Posts

Showing posts from July, 2022

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு பலூனைப் போன்று பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை வரைந்த பொழுது அதில் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்கில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு கடற் கரை ஒர பகுதியும் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் புறம் உள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு கடற் கரை ஒர பகுதியும் ஒன்றில் ஒன்று பொருந்தி இருப்பதைக் கவனித்தனர். இந்த வினோத அமைப்பானது ''மேட்சிங் கோஷ்ட் லைன்'' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணையானது இருந்திருக்க வேண்டும் என்று கருதினர். அதன் பிறகு 1912 ஆம் ஆண்டு ,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ,இந்த இரண்டு கண்டங்களிலும் .இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடற் பகுதியில் வாழ்ந்த,மெசோ சாரஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக...