A BRIEF HISTORY OF THE EARTH-BY SCIENTIST.G.PONMUDI.
பூமியின் சுருக்கமான வரலாறு.
ஒன்று-
எகிப்து நாட்டு இளவரசி கிளியோ பாட்ரா வாழ்ந்த அரண்மனை தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை அந்த நாடு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இரண்டு-
தமிழகத்தில்,மாமல்ல புரக்க கடற் கரையில் ஏழு கோவில்கள் இருந்ததாக வரலாற்றுக்கு குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் தற்பொழுது அங்கே ஒரே ஒரு கோவில்தான் இருக்கிறது.
இந்த நிலையில்,கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த பொழுது,கடலானது ஒரு கிலோ மீட்டர் வரை பின் வாங்கிச் சென்றது.அப்பொழுது,அந்தப் பகுதியில்,கட்டிட இடிபாடுகள் இருந்ததை சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கண்டனர்.அதனைத் தொடர்ந்து இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த இடிபாடுகளானது கட்டிட இடிபாடுகள் என்று உறுதி செய்து இருக்கின்றனர்.
தற்பொழுது அந்த இடிபாடுகளானது,கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
இதே போன்று பிரான்ஸ் நாட்டுக்கு கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 120 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் ஒரு கடலடிக் குகையில் கற்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் இருப்பதை அந்த நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்தக் கடலடிக் குகையானது அதனைக் கண்டு பிடித்த ஹென்றி காஸ்குயர் என்பவர் பெயரால் அழைக்கப் படுகிறது.
இதே போன்று, பிரிட்டிஷ் நாட்டு கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து 100 அடி ஆழத்தில் கற்கால மனித இனத்தைச சேர்ந்த நியாண்டர்தால் மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் அவர்கள் பயன் படுத்திய வேட்டைக் கருவிகள் மற்றும் மாமத் என்று அழைக்கப் படும் யானைகளின் எலும்புக் கூடுகளை,பிரிட்டிஷ் நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்தக் கடலடி நிலமானது ''டோகர் லேண்ட்'' என்று அழைக்கப் படுகிறது.
மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில்,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணமாகிறது.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவானது, வளி மண்டலத்தில் கலப்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது உயர்வதாகவும், அதனால் பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதியில் இருக்கும் பனி அடுக்குகள் உருகி நீராகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கமானது தவறான விளக்கம் என்பது சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக புளோரிடா மாகாணக் கடல் பகுதியில்,சரிவான கண்டத் திட்டுப் பகுதியில்,அறுநூறு அடி ஆழத்தில்,அக்ரோ போரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் படும்,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற குறிப்பாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடிய பவள உயிரினங்களின் திட்டுகள் இருப்பதை அந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அந்த உயிரினமானது எப்பொழுது இறந்து படிவங்களாகின என்று ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அந்த பவளங்களானது,பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமான, ''குவாட்டனாரி கால கட்டத்தில்'' ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் இறந்து புதை படிவங்களாகி இருப்பது தெரிய வந்தது.
இதே கால கட்டத்தில்,வட துருவ ஆர்க்டிக் பணிப் பிரதேசத்தில்,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்களானது ,பனிப் பொழிவால் அழிந்து இருப்பதுடன் அதன் காரணமாக அதனை உண்டு வாழ்ந்த பனி யானை இனமும் அழிந்து இருப்பதாக,கோபன் ஹேகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு ஒரே கால கட்டத்தில், பனிப் பொழிவும்,கடல் மட்ட உயர்வும் ஏற்பட்டு இருப்பதன் அடிப்படையில், கடல் மட்ட உயர்வுக்கு, துருவப் பகுதி பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இந்த நிலையில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கலகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவ் ஜாக்கப்சன்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு மேலே இருக்கும் கடல் நீரின் அளவை விட, மூன்று மடங்கு அதிக அளவிலான நீர்,பூமிக்கு அடியில் ''ரிங்வூடைட்'' என்ற படிக வடிவில் இருக்கிறது என்றும் அதன் அடிப்படையில் அவர்,கடல் நீரானது பூமிக்கு அடியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று,நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில்,எண்ணெய் எடுப்பதற்காக,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில்,ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரவலாக வாழ்ந்த ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் பனை மர உயர தாவர உண்ணி டைனோசரின் எலும்புத் புதை படிவம் இருப்பதை அந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்த்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன் பீட பூமி'',எப்பொழுது உருவாகியது என்று அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுநர்கள், அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்த எரிமலைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது,அதில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்னர்.அதன் அடிப்படையில், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கடலடி பீட பூமியானது, கடல் மட்டத்துக்கு மேலே ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் அடிப்படையில்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்று இருப்பதும் ,அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த இருப்பதும்,அதனால் கண்டங்களும் தீவுகளும் ஆழமான கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
ஆனால்,தற்பொழுது,அண்டார்க்டிகா,ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்த பிறகு, தனித்த தனியாகாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று புவியியல் வல்லுநர்கள் ஒரு விளக்கதைக்க கூறுகின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்கள் இணைந்து ''பாஞ்சியா'' என்ற ஒரு பெரிய கண்டம் இருந்ததாகவும்,அதைக் கண்டத்தை சுற்றிலும் ''பாந்தலாசா' என்ற ஆழமற்ற கடல் இருந்ததாகவும்,ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வளரக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்து.அதன் அடிப்படையில் இவ்வாறு கூறினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பாஞ்சியா கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் ''லாரேசியா'' மற்றும் ''கோண்டுவானா'' என்ற இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே வடக்கு தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும் அதனால்,பூமத்திய ரேகைப் பகுதியில்,''டெதிஸ்'' என்ற கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியா கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்ததால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையே,வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று, கோண்டுவானாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால் தற்பொழுது உள்ள தென் பகுதிக் கண்டங்கள் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
குறிப்பாக கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் ,ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையே,தென் அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்த நிலையில், தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்துடன்,ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும்,இன்றும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
ஆனால் ,கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.
இந்த நிலையில்,கண்டங்களை சுற்றிலும் தொடர்ச்சியாக,கடலுக்கு அடியில் எரிமலைகள் தொடர்ச்சியாக இருந்ததுடன்,அப்பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும், நில அதிர்ச்சியிலும் ஏற்படுவது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது.
அதாவது, அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ச்சியாக வெளிவந்து குளிர்ந்து இறுக்கிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் ஒன்றாக இருந்த கண்டங்களும் தனித் தனிப் பாறைத்த தட்டுகளாகப் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது.
இவ்வாறு ,கண்டத் தட்டுகள் நகரும் பொழுது,அவற்றின் ஒர பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது,அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதால் சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக,கண்டது தாட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி, வட அமெரிக்கக் கண்டமானது, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,இந்த இரண்டு கண்டங்களையும் பிரிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால்,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'',அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் அடிப்படியில்,அந்த எல்லை பகுதியானது, ''வரையறை செய்யப் படாத எல்லை பகுதி'' (undefined boundary)என்று அழைக்கப் படுகிறது.
அத்துடன்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருக்கும்,கரீபியன் எரிமலைத் தீவுக்கு கூட்டத்தில் இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட அமெரிக்கப் புவியியல் வல்லுநர்களால், கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருக்கும்,கரீபியன் தீவுக்கு கூட்டம் எப்படி எங்கே உருவானது என்ற கேள்விக்கு, அமெரிக்கப் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர்.
இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படும்,இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால், தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்து என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.
எனவே குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.
எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.
இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர். ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாதாதால்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இது எப்படி ஒரு சரியான விளக்கமாக இருக்க முடியும்?
உண்மையில், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.
அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.
இதன் மூலம், ஹைத்தி தீ வில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களால் கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதே போன்று,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில்,கண்டு பிடிக்கப் பட்ட, பனிரெண்டு வகையான டைனோசர்களின் எலும்புத் புதைப்படிவங்களுக்கும்,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால், இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின், வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதியும்,அதே போன்று ஆசியக் கண்டத்தின் வட பகுதியான, சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டது.
இந்த நிலையில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவில், ''ஏழு கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால்,பூமியானது,தன் அச்சில் இருப்பது மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது.எனவே டைனோசர்கள் குடிக்க நீர் கூட கிடைக்காமல் அனைத்தும் பனிக் கட்டி ஆகி விடும்.
அத்துடன் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால், தாவரங்களானது சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது,எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டம் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்று வரை விளக்கம் கூற இயல வில்லை.
ஒரு வேளை, டைனோசர்களானது பனி மான்களை போன்று,குளிர்கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்கலாம் அல்லது ,பனிக் கரடிகளைப் போன்று,குளிர் கால நீண்ட தூக்கத்தை மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
ஆனால் டைனோசர்களின் முட்டைகள் பெரிய ''ஆறு மாத காலம்'' தேவைப் படும் என்பது தெரிய வந்துள்ளது.அதன் பிறகும் இள வயது ,டைனோசர்கள் தனியாக இயங்க ''ஒரு ஆண்டு காலம்'' தேவைப் பட்டு இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே,டைனோசர்களானது ஆர்க்டிக் பகுதியில்,ஆண்டு முழுவதும் தங்கி வாழ்ந்து இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய ,முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது ''பத்து சென்டி கிரேட் டிகிரி'' ஆகும். அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ''வாத்து அலகு டைனோசரின்'' எடையானது ஏழு டன்,யானையை விட பல மடங்கு பெரிய டைனோசர்களின் முட்டைகளானது ''அடை காத்தல் '' மூலம் பொரிந்து இருக்காது.
எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது ,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் முட்டைகள் மற்றும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள்மூலம் உறுதியாகிறது.
எனவே கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,தீவுக் கண்டங்களிலும் ,பனிப் பிரதேசத்திலும்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,அதே போன்று,நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் கூட, கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,புவியியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
குறிப்பாக நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது, தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதன் அடிப்படையில்,அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா போன்ற தீவுக்கு கண்டங்களில் கண்டங்களில்.டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இந்த நிலையில்,ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் யோஷிதா ,ஜப்பானில் உள்ள மாச்சுஹிரோ நகரில் உள்ள சூடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்த பாறைக் குழம்பில் இருந்து வெளிவந்த நீர் (magmatic water) என்று தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் நிலவில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அந்த நீரானது.நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் என்றும், மேற்பகுதிக்கு வந்து பனிக் கட்டியாக மாறி இருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது.
அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததாள்ல் ,கடல் ஆழமானது.
அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் புவியின் மேற்பகுதிக்கு வந்ததால்,வளி மண்டலத்தின் அடர்த்தியும் அதிகமானது.
இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக்கு குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்தியதால் உருவான பாறைத்த தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது.
அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறைகளானது கடலின் மேற்பரப்பின் மேல் உயர்கிறது.
அதே போன்று பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத்த தட்டுகள் மேல் நோக்கி உயந்ததால்,கண்டங்கள் உருவாகின.கடலின் ஆழமும் அதிகரித்தது.
துருவப் பகுதிகளில் டைனோசர்கள் ஏன் அழிந்தன?
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததால், துருவப் பகுதிகளில் டைனோசர்கள் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு அடர்த்தியான காடுகள் உருவாகி இருந்தது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது தொடர்ந்து குளிர்ந்ததால் அதில் இருந்து பிரிந்த நீரானது கடலில் சேர்ந்ததால் கடலின் உயரமும் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்தது.
அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகியது.அதனால் காடுகள் அழிந்தது அதனால் அந்தக் காடுகளில் வாழ்ந்த டைனோசர் போன்ற விலங்கினங்களும் அழிந்தன.
கடல் தரையானது தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் கண்டங்களும் நிலையாக இருக்கும் நிலையில் நிலா அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கொள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து காணப் பட்டது.அதனால் அந்தப் பகுதியில் சிறிய அளவிலான கடற் கரை உருவாகி இருந்தது.அத்துடன் அந்தப் பகுதியில்,அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன.
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, ஜப்பான் நாட்டின் ஆலோஸ் செயற்கைக் கோள் மூலம், தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.அப்பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
இதே போன்ற,தரைப் மட்ட மாறுபாடுகளானது,ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைகளைச் சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது.
குறிப்பாக.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் அதிகரிக்கும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அதே போன்று, எரிமலைக்குள் இருந்து பாறைக்கு குழம்பு வெளியேறும் பொழுது,எரிமலையின் உயரம் குறையும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதியும் சில சென்டி மீட்டர் இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக,எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,இத்தாலி நாட்டில் ''லா அகுலா'' என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது.
அத்துடன்,அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து, எரிமலைகளில் இருந்து வெளிப் படும், ''ரேடான்'' என்ற வாயு கசிந்து இருப்பதையும், ஜியோவானி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.
இதே போன்று,ஜப்பான் நாட்டில்,ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியம் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது .
அத்துடன்,அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்த நாசாவைச் சேர்ந்த டாக்டர்.டிமிட்ரி ஒசொ னோவ், அப்பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து, கதிரியக்கத் தன்மை உடைய ''ரேடான்'' வாயு கசிந்து இருக்கலாம்.ரேடான் வாயுவானது கதிரியக்கத்தை தன்மை உடையதால்,காற்றில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப் பட்டு இருக்கலாம்,இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது.என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில், எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.
தற்பொழுது உயிர் வாழும் பெரிய விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய விலங்காக நீர் யானைகள் இருக்கின்றன.
சராசரியாக 1300 கிலோ முதல் 1500 கிலோ எடையுள்ள நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் மிதக்கவோ நீந்தவோ இயலாது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சிசிலி,கிரிட்டி,மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த விலங்கினம் எப்படி அந்தத் தீவுகளுக்குச் சென்றன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை.
மத்திய தரைக் கடல் தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனமானது ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து தோன்றி இருப்பதாக நம்பப் படுகிறது.
கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிய படி, நீர் யானைகள் மத்திய தரைக் கடல் தீவுகளைத் தற்செயலாக அடைந்த பிறகு ,தீவுகளில் குறைந்த அளவே உணவு கிடைத்ததால், புதிய சூழலுக்கு ஏற்பக் குள்ள வகை நீர் யானை இனமாக மாறி விட்டதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, தீவிற்கு சென்ற நீர் யானைகள் பல எண்ணிக்கையில் பெருகி இருக்க வேண்டும் என்றால், அதற்குக் குறைந்த பட்சம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய அளவுக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு நீர் யானைகள் சென்று இருக்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி நீர் யானையாவது அந்தத் தீவுகளை அடைந்து இருக்க வேண்டும்.
ஆனால் நீர் யானையானது பெரிய வகைப் பாலூட்டிகளான யானை மற்றும் திமிங்கிலங்களைப் போன்று கே முறையில் இனப் பெருக்கம் செய்கின்றன.
அதாவது எலி ,முயல் போன்ற சிறிய அளவுள்ள பாலூட்டிகளைப் போன்று, சிறிய அளவுள்ள பல குட்டிகளை ஈணுவதற்குப் பதிலாகப் பெரிய அளவுடன் ஒரே ஒரு குட்டிகளை ஈணுகின்றன.
ஆனால் நீர் யானைகள் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈணுவதும் அறியப் பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு தீவுக்கும் மரங்களில் தொற்றிய படி தற்செயலாகச் சென்ற நீர் யானைகள், வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பது அசாத்தியமானது.
எனவே மத்திய தரைக் கடல் தீவுகளான சிசிலி,கிரிட்டி,மால்டா,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாகக் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ஹிப்போபொடமஸ் லெமரெல்ல்லி, ஹிப்போபொடமஸ் மடகாஸ்கரியன்சிஸ், ஹிப்போபொடமஸ் லாலுமெல்லா என மூன்று இனக் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
நீர்ப்பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாத, குள்ள வகை நீர் யானை இனமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவுக்குக் குள்ள வகை நீர் யானைகளானது மூன்று முறை சென்று இருக்க வேண்டும் என்று விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை ,மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை என ஏழு முறை நீர் யானைகள் தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு அடைந்திருக்கும் என்பது அசாத்தியமானது.
அதன் பிறகு வழக்கத்துக்கு மாறாக ஏழு முறையும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பதும் அசாத்தியமானது.
எனவே மத்திய தரைக் கடல் தீவுகள் உள்பட மடகாஸ்கர் தீவில் காணப் படும் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் , கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பது நிரூபணமாகிறது.
( இதே போன்று மடகாஸ்கர் தீவில் சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள, எலும்புத் தகடுகளால் மூடப் பட்ட்டு இருக்கும், நீந்த இயலாத தாவர உண்ணி முதலையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த விலங்கு எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை)
பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகி இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டர் உயரத்துடன் இருக்கிறது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது நிரூபணமாகி இருக்கிறது.
தற்பொழுது கண்டங்களின் சராசரி உயரமானது நாலாயிரம் அடியாக இருக்கிறது.
இந்த நிலையில்,கடல் மட்டமானது,இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் அடிப்படையில் கடல் மட்டமானது நிலா மட்டத்தை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே எதிர் காலத்தில் நிலப் பகுதிகள் யாவும் கடல் மட்ட உயர்வால் மூழ்கடிக்கப் படும் எண்டபத்து தெரிய வந்த்துள்ளது.
ஆம்,பூமி ஒரு நீர்க்க கிரகமாக உருவகிக் கொண்டு இருக்கிறது.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
நன்றி!
அன்புடன் விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments