எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரை.
எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரையாக எழுதி வெளியிட வேண்டும் என்று நீ....ண்ட காலமாகவே நினைத்துக் கொண்டு இருந்தேன்,இன்றுதான் நிறைவேறியது அந்த ஆசை. புதை படிவ ஆதாரங்களின் அடிப்படியில்,கடந்த காலத்தில் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை.-விஞ்ஞானி.க.பொன்மு டி. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. தற்பொழுது,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்களானது,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான,வட துருவ ஆர்க்டிக் பகுதியில்,காணப் படுவதற்கு புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை. ஏனென்றால்,ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகள் மூலம் இணைப் பெருக்கம் செய்யும் விலங்கினம் ஆகும். ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பெரிய, முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை. ஆனால் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,வட அமெரிக்காவின் வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதி மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியி...