எனது ஆய்வுப் பொருள் பற்றி...

About the research

FACT FILE

எனது ஆய்வுப் பொருள் பற்றி...

எனது ஆய்வுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள்.

புதை படிவப் புதிர்கள்.

கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது.
அதே போன்று, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களும் ,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது.
முதலில் கூறப் பட்ட விளக்கம்.

புயல் ,சூறாவளியின் பொழுது,காட்டாற்று வெள்ளத்தால்,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் தீவுகளுக்கும் மற்ற கண்டங்களுக்கும் பரவி இருக்கலாம்.

புதை படிவப் புதிர்களுக்கு அல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம்.
முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து  ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

வெக்னரின் விளக்கம் நிராகரிக்கப் பட்டதற்கான காரணம்.
கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் காணப் பட வில்லை.

வெக்னரின் விளக்கத்தை முற்றாக நிராகரிக்க முடியாததற்கான காரணம்.

வட துருவப் பகுதியில்,குறிப்பாக ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் பனித் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

வட துருவப் புதை படிவப் புதிருக்கு வெக்னரின் விளக்கம்.

முன் ஒரு காலத்தில் அந்தப் பனித் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு,மெதுவாக நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்திருக்க வேண்டும்.

புதிய விளக்கம்-கண்டத் தட்டு நகர்ச்சி.

இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்க நாட்டின் கப்பல் படையில் பணியாற்றிய புவியியல் பேராசிரியரான டாக்டர் ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல்களின் பயணத்துக்கு பயன் படுத்துவதற்காக,சொனார் கருவி மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களைப் பற்றிய வரை படத்தைத் தயாரித்த பொழுது,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைத் தொடர் இருப்பதைக் கண்டு பிடித்தார்.

அதன் அடிப்படையில்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்குப் பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,டாக்டர் ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்களுக்கு பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை.
பிளேட் டெக்டானிக் தியரியின் படி,வட துருவப் பகுதியில் இருக்கும் அலாஸ்கா மற்றும்,சைபீரியாப் பகுதிகளானது,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாகக் கூறப் படுகிறது.
இந்த நிலையில்,அலாஸ்காவின் வட பகுதியிலும்,சைபீரியாவின் வட பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையைச் சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பூமியானது, தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ச்சியாக இரவும்  நீடிக்கிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக பலமாதங்கள், இரவு நீடிக்கும் பொழுது சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது.எனவே துருவப் பகுதிகளில் டைனோசர்கள் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.

முக்கியமாக டைனோசர்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்கு, முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட், வெப்ப நிலை தேவை.

எனவே டைனோசர்கள் காலத்தில்,துருவப் பகுதிகளில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே, அதிக வெப்ப நிலை நிலவியிருக்கிறது.

கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர் மற்றும் மரங்களின் புதைபடிவங்கள்.

நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,எண்ணெய் எடுப்பதற்காக,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி டைனோசரின் புதை படிவங்களை, ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

இதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும்,கெர்கூலியன் பீடபூமிப் பகுதியில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,இருந்து மரங்களின் கருகிய பாகங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதை,பிரிட்டிஷ் நாட்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

புதிய புதை படிவங்களுக்கு எனது புதிய விளக்கம்.

டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்ட்டமனது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.அதன் வழியாக டைனோசர் உள்பட மற்ற விலங்கினங்களும் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பராப்பளவு அதிகரித்தால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறிந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாக்கி இரயுக்கிறது.
டைனோசர்கள் காலத்தில், பூமியின் அச்சில் சாய்வு ஏற்படாமல் இருந்திருக்கவும் சாத்தியம் இருக்கிறது.
அதன் பிறகு, பூமிக்கு அருகில் சென்ற ஒரு குறுங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டும் இருக்கவும் சாத்தியம் இருக்கிறது.

எனது விளக்கத்திற்கு புவியியல் ஆதாரம்.

கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இந்த நிலையில்,உலகெங்கும் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து புவியியல் வல்லுனர்கள் ஒரு வரைபடத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

அதன் அடிப்படையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை, என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளங்களுடன்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளத்திலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
அதன் அடிப்டையில்,அந்தக் கடல் தளப் பகுதியை ‘வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில்,கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தரையானது நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் நிரூபணமாகி இருக்கிறது.

கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு காரணம் என்ன?

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவாகும் பொழுது,அதில் இருந்து பிரியும் வாயுக்களும் நீரும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.
நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடிப்புகளால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.இதே போன்று கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் சுனாமிகள் உருவாகுகிறது.

























Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?