பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால், துருவப் பகுதிகளில் இன்றும் கூட பனி உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
துருவப் பகுதிகளில் இருக்கும் பனி உருகுவதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்றால்,அதே துருவப் பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது.
குறிப்பாக,உலகில் உள்ள பனிக் கட்டிகளின்,தொண்ணூறு சதவீதப் பனியானது,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கிறது.
இந்த நிலையில்,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அண்டார்க்டிக் கண்டத்தின் பனிப் படலங்களின் உயரம் அதிகரித்துக் கொண்டு இருப்பது ,நாசா விஞ்ஞானி டாக்டர் ஜே ஜேவாளி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில்,அண்டார்க்டிக் கண்டத்தில் ,உருகும் பனியை விட,பனிப் பொழிவால் உருவாகும் பனியானது,அதிகமாக இருப்பதாகவும்,எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டத்தில் ,இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது தவறான விளக்கம் என்று,டாக்டர் ஜே ஜேவாளி, தெரிவித்து இருக்கிறார்.
எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா?
அதற்கு முன்பு,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.
ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர்.
அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன ?
தற்பொழுது பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் பட்டாலும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம்,கடந்த காலத்தில்,கடல் மட்ட உயர்வும்,பனிப் பொழிவும்,ஒரே கால கட்டத்தில்,நடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாகக் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன் ,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,அமெரிக்காவில்,புளோரிடா மாகாணக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில்,நானூறு அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையை ஆய்வு செய்தனர்.
அக்ரோ போரா பால்மேட்டா என்று அழைக்கப் ப்படும்,அந்தப் பவள உயிரினங்களானது,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில்,வளரக் கூடியது.
எனவே, கடல் மட்டம் உயர்ந்தால்,அந்தப் பவள உயிரினங்கள் இறந்து விடும்.அப்பொழுது,அந்தப் பவளங்களால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருள்களானது திட்டுகளாகப் படிந்து விடும்.
அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையை ,அமெரிக்க நாட்டுப் புவியியல் வல்லுனர்கள்,ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையிள்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டதில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததால்,அந்தப் பவள உயிரினங்களானது,இறந்து படிவங்களாக உருவாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில்,இறந்து மட்கிக் கைக்கும்,தாவாரங்களின் பாகங்கள்,மகரந்தத் துகள்கள்,மற்றும் இறந்த விலங்கினங்களின் உடல் பாகங்கள்,அத்துடன், அந்த விலங்குகளின் வயிற்றில் இருந்த செரிக்காத உணவுப் பொருட்கள்,மற்றும்,விலங்கினங்களின் கழிவுகள்,ஆகியவற்றை ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர்,எஸ்கி வில்லெர்ஸ்லெவ் தலைமியிலான குழுவினர்,சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் அதிக அளவில் இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த பனி யானைகள் அந்த தாவரங்களை உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளானது, சத்துக் குறைவான புற்களை உண்டு வாழ்ந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் பிறகு ,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததாகவும்,பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்கள் அருகி விட்டதாகவும்,அதனால் சத்துக் குறைவான தாவரங்களை உண்ட பனி யானை இனமானது அழிந்து விட்டதாகவும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டமானது, உயர்ந்து இருப்பதுடன்,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே ,கடல் மட்டம் உயர்வதற்குப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ,தவறான விளக்கம் என்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, உண்மையில் கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,பூமிக்கு அடியில்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு மேலே இருக்கும் நீரை விட,மூன்று மடங்கு அதிக அளவு நீரானது,பூமிக்கு அடியில்,அறுநூறு கிலோ மீட்டர் ஆழத்தில்,இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
குறிப்பாக, அந்த நீரானது,ரிங்க்வூ டைட் என்று அழைக்கப் படும் பாறைப் படிக வடிவில் இருப்பதாகக் கண்டு பிடித்து இருக்கிறார்.
இதன் அடிப்படையில் அவர்,பூமிக்கு மேலே இருக்கும் நீரானது,பூமிக்கு அடியில் இருந்தே வந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முன்பு,பூமியில் இருக்கும் கடல் நீரானது,பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த, லட்சக் கணக்கான விண் பாறைகளில் இருந்த நீரால் உருவானது, என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,ஜப்பானில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த நீரை,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்.ஒரு பாட்டிலில் சேகரித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது,அந்த நீரானது,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது,அதில் இருந்து பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.
இதே போன்று,கடலுக்கு அடியில் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.
எனவே, கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கோடிக் கணக்கான ஆண்டு காலமாக,பூமிக்கு அடியில் இருந்து சுரந்த நீரால்தான், கடல் உருவாகி இருப்பதுடன்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் காரணமாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் கூட நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
அந்த நீர் கூட,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பரியான பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் ஆகும்.
முக்கியமாக,பூமியின் எடையில் எண்பது சதவீதம் மாக்மா என்று அழைக்கப் படும் பாறைக் குழம்பால் ஆனது.
அந்தப் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீரே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருக்கிறது.
இது போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெறுகிறது.
எனவே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,பூமிக்குள் இருந்து சுரக்கும் நீரானது,தொடர்ந்து கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக,பூமியில் இருக்கும் பனி மொத்தமும் உருகினால் கூட,கடல் மட்டமானது அதிக பட்சம்,240 அடி வரைதான் உயரும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
அப்படி கடல் மட்டமனது, 240 அடி உயர்ந்தால்,மூழ்கும்,கண்டங்களின் ஓரப் பகுதிகளுடன்,சில தீவுகள் மட்டுமே மூழ்கும்.
ஆனால் ,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமிக்கு அடியில் இருந்து உற்பத்தி ஆகும்,பாறைக் குழம்பு நீர் ஆகும்.
இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,மடகாஸ்கர் தீவில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியில் உருவான,குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த விலங்கால்,கடலின் மேற்பரப்பில் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
ஆனால்,மடகாஸ்கர் தீவோ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
எனவே,குள்ள வகை நீர் யானைகலானது,ஆப்பிரிக்கக் கண்டதிலிருந்து,தரைவழித் தொடர்பு மூலமாகவே,மடகாஸ்கர் தீவுப் பகுதியை அடைந்து இருக்க முடியும்,
எனவே,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கிறது.
புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளில்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது உறுதியாகிறது.
எனவே,இன்னும்,ஒரு கோடி ஆண்டு காலத்தில்,கடல் மட்டமானது, ஒரு கிலோ மீட்டர்
(3280) ,உயர்ந்தால், கடல் மட்டத்தில் இருந்து ,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கும்,கண்டங்கள் எல்லாம்,அதாவது ஏழு கண்டங்களும்,கடலுக்கு அடியில்,மூழ்கி விடும்.
கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
நீர் யானை இனமானது,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் ஆகும்.
நீர் யானைகளால், நீர்ப் பரப்பின் மேல், நீந்தவோ மிதக்கவோ இயலாது.
குள்ள வகை நீர் யானை இனமானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று இன வகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
முக்கியமாக,ஆப்பிரிக்கக் கண்டமும்,மடகாஸ்கர் தீவும்,இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குள்ள வகை நீர் யானைகள் எப்படி,மடகாஸ்கர் தீவுக்கு வந்தன என்பது புதிராக இருக்கிறது.
ஒரு வேளை,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,நீர் யானைகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.
ஏனென்றால்,மடகாஸ்கர் தீவில்,கண்டு பிடிக்கப் பட்ட மூன்று இன வகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மூன்று இன வகையைச் சேர்ந்த ,பெரிய அளவு நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த விளங்கினமாகும்.
எனவே,மடகாஸ்கர் தீவுக்கு,மூன்று முறை ,நீர் யானைகள் ,தற்செயலாகக் கடல் வழியாக, வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
As hippos are semi-aquatic, it is possible that they survived the 400 km (248 mi) trek across the channel, although presumably when the water was shallower and there were perhaps small islands along the way. It is possible that the three species of hippopotamus represent three distinct and successful colonizations of the island.
https://en.wikipedia.org/wiki/Malagasy_hippopotamus
ஆனால், இந்த விளக்கமானது, அசாதாரணமான விளக்கம் ஆகும்.
அதாவது,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,ஒரே ஒரு கர்ப்பிணி நீர் யானையானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,இரண்டு குட்டிகளை ஈன்ற பிறகு,அந்தக் குட்டிகள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து, மடகாஸ்கர் தீவில்,அந்த இனம் பெருகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
ஆனால்,நீர் யானைகளானது, வழக்கமாக ஒரே ஒரு குட்டிகளையே ஈனக் கூடியது.
A mother typically gives birth to only one calf, although twins also occur.
https://en.wikipedia.org/wiki/Hippopotamus
மிகவும் அரிதாக நீர் யானைகள் இரண்டு குட்டிகளை ஈனக் கூடியது.
எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று இன வகையைச் சேர்ந்த நீர் யானைகளானது,மூன்று முறையும் தற்செயலாக,மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,மூன்று முறையும்,வழக்கத்துக்கு மாறாக,இரண்டு குட்டிகளை ஈன்றதால்,மடகாஸ்கர் தீவில், மூன்று இனவகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புகள் காணப் படுகிறது, என்ற விளக்கமானது, இயற்க்கைக்கு முரணான விளக்கம் ஆகும்.
இதே போன்று,மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும்,சிசிலி,மால்டா,கிரிட்டி,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளிலும்,நான்கு வகையான ,குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்து இருப்பது,அந்தத் தீவுகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, அந்தக் குள்ள வகை நீர் யானைகளானது,ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து ,பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினங்கள் ஆகும்.
Several species of small hippopotamids have also become extinct in the Mediterranean in the late Pleistocene or early Holocene. Though these species are sometimes known as "pygmy hippopotami" they are not believed to be closely related to C. liberiensis. These include the Cretan dwarf hippopotamus (Hippopotamus creutzburgi), the Sicilian hippopotamus (Hippopotamus pentlandi), the Maltese hippopotamus (Hippopotamus melitensis) and the Cyprus dwarf hippopotamus (Hippopotamus minor).[20]
These species, though comparable in size to the pygmy hippopotamus, are considered dwarf hippopotamuses, rather than pygmies. They are likely descended from a full-sized species of European hippopotamus, and reached their small size through the evolutionary process of insular dwarfism which is common on islands; the ancestors of pygmy hippopotami were also small and thus there was never a dwarfing process.[20] There were also several species of pygmy hippo on the island of Madagascar (see Malagasy hippopotamus).
https://en.wikipedia.org/wiki/Pygmy_hippopotamus
எனவே, மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை,மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை,என ஏழு முறையும் ,தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, நீர் யானையானது,தீவுகளை ,அடைந்து இருக்க இயலாது.
அதன் பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈன்று,அந்தத் தீவுகளில்,குள்ள வகை நீர் யானை இனம் பெருகி இருக்க வாய்ப்பில்லை.
எனவே,மடகாஸ்கர் தீவு மற்றும் மத்திய தரைக் கடல் தீவுகளில்,காணப் படும், குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் ,மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும்,அதனால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக,விலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.
டைனோசர்களின் புதைப் படிவப் புதிர்கள்
தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலியா, போன்ற தீவுக் கண்டங்களில்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.
ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.
அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.
அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.
அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.
ஆனால், அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பப்னிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுயருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.
வெக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.
உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.
அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.
அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.
இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் அடிப்படையில் தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் குறிப்பாக மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் அரிசோனா பாலைவனப் பகுதியில், இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்களின் கற்படிவங்கள் மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் வாழக் கூடிய முதலைகளின் புதை படிவங்களும் காணப் படுவதற்கு,இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனா நிலப் பகுதியானது, அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,குறிப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கில், அதாவது தற்பொழுது கரீபியன் தீவு அமைந்து இருக்கும் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்ததால், அரிசோனா நிலப் பகுதியானது தற்பொழுது உள்ள மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காராணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வடகோடிப் பகுதிகள், கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கிறது.
இந்த நிலையில், வட அமெரிக்காவின் வடக்கில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள, கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் எலும்புப் புபுதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஆனால், டைனோசர்களானது முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினம் என்பதால், ஆர்க்டிக் பகுதியில் எப்படி டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி தற்பொழுது அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால்,கண்டத் தட்டுக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியும்,கடந்த ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள்,நகர்ந்து வந்து விட்டது.
இது போன்ற சூழலில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது.
ஏனென்றால்,ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பிரதேசத்தில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது,பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.இந்த நிலையில்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கும்,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியில் ,டைனோசர்களின் முட்டைகளின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற,வெப்பமான சூழல் இருந்திருக்கிறது.
அதே போன்று,டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பனிப் படலங்களுக்குப் பதிலாக, பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற, பசுமைக் காடுகளும் இருந்திருக்கின்றன.
இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகளானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.
குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.
ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை போன்ற ஊர்வன வகைப் பிராநிகலானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.
எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.
குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.
ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.
எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன, என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,இறந்த தாவரங்களின் பாகங்களை,ஆறு மாத காலம் உண்டு, உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.
இந்த விளக்கத்தில் ஒரு சிக்கலும் இருக்கிறது.அதாவது டைனோசர்களானது ,ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு அழிந்ததற்கு,
ஒரு விண் பாறையானது ,பூமியைத் தாக்கியதால்,எழுந்த புழுதியானது,பல மாதங்கள் சூரியனை மறைத்ததாகவும்,அதனால் ,டைனோசர்கள் உண்டு வாழ்ந்த தாவரங்கள் அழிந்ததாகவும்,அதனால்
பட்டினியால் டைனோசர் இனமே அழிந்ததாகவும்,விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில்,ஆர்க்டிக் பகுதியில் மட்டும் எப்படி , டைனோசர்கள் ஆறு மாத காலம்,சூரிய ஒளியின்றி,மட்கிய தாவரங்களை,டைனோசர்கள் உண்டு உயிர் பிழைத்தன என்று கூறப் படும் விளக்கமானது ஒன்றுக் கொன்று முரணாக இருக்கிறது.
முக்கியமாக , ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.
இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.
எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன,என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.
இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.
இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து அறியப் படாமல் இருந்தது.
இந்த நிலையில்,அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், டைனோசர்களானது,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.
இந்த நிலையில்,எரிக்சன், ,டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.
அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார்.
குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.
எனவே,டைனோசர்களானது,தங்களின் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.
அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.
எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.
இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அது போன்ற டைனோசர்கள், முட்டைகளை அடை காக்கும் சாத்தியம் இல்லை.
எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.
எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.
எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அதன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.
அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.
உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில், பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே அதிக வெப்பம் நிலவியதற்குக் காரணம், கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.அதனால் பூமியில் கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததும் காரணம்.
இதற்கு ஆதாரம்.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் புதை படிவங்கள்.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடல்டிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங் கடல் பகுதியில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதன் மூலம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.
தற்பொழுது கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக் நம்பப் படுகிறது.அவ்வாறு நகரும்பொழுது கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுவதாக நம்பப் படுகிறது.
ஆனால் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல்,ஒரே தொடச்சியாக இருக்கிறது.அத்துடன் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.
இதற்கு ஆதாரம்.
உலக அளவில ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட வரை படத்தில்,இந்தியா,ஆஸ்திரேலியா,மற்றும் வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியானது,தொடர்ச்சியாக நில அதிர்சிகளால் பிரிக்கப் படாமல், கடல் தளமானது தொடர்ச்சியாக இருக்கிறது.
இதன் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே அண்டார்க்டிக் ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களிலும் கியூபா,மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்ட தாழ்வாக இருந்ததும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம்.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது,கடலின் பரப்பளவும் குறைவாக
இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளில் ,பசுமைக் காடுகள் உருவாகி இருக்கிறது.அதனால் டைனோசர் கூட்டமும் அங்கு வாழ முடிந்தது.
அதன் பிறகு,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக ,பூமிக்குள் இருந்து சுரந்த நீரானது ,கடலில் தொடர்ந்து கலந்ததால்,கடல் மட்டம் உயர்ந்ததுடன்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்தது,அத்துடன் டைனோசர்களும் அழிந்தது,அத்துடன் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களும் உருவாகின.
Comments