டும் என்று கருதினர்.
அதன் பிறகு 1912 ஆம் ஆண்டு ,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ,இந்த இரண்டு கண்டங்களிலும் .இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடற் பகுதியில் வாழ்ந்த,மெசோ சாரஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வாழக் கூடிய ,வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்டையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தென் பகுதி வரை தொடர்ச்சியாக,''பாஞ்சியா ''என்ற ஒரு ஒற்றைப் பெருங் கண்டம் இருந்ததாகவும்,அந்தக் கண்டத்தை சுற்றிலும் ''பாந்தலாசா'' என்ற கடல் பகுதி இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததாகவும், அதனால் லாரேசியா,கோண்டுவாணா என்ற இரண்டு கண்டங்கள் உருவாகி முறையே வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,பூமத்திய ரேகைப் பகுதியில் ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி முறையே மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தாகவும்,அதனால் இந்தக் கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவாகி பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
இதில் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டம் வட மேற்கு திசையை நோக்கியும் ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்தால் ,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,தென் அட்லாண்டிக் கடல் உருவாகி பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று ஆப்பிரிக்கா ,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் ஆப்பிரிக்கக் கண்டமானது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும்,அதே போன்று இந்தியக் கண்டமானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் வெக்னர் கூறினார். ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது?போன்ற கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியாக எந்த ஒரு பதிலையும் கூற இயலவில்லை.
இந்த விளக்கமானது,''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
முக்கியமாகக் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் ஏதும் கடல் தரையில் காணப் பட வில்லை.
ஆனால்,கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக எரிமலைகள் இருப்பதும்,அந்த எரிமலைப் பகுதிகளில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும்,நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில்,வெக்னரின் விளக்கமானது சிறிது மாற்றி அமைக்கப் பட்டது.
அதாவது கண்டங்களுக்கு இடையில் இருக்கும், அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது.
இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது.
தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்தக் கருத்தே கற்பிக்கப் படுகிறது அத்துடன் நில அதிர்ச்சி,சுனாமி மலைகளின் தோற்றம் மற்றும் கடலுக்கு அடியில் காணப் படும் மலைத் தொடர்கள் மற்றும் பள்ளத் தாக்குகள் போன்றவற்றின் தோற்றத்திற்கும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் வெக்னரின் காலத்தில் 'மேட்சிங் கோஷ்ட் லைனுக்கு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சாமுவேல் வாரன் காரி என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் வேறு ஒரு விளக்கத்தை கூறினார்.
முதலில் அவர் வெக்னர் கூறிய படி கண்டங்களை வெட்டி ஒட்டி ஒரு மரக் கோளத்தின் மேல் ஓட்டினார்.ஆனால் அதன் மேல் கண்டங்களின் ஒர பகுதிகள் சரி வரப் பொருந்த வில்லை ஆனால் பாதி அளவுள்ள ஒரு மரக் கோளத்தின் மேல் கண்டங்களின் ஒர பகுதிகள் ஓரளவு சரியாகப் பொருந்துவத்தை கவனித்தார்.
அதன் அடிப்படையில் அவர் இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த கால கட்டத்தில் பூமியின் அளவானது தற்பொழுது இருக்கும் அளவை விட பாதி அளவே இருந்ததாகவும் அதன் பிறகு பூமியானது ஒரு பலூனைப் போன்று விரிவடைந்து இருப்பதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் சாமுவேல் வாரன் காரியின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வட துருவப் பகுதி முதல் தெற்கே அண்டார்க்டிக் கண்டம் வரையிலும் எரிமலைத் தொடர்களும் பிளவுப் பள்ளத் தாக்குகளும் இருப்பது இரண்டாம் உலகப் போரின் பொழுது நீர் மூழ்கிக் கப்பல் போக்குவதற்கும் பயண படுத்துவதற்காக கடல் தரை வரை படம் தயாரிக்கப் பட்ட பொழுது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹாரி ஹெஸ் என்ற பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் ஒரு விளக்கத்தை கூறினார்.
அத்துடன் இவ்வாறு உருவாகும் புதிய கடல் தளமானது கண்டங்களுக்கு அடியில் கீழ் நோக்கி சென்று பூமிக்கு அடியில் அழிவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு கடல் தளமானது கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில் செல்வதால்தான் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகள் உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக கண்டங்களில் உள்ள பாறைகளின் தொன்மையானது நானூறு கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் கடல் தள பாறைகளின் தொன்மையோ முப்பது கோடி ஆண்டுகளாக இருப்பதற்கு இவ்வாறு கடல் தளமானது பூமிக்குள் சென்று அழிந்த பிறகு மறுபடியும் அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிதாக உருவாகுவதே காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக தென் அமெரிக்க கண்டத்தின் ஒர பகுதியிலும் இந்தோனேசியாவின் தென் பகுதியிலும் பசிபிக் கடலை சுற்றிலும் அகழிகள் என்று அழைக்கப் படும் பள்ளத் தாக்குகள் இருப்பதாகவும் ஹாரி கூறினார்.
