A BRIEF HISTORY OF THE EARTH-BY SCIENTIST.G.PONMUDI.
பூமியின் சுருக்கமான வரலாறு. ஒன்று- எகிப்து நாட்டு இளவரசி கிளியோ பாட்ரா வாழ்ந்த அரண்மனை தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை அந்த நாடு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இரண்டு- தமிழகத்தில்,மாமல்ல புரக்க கடற் கரையில் ஏழு கோவில்கள் இருந்ததாக வரலாற்றுக்கு குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் தற்பொழுது அங்கே ஒரே ஒரு கோவில்தான் இருக்கிறது. இந்த நிலையில்,கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த பொழுது,கடலானது ஒரு கிலோ மீட்டர் வரை பின் வாங்கிச் சென்றது.அப்பொழுது,அந்தப் பகுதியில்,கட்டிட இடிபாடுகள் இருந்ததை சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கண்டனர்.அதனைத் தொடர்ந்து இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த இடிபாடுகளானது கட்டிட இடிபாடுகள் என்று உறுதி செய்து இருக்கின்றனர். தற்பொழுது அந்த இடிபாடுகளானது,கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இதே போன்று பிரான்ஸ் நாட்டுக்கு கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 120 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் ஒரு கடலடிக் குகையில் கற்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் இருப்பதை அந்த நாட்டு தொல...