எனது ஆய்வுப் புத்தகம்-
chapter-1/6 - கண்டத் தட்டு விளக்கம் தவறு கண்டத் தட்டு விளக்கம் தவறு என்பது புதைபடிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலி யா, போன்ற தீவுக் கண்டங்களி ல்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார். அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்...