இவ்வாறு அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகும் கடல் தளமானது பசிபிக் கடல் பகுதியில் மறுபடியும் பூமிக்குள் செல்வதால் பூமியின் அளவானது ஒரே அளவில் இருக்கிறது என்று ஹாரி ஹெஸ்ஸின் விளக்கத்தின் அடிப்படையில் நம்பப் பட்டது.
முக்கியமாக கடல் தளத்தையும் கண்டங்களையும் நகர்த்தும் அளவுக்கு பூமியில் செயல் படும் விசை குறித்து இன்று வரையிலும் திருப்திகரமான விளக்கம் கூறப் பட வில்லை.
####
ஆனால் புதிய கடல் தளம் உருவாகும் எரிமலைத் தொடரானது நாற்பதாயிரம் கிலோ மீட்டர்.ஆனால் கடல் தளம் அழிவதாக கூறப் படும் கடல் பள்ளத் தாக்கின் நீளம் அந்த அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடாத தக்கது.
ஆனால் கண்டங்களை விட காடல் தளத்தின் தொன்மையாது குறைவாக இருப்பதற்கு கடல் தளமானது புதிதாக உருவானதால் பூமியானது விரிவடைந்து இருப்பதற்கு சிறந்த சான்றாக இருப்பதும் குறிப்பிடத் தக்கது .
####
முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய கண்டங்களை சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
அனால் இவ்வாறு புதிதாக உருவாகும் கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிவதற்கு அந்த கடல் பகுதியியல் கடல் பள்ளத் தாக்குகள் எதுவும் இல்லை.
இதன் மூலமாகவும் பூமியானது புதிய கடல் தள உருவாக்கத்தால் விரிவடைந்து கொண்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக கடல் தளத்தையும் கண்டங்களையும் நகர்த்தும் அளவுக்கு பூமியில் செயல் படும் விசை குறித்து இன்று வரையிலும் திருப்திகரமான விளக்கம் கூறப் பட வில்லை.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அத்துடன் அண்டார்க்டிக் கண்டதுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,நம்பப் படுகிறது. அதன் பிறகு,இந்த இரண்டு கண்டங்களும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது, இந்த இரண்டு கண்டங்களும்,ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ,அமைந்து இருக்கிறது. எனவே ,இந்த இரண்டு கண்டங்களும் ,இரண்டு தனித் தனியான கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும்,இடையில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி,நாசாவைச் சேர்ந்த புவியியல் வலுனர்கள் ஒரு வரை படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வரை படத்திலும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதே போன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது,தனித் தனியாகக் கடல் தளங்களுடன்,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அவ்வாறு,இந்த இரண்டு கண்டங்களும்,தனித் தனியாகக் கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையே,உரசல் ஏற்பட்டுப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தொடர்ச்சியாகக் கடல் தரையில் நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த,1963 ஆம் ஆண்டு முதல் ,1998 ஆம் ஆண்டு வரையிலான ,35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,ஒரு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள். ஆனால், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு ,இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கண்டங்கள்,நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது,வடஅட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால்,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல் தளமானது, தனித் தனியாகப் பிரிக்கப் படாமல், ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.
அதன் அடிப்படியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியை,’’வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்று,புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துப் படி,அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது சில லட்சம் ஆண்டுகளாகவும் அங்கிருந்து தொலைவில் செல்ல செல்ல கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது பல கோடி ஆண்டுகள் தொன்மையானதாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில்,அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளாக புனித பீட்டர் பாறைத் தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை அமெரிக்க புவியியல் வல்லுனரான 'ராண்டல் ரைட்' கண்டு பிடித்து இருக்கிறார்.
தொன்மைப் பாறைகளின் வயதை மதிப்பிட்டதன் மூலம் பூமியின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள்'' என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலையில்,புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்தது கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம், பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கடல் தளம் நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
எனவேதான் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியான நிலா அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல் கடல் தளமானது ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.
இதே போன்று ஐரோப்பாவின் கடற் கரையோரப் பகுதிகளில் ,காணப் படும் , ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரியின் புதை படிவங்களும்,அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிப் பகுதியில், ''ஆல்வின்'' என்ற ஆழ் கடல் மூழ்கிக் கலன் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலமாகவும் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
--விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments