கிரகங்கள் ஏன் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?

நிலவானது, சூரியனை, பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு நிலவானது, ஏன் பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, என்பதற்கு இது வரை விளக்கம் கூறப் படவில்லை. இவ்வாறு நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நிலவானது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமியானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,விண்வெளியில் வினாடிக்கு இரு பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனைத் தொடர்ந்து கொண்டு இருப்பதே காரணம். அதாவது விண்வெளியில் சூரியனானது, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனை, மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை ,சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் திசைக்கு செங்குத்து திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,கிரகங்கள் எல்லாம் சூரியனை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாக அறுபத்தி இரண்டு டிகிரி கோ...