நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.

கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது.

இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச் சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது.

The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 76 years from 1986. The gravitational pull of the major planets alters the orbital period from revolution to revolution.
http://nineplanets.org/halley.html

ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் மூலம்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.



Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?