எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரை.
எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு
ஆய்வுக் கட்டுரையாக எழுதி வெளியிட வேண்டும் என்று நீ....ண்ட காலமாகவே
நினைத்துக் கொண்டு இருந்தேன்,இன்றுதான் நிறைவேறியது அந்த ஆசை.
புதை படிவ ஆதாரங்களின் அடிப்படியில்,கடந்த காலத்தில் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை.-விஞ்ஞானி.க.பொன்மு டி.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
தற்பொழுது,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்களானது,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான,வட துருவ ஆர்க்டிக் பகுதியில்,காணப் படுவதற்கு புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஏனென்றால்,ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகள் மூலம் இணைப் பெருக்கம் செய்யும் விலங்கினம் ஆகும்.
ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பெரிய, முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
ஆனால் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,வட அமெரிக்காவின் வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதி மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியில், ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரி ஆகும்.
தற்பொழுது புவியியல் வல்லுநர்கள்,கண்டங்கள் எல்லாம்,கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளத்துடன்,தனித்த தனிப் பாறைத்த தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புகின்றனர்.
குறிப்பாகக் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று நம்புகின்றனர்.
இந்தக் கருத்தின் படி, ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா மற்றும் சைபீரிய பகுதிகள் எல்லாம் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவக் கூடிய,அறுபத்தி ஆறரை டிகிரி வட அட்ச ரேகைப் பகுதியான, ஆர்க்டிக் வளைய பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாக நம்புகின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,யானைக்கு கூட்டத்தை விட, பல மடங்கு தாவர வகைகளை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டமும். அந்த டைனோசர் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் எப்படி உருவாகின என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனென்றால் பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும் அதே போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது.
இது போன்ற குறைந்த வெப்ப நிலையை டைனோசர்கள் எப்படி தாக்குப் பிடித்தன?மேலும் நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தாயாருது இருக்க முடியாது.
எனவே இது போன்ற சூழ் நிலையில், யானைக்கு கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டமும். அந்த டைனோசர் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் எப்படி உருவாகினபோன்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்தப் புதிர்களுக்கு விடை கூறும் வண்ணம் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு வேளை டைனோசர்களானது,பனி மான்களை போன்று குளிர் கால இடப பெயர்ச்சியை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் அல்லது பணிக் கரடிகளைப் போன்று, மாதக் கணக்கில் அரிதுயிலில் ஆழ்ந்து இருக்கலாம் என்றெல்லாம் நம்பினார்கள்.
ஆனால்,புளோரிடா மாகாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி எரிக்சன், டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களில் இருந்த, டைனோசர்களின் கருக்களில் இருந்த, பற்களில் இருந்த வளர்ச்சி வளையங்களை ஆய்வு செய்து,டைனோசர்களின் குஞ்சுகள் பொரிய, மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகி இருக்கலாம் என்றும் அதன் பிறகும் டைனோசர்களின் குஞ்சுகளானது ஓரளவு சுயமாக நடமாட ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இடஜன் மூலம் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது ஆண்டு முழுவதும் அங்கேயே வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் எப்படி வாழ்ந்தன என்பதுதான் புதிராக இருக்கிறது.
இது போன்று,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கும்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது குளிர் மற்றும் பணிப் பிரதேசங்களின் காணப் படுவதற்கு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரெட் வெக்னர், கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறினார்.
குறிப்பாக அவர்,ஒத்த கால நிலையில் வளரக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் அவர் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,அந்தக் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் அந்தக் கண்டத்துக்கு பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.
இந்த நிலையில்,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்து லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,இதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு .லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும் யுரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இதே போன்று தென் பகுதிக் கோண்டு வாணாக் கண்டமும், பல பகுதிகளாகப் பிரிந்து வட பகுதியை நோக்கி நகர்ந்தால் தற்பொழுது இருக்கும் புவியியல் அமைப்பு உருவானதாக வெக்னர் கூறினார்.
குறிப்பாகக் கோண்டு வாணாவின் மேற்குப் பகுதியில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, கோண்டு வாணாவின் கிழக்குப் பகுதியில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், ஆல்ப்ஸ் மலைத் தொடரானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததாக வெக்னர் கூறினார்.
இறுதியாக, தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
இதில் குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், இமய மலைத் தொடரானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததாக வெக்னர் கூறினார்.
ஆனாலும் கண்டங்கள் என் நகர்கின்றன கண்டங்களை நகர்த்தும் சக்தி எது என்ற கேள்விகளுக்கு வெக்னரால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.அத்துடன் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்ததாற்கான தடயங்களும் காணப் பட வில்லை.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்காக கப்பலில் பொருத்தப் பட்ட சோனார் கருவிகள் மூலம் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களைக் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.அப்பொழுது,கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதுடன் அந்தப் பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இவ்வாறு கண்டங்களானது, கடல் தளத்துடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக உருவாகி நகரும் பொழுது,பாறைத்த தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு பாறைத்த தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத்த தட்டானது, நகர்ந்து செல்லும் பொழுது, அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேற்பகுதிக்கு தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கை'' என்று அழைக்கப் படுகிறது.வெக்னரின் விளக்கமானது ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனாலும் இந்தக் கருத்தின் படி உண்மையில் நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தை புவியியல் வல்லுநர்களால் கூற இயல வில்லை.
உதாரணமாக இந்தக் கருத்தின் படி,பாத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களானது,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவானது நில நடுக்க கோட்டுக்கு வடக்கிலும், ஆஸ்திரேலியாக் கண்டமானது நில நடுக்க கோட்டுக்கு தெற்கிலும் இருப்பதால்,இந்த இரண்டு கண்டங்களும் தனித்த தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.அத்துடன் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளும் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில்,கடந்த 1963 ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்.உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு வரை படத்தை வெளியிட்டார்கள்.அந்த வரை படத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதே போன்று,கண்டத் தட்டுகளின் இயக்கம் பற்றி நாசா வெளியிட்ட வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில், சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, இந்த இரண்டு கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு,சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதலில் இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்த பிறகு அதே நாசா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில்,ஆஸ்திரேலியாக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, முன்னுக்குப் பின் முரணாக, அடிப்படை ஆதாரம் இன்றி,வெறும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கத்தைத் தெரிவித்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த நிலையில்,தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் புதிதாகக் கடற்கரை உருவாகி இருந்தது.அத்துடன் அந்தப் பகுதியில் அதுவரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்துக்கு மேலே தெரிந்தது.
எனவே தீவு ஏன் உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நிலாஅதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,வளைய வடிவில் சில சென்டி மீட்டர் உயரமுள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததை ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் ஆலோஸ் என்ற ஜப்பான் நாட்டின் செயற்கைக் கோள் படத்தில் பதிவாகி இருந்தது.
இதே போன்ற தரை மட்ட மாறுபாடுகளானது,ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைகளைச் சுற்றிலும்,உருவாகி இருப்பதையும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றிலும்,ஏற்பட்ட தரை மட்ட மாறுபாட்டுக்கு,டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது எரிமலைக்குள் நுழையும் பாறைக்கு குழம்பால் எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி இருக்கும் தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அதன் பிறகு எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையானது தாழ்வடைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி இருக்கும் தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.
இவ்வாறு ஒரு எரிமலையானது உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடுபள்ள வளையங்கள் உருவாக்குகின்றன என்று, எரிமலை இயல் வல்லுநர் டாக்டர் ஜூலியட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக, சிமிழு தீவுப் பகுதியானது மேல் நோக்கி உயர்ந்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இதைப் பட்ட பகுதியில் இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடந்த 10.01.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு கூட கண்டது தட்டுக்கு குகையின் அடிப்படையில்,புவியியல் வல்லுநர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
ஏனென்றால்,கரீபியன் தீவுக்கு கூட்டமானது, ஒரு பாறைத்த தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுநர்களால், அந்தப் பாறைத் தட்டானது, எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கூற இயல வில்லை.
ஏனென்றால் கண்டத் தட்டுக் கொள்கையின் படி,வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, முறையே வடக்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் வண்ணம்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலைப் பகுதி இருக்கிறது.
ஆனால்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலப் பகுதியானது பூமிக்கு அடியில் இருந்த ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும் கூறப் படுகிறது.
அப்பொழுது,பசிபிக் கடல் பகுதியில், குறிப்பாகத் தற்பொழுது கால பாகஸ் தீவு இருக்கும் இடத்தில் எரிமலைச் செயல் பாட்டால்,கரீபியன் தீவுக் கூட்டம் உருவாகிய பிறகு, ஒரு தனிப் பாறைத்த தட்டாக உருவாகிக் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்த இடை வெளிக்குள் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது 'பசிபிக் தோற்ற மாதிரி ' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்துக்கு முரணாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் இருக்கும் நிகர குவா நாட்டு மழைப் பகுதியில்,பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை இந்தியாவின் பீர் பால் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீ வத்சவ் என்ற தாவரவியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டால்,கரீபியன் தீவுக் கூட்டம் உருவாகி ஒரு பாறைத்த தட்டாக மாறி, கிழக்கு நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாகப் புவியியல் வல்லுநர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் ஆகும்.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுநரிகள்,கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு புதிய விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்தக் கருத்தானது 'அட்லாண்டிக் தோற்ற மாதிரி ' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் கரீபியன் தீவுக்கு கிழக்குப் பகுதியில்,அமைந்து இருக்கும்,ஆண்டிலியன் எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசைய நோக்கி, வளைவான வடிவில் உருவாகி இருக்கிறது.
இதற்குப் புவியியல் வல்லுநர்கள்,கரீபியன் பாறைத்த தட்டையானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத்த தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்ததால் உருவானது என்று நம்புகின்றனர்.
ஆனால் 'அட்லாண்டிக் தோற்ற மாதிரியை' முன்வைக்கும் புவியியயல் வல்லுனரலால் ஆண்டிலியன் எரிமலைத் தீவுக்கு கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
இந்த நிலையில் இன்னும் சில புவியியல் வல்லுநர்கள்,கரீபியன் தீவுக்கு கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாக்கி இருக்கலாம் என்ற விளக்கத்தையும் முன் வைத்து இருக்கின்றனர்.இந்தக் கருத்தானது ''இன் சிட்டு மாதிரி ' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், கரிபியன் தீவுக்கு கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு, எந்த ஒரு புவியியல் வல்லுனராலும், சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில்,ஹய்தி தீவில் கடந்த 10.01.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் சுனாமியால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,வளைய வடிவில் சில சென்டி மீட்டர் உயரமுள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படத்தில் பதிவாகி இருந்தது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக, ஹைத்தி தீவில் ,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாகக் கண்டத் தட்டுக் கொள்கையின் படி,வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, முறையே வடக்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கித் ,தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருக்கும்,கடல் தளங்களுடன்,தனித் தனியாக நகர்ந்து கொண்டு நகர்ந்து இருக்கிறது.
எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருந்து,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், இந்த இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருந்து,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம்,கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
0000
அட்லாண்டிக் கடல் தரையானது நிலையாக இருப்பதுடன் கடல் மட்டமும் பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது மேலும் சில முக்கிய ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக
அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக நீண்ட கடலடி மலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் மேற்பகுதிக்கு வரும் பொழுது குளிர்ந்து இறுகிப் புதிய கடல்தரையாக உருவாகி, எதிரெதிர் திசையை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்துக்கு முற்றிலும் முரணாக,தற்பொழுது கடல் தரை புதிதாக உருவாகிக் கொண்டு இருப்பதாகக் கூறப் படும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியிலேயே, பூமியின் தொண்மை என்று மதிப்பிடப் படும் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான புனித பீட்டர் புனித பால் பாறைத் தீவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் அட்லாண்டிக் கடல் தரையானது பூமி தோன்றிய காலத்தில் இருந்தே நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று,இத்தாலி நாட்டுக்கு கடற்கரையோரப் பாறைகளில்,தேனடையின் அச்சு போன்ற படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்தப் படிவுகளானது ஒரு வகை மெல்லுடல் கடல் உயிரினத்தின் கூடு என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இது போன்ற புதை படிவங்களானது. அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பத்தாயிரம் ஆதி ஆழத்தில் உருவாகி இருப்பதை,''ஆழ் கடல் எரிமலைகள்'' என்ற ஆவணப் படத்திற்காக கடலுக்குள் மூழ்கிப் படமெடுக்கும் கலங்களில் இருந்து செலுத்தப் பட்ட காமிரா பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம்,கடல் மட்டமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு ,முன்பு பத்தாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
0000
இதே போன்று,கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி?
ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.
அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாக தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.
எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.
0000
எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன?
லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார்.
அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார்.
மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும்.
எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.
சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவதிற்கு ஓட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது.
பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது.
தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.
கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும்.
எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் தனி வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன.
உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள்.
எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் தரை வழித் தொடர்பு வழியாக மண் புழுக்கள் எரிமலைத் தீவுகளை அடைந்திருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் உள்ள கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் மண் புழுவினம் காணப் படுகிறது.கெர்கூலியன் தீவானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலையின் உச்சிப் பகுதி ஆகும்.
இந்த நிலையில் கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.
அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் அந்தக் கடலடிப் பீட பூமியானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கூட கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளிலும் கூட இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.
இந்தக் கண்டு பிடிப்பனது , ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் காரணமாகக் கெர்கூலியன் கடலடிப் பீட பூமிக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
எனவே அந்தத் தரை வழித் தொடர்பு வழியாகவே மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் பீட பூமிப் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.
அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் அந்தப் பீட பூமியானது கடலுக்குள் மூழ்கிய பொழுது, மண் புழுக்கள் தற்பொழுது கடல் மட்டத்துக்கு மேலாக தீவாக இருக்கும் எரிமலையின் மேற்பகுதிக்கு வந்து இருக்கின்றன.
இடைப் பட்ட காலத்தில் மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் பரிணாம மாற்றத்தால் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் புதிய இன வகையாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கிறது.
இதே போன்று ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற எரிமலைத் தீவுகளுக்கும் வந்த மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் காலப் போக்கில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கின்றன.
0000
கடற்பசு,கடல் மட்டம்,மற்றும் கால நிலை மாற்றம்.
கடல் பசு என்று அழைக்கப் படும் பாலூட்டி விலங்கினம்,கடற் கரையோரத்தில் ஏழு அடி ஆழத்தில் உள்ள கடல் தரையில் வளர்ந்து இருக்கும் புற்களை உண்டு வாழும் ஒரு சாதுவான விலங்கு.
குறிப்பாகக் கடற்பசுக்கள் , வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதிக் கடல் பகுதியில் வாழ்கின்றன.கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் கடற் பசுக்கள் கடல் நீரைக் குடிப்பதில்லை,ஆறு மற்றும் குளத்தில் உள்ள நல்ல நீரையே குடிக்கின்றன.
அதே போன்று கடற் பசுக்கள் காற்றை சுவாசிக்கவும் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நீர்பரப்புக்கு மேல் மூக்கைத் திறந்து காற்றை சுவாகிக்கும்.நீருக்கு அடியில் சென்றதும் மூடி போன்ற தசையினால் மூக்கை மூடிக் கொள்ளும். அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் கடற் பசுவால் நீருக்குள் சுவாசிக்காமல் தாக்குப் பிடிக்க வல்லது.
கடற் பசுக்களின் உடற் செயலியல் மந்தமானது என்பதால் கடற் பசுக்கள் மெதுவாகவே இயங்கக் கூடியது.ஒரு நாளைக்க எட்டு மணி நேரம் புற்களை மேயும்.ஒரு நாளைக்கு நாற்பது கிலோ எடையுள்ள புற்களை உண்கின்றன.
கடற் பசுவில் இரண்டு இனங்கள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டோகோங் என்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானாட்டி என்றும் அழைக்கப் படுகிறது.
டோகோங் இனத்தில் ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் திமிங்கிலம் அளவுள்ள கடற் பசுக்கள் ,பசிபிக் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன,தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது.
டோகோங் இனத்தில் ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் கடற் பசுக்களின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் ஸ்விட்சர் லாந்து பகுதிகளில் டோகாங் வகை கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய கடற் பசுக்களின் புதை படிவங்கள் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம்,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டம் அமைந்து இருக்கும் அட்ச ரேகைப் பகுதியில் கூட, பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது புலனாகிறது.
அதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டதுக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.
அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையானது என்பதுடன், அந்தக் கடற் பசுக்கள் சிறிய அளவிலான தொடை எலும்புடன் வாழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது.அதனால் புல் தரைகள் காலியாக இருந்தது.அந்தக் காலத்தில் மரங்களில் பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த, ஒரு மூஞ்சூறு வகை விலங்கினமானது,தரையில் இறங்கி தாவரங்களை உண்டு வாழ ஆரம்பித்ததுடன்,பல வகையான வாழிடங்களிலும் வாழ ஆரம்பித்ததால் பல தகவமைப்புகளுடன் பல வகை பாலூட்டி விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றின.
அப்பொழுது தரைப் பகுதியில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஒரு விலங்கினம் ,ஆறு குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அடியில் இருந்த தாவரங்களை உண்டு வாழும் வாழ்க்கை வாழ்ந்ததில், கால்களை நடக்கப் பயன் படுத்துவதற்குப் பதிலாக உந்தி உந்தி நீந்தவும் நீர்ப் பரப்புக்கு மேலே எம்பவும் பயன் படுத்தியத்தில், காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகள் வளர்ந்து கடற் பசுவினம் தோன்றியது.
கடற்பசுவின் மூததையானது யானை,திமிங்கிலம்,மற்றும் ஹை ராக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு கொறித்துண்ணி விலங்கினத்தின் நெருங்கிய சொந்தம்.
எனவே கடற் பசுவின் தொன்மையான புதை படிவங்கள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது.
அத்துடன் மானாட்டி வகைக் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவில் குறிப்பாக புளோரிடா பகுதியிலும் கரீபியன் தீவுகளிலும் காணப் படுவதால்,மானாட்டி வகைக் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அட்லாண்டிக் கடலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, அமெரிக்கக் கண்டங்களை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில்,ஒரு கடற் பசுவின் தலைப் பகுதியின் புதை படிவங்களை ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார்.
தொல் விலங்கியல் வல்லுனர்கள் தொன்மையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்ற எதிர் பார்ப்புக்கு மாறாக இந்தக் கண்டு பிடிப்பு இருந்தது.
அப்படியென்றால் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அதாவது புதிய உலகம் என்று அழைக்கப் படும்,அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், அட்லாண்டிக் கடலில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி பயணம் செய்து.ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங் கின்
எலும்பு போன்ற புதை படிவங்களுடன்,காண்டா மிருகத்தின் புதை
படிவத்தையும்,டாக்டர்,டாரில் டொமினிக் என்ற தொல் விலங்கியல் வல்லுநர்
முக்கியமாக காண்டா மிருகமானது நீரில் நீந்த இயலாதா விலங்கு.
எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே ஜமைக்கா தீவில் டாக்டர் டாரில் டொமினிக், நாலு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, கடற் பசுவின் எலும்புப் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார்.
பிசோசைரன் என்று பெயரிடப் பட்ட அந்த விலங்கானது, நன்கு வளர்ந்த கால்களுடன் இருந்தது.அத்துடன் அந்த விலங்கானது நீர் வாழ் கடற் பசுவுக்கும் நிலத்தில் வாழ்ந்த நடக்கும் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்றும் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக நீர் யானையானது பகலில் நீர் நிலைகளில் நீருக்கு அடியில் தாவரங்களை உண்டும், இரவில் தரைக்கு வந்து தாவரங்களை உண்டும் வாழ்கிறது.அதே போன்று ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட பிசோசைரன் விலங்கும் நீர் யானையைப் போலவே, நீரிலும் நிலத்திலும் வாழ்ந்தது என்று டாக்டர் டாரில் டொமினிக் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள டுனீசியாவில்,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் உட் செவிப் பகுதியில் காணப் படும் எலும்பின் புதை படிவங்களை,டாக்டர் ஜூலியட் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.
குறிப்பாகக் கடற் பசுவின் உட்செவிப் பகுதி எலும்பானது தனித் தனியயுடன் இருக்கும் என்பதால்,அதனை ஆய்வு செய்த டாக்டர் ஜூலியட் பினாய்ட்,அந்த விலங்கு ஒரு கடற் பசுவின் எலும்பு என்றும்,அந்த விலங்குக்கு,சாம்பி கடல் பசு என்று பெயர் சூட்டினார்.
அத்துடன் அந்த காதுப் பகுதி எலும்பமைப்பின் படி, அந்த விலங்கானது நீரடி வாழ்க்கைக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று இருந்தது என்றும் டாக்டர் ஜூலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார்.
முக்கியமாக டுனீசியாவில் வாழ்ந்த விலங்கின் எலும்பு அமைப்பானது மிகவும் தொன்மையானது என்றும்,அந்த விலங்கின் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடற் பசுவானது, ஆப்பிரிக்கப் பகுதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில், அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவுக்கு நடக்கும் கடற் பசுக்களே சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு ஒரே காலத்தில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு பக்கமும் நடக்கும் கடற் பசுக்கள் இருந்திருப்பது புதிராக இருக்கிறது.
இதன் மூலம் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களுக்கு நடக்கும் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் மாநாட்டி வகைக் கடற் பசுக்கள் காணப் படுவதன் மூலமும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
000000000000000000000000000
புதை படிவ ஆதாரங்களின் அடிப்படியில்,கடந்த காலத்தில் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை.-விஞ்ஞானி.க.பொன்மு

இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங்

Comments