மண்ணிலிருந்து... விண்ணுக்கு...

மண்ணிலிருந்து... விண்ணுக்கு...


இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை.
எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை.
அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது.
அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது.
அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது.
வேத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது.
இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார்.
பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்கும் பொழுது,பொருள்கள் சிறிது நகர்ந்து சென்ற பிறகு, மறுபடியும் ஓய்வு நிலையை, அதாவது இயல்பு நிலையை அடைகிறது.என்றும் அரிஸ்டாட்டில் யோசித்தார்.
இதே போன்று,ஒரு காலத்தில் சூரியனும் நிலாவும் கூட அசைவின்றி இருந்த பிறகு, கடவுள் அதனை முடுக்கிய பிறகு, எல்லாம் கடவுளின் சித்தப் படி, முன் கூட்டியே திட்டமிட்ட படி,கட்சிதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது.
பூமியைப் படைத்து, அதில் மனிதனையும் படைத்ததால், பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப் பட்டது.
காலப் போக்கில் விவசாயத்தில் நல்ல விளைச்சல் ஏற்படுவதற்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பு அறியப் பட்டது.பருவ காலங்கள் சீராக மாறிவருவது அறியப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுக்கும், கிரகங்களின் இடமாற்றதுக்கும், தொடர்பு இருப்பதாக நம்பப் பட்டது.
எனவே கிரகங்களின் இயக்கத்தைக் கணிப்பதில் அதிக ஆர்வம் எழுந்தது.குறிப்பாக இரவில் பின் புல நட்சத்திரங்களுக்கு இடையில் கிரகங்கள் நகர்ந்து கொண்டு இருப்பது கவனிக்கப் பட்டது.
ஆனாலும் பூமியை மையமாகக் கொண்டு சூரியன் ,சந்திரன் மற்றும் கிரகங்கள் சுற்றி வரும் கொள்கையின் அடிப்படையில், கிரகங்களின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் இருந்தது.
இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய கோப்பர் நிகஸ் என்ற விஞ்ஞானி ,பூமி உள்பட் எல்லாக் கிரகங்களும்,சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார்.
ஆனால் இந்தக் கருத்தானது மதக் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததால்,வெளியிட அஞ்சினார்.ஆனாலும் தனது விளக்கத்தை புத்தகமாக வெளியிட்டார்.
ஆனாலும், அந்தக் காலத்தில் அவ்வளவு பரவலாகப் பேசப் படாத மொழியில் அந்த நூல் இருந்ததால்,அவரின் விளக்கமானது பொது மக்களிடையே அவ்வளவாகப் பரவவில்லை.
இருந்தாலும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகோ பிராகே என்பவர்,கோப்பர் நிகசின் கருத்தை பொய்யென நிரூபிப்பதற்காக ,அரசரிடம் உதவி பெற்று,ஒரு தேவாலயத்தின் கோபுரத்தின் மேல் இருந்தபடி தினமும் இரவில்,பின்புல நட்சத்திரங்களுக்கு இடையில் நகர்ந்து செல்லும் கிரகங்களின் இடங்களைக் குறித்துப் பதிவேடுகள் தயார் செய்தார்.
அப்பொழுது,அவர், செவ்வாய் கிரகமானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதன் வேகம் சிறிது குறைவதும்,பின்னர் நிலையாக நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த பிறகு, மறுபடியும் மேற்கு திசையை நோக்கி நர்வதையும் அறிந்தார்.
இவ்வாறு செவ்வாய்க் கிரகமானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது, சிறிது தயங்கி நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையில் நகர்ந்த பின்னர், பழையபடி மேற்கு திசையை நோக்கி நகர்வதற்கு காரணம் என்ன என்று டைகோ பிராகே யோசித்தார்.
ஆனால் அந்த நிகழ்வுக்கு அவரால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவரிடம் ,ஜோகன்னஸ் கெப்ளர் என்ற இளைஞர் உதவியாளர் பணிக்கு சேர்ந்தார்.
கெப்ளர்,கோப்பர் நிகசின் சூரிய மையக் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்டவர்.
டைகோ பிராகே திடீரென்று இறந்ததும் அவர் தயாரித்த ஆவணங்கள் எல்லாம் கெப்ளரின் கைக்கு வந்தது.
அதனை ஆய்வு செய்த கெப்ளர்,கோள்கள் எல்லாம் சூரியனை,ஒரு முனையில் குவியமாகக் கொண்டு , நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார்.
அதற்கு முன்பு எல்லோரும், கோள்கள் எல்லாம், வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பினார்கள்.
அவ்வாறு கிரகங்கள் சூரியனை ,வெவ்வேறு நீள் வட்டப் பாதையில், வலம் வரும் பொழுது,குறிப்பாக வளையும் இடத்தில்,பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று முந்துவதால்,பூமியில் இருந்து பார்ப்பதற்கு, செவ்வாய் கிரகமானது முதலில் முந்துவதைப் போன்று சென்ற பிறகு, பின்தங்குவதை அறிந்து கொண்டார்.
அத்துடன் கிரகங்கள் எல்லாம்,சூரியனை நெருங்கும் பொழுது வேகமாகவும்,சூரியனை விட்டு விலகி தொலைவுக்கு சென்ற பிறகு மெதுவாகவும் செல்வதையும்,கெப்ளர் அறிந்தார்.
ஆனால் ஏன் அவ்வாறு கிரகங்கள் சூரியனைச் சுற்றுகிறது, என்று கெப்ளர் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில், கலிலியோ தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்தார்.அப்பொழுது அவர் நிலவைப் போலவே,வெள்ளி கிரகத்திற்கும் பிறைகள் தோன்றி வளர்வதை அறிந்தார்.
இதன் அடிப்படையில், வெள்ளிக் கிரகமானது,சூரியனை மையமாகக் கொண்டு வலம் வந்து கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டார்.அதே போன்று எல்லாக் கிரகங்களும், சூரியனையே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டார்.
இந்தக் கருத்தைக் கூறியதற்காக, அவர் மதக் கோட்பாட்டாளர்களால் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டு,இறுதிக் காலத்தில் மருத்துவ உதவிகள் கூட மறுக்கப் பட்ட நிலையில், பார்வையிழந்த நிலையில் உயிரிழந்தார்.
கலிலியோ மேலும் பல சோதனைகளைச் செய்து அரிஸ்டாடிலின் கருத்தைத் தகர்த்தார்.
குறிப்பாக,அரிஸ்டாட்டில்,அதிக எடையுள்ள பொருள் வேகமாகவும்,குறைந்த எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும் என்று கூறியிருந்தார்.
ஆனால் கலிலியோ ஒரு சாய்வான மரப் பலகையில்,வெவ்வேறு திடமுள்ள கோளங்களை உருளச் செய்து, அந்தக் கோளங்கள் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை எடுத்துக் காட்டினார்.
அதன் அடிப்படையில், எல்லாப் பொருள்களும் ஒரே வேகத்தில்தான், பூமியை வந்தடையும் என்பதை எடுத்துக் காட்டினார்.
ஆனால் ஏன் அவ்வாறு பொருள்கள் பூமியை நோக்கி நகர்கின்றன என்று அவர் யோசிக்க வில்லை.
இந்த நிலையில், நியூட்டன், பொருளின் இயல்பு நிலை பற்றி,அரிஸ்டாட்டில் கூறியதற்கு முற்றிலும் முரணாக விளக்கத்தைக் கூறினார்.
உதாரணமாக, ஒரு இடத்தில் இருக்கும் பந்தை ஒருவர் தள்ளி விட்டால் அந்தப் பந்தானது நகர்ந்து சென்ற பிறகு இறுதியில் ஒரு இடத்தில் நின்று விடும்.அதாவது இயல்பு நிலையை அடையும்.என்று அரிஸ்டாட்டில் கருதினார்.
ஆனால் நியூட்டன் அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக,இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பொருளின் மேல் புற விசை ஒன்று செயல்படாத வரையில் அந்தப் பொருளானது தொடர்ந்து அதே வேகத்தில்,அதே திசையில் சென்று கொண்டு இருக்கும் என்று கூறினார். 
மற்றபடி ஓடும் பந்தை நிறுத்துவது, உராய்வு போன்ற தடைதான் காரணம் என்பது நியூ ட்டனின் விளக்கம்.
இந்த நிலையில்,ஐசக் நியூட்டன் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார்.
அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் மறைந்த பிறகு மறபடியும் வானில் எழுந்து நகர்ந்ததைக் கண்டார்.
அதன் அடிப்படையில் சூரியனுக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போன்று பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதையும் நியூட்டன் புரிந்து கொண்டார்.
அதன் அடிப்படையில், கிரகங்கள் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும், ஈர்ப்பு சக்தியே காரணம் என்பதை நியூட்டன் அறிந்து கொண்டார்.
எனவே, ஏன் நிலா பூமியின் மேல் விழ வில்லை என்று நியூட்டன் யோசித்தார்.
அப்பொழுது,ஒரு மலையின் மேல் இருக்கும் ஒரு பீரங்கியில் இருந்து வேகமாகச் செல்லும் குண்டானது அருகில் விழும்,ஆனால் அந்தக் குண்டின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் குண்டானது அதிக தொலைவுக்கு பயணம் செய்து விழும்.
இந்த நிலையில்,மலையின் உயரமும், குண்டின் வேகமும் மென்மேலும் அதிகரிக்கும் பொழுது,ஒரு கட்டத்தில் அந்தக் குண்டானது,பூமியில் விழாமல்,பூமியை சுற்ற ஆரம்பித்து விடும்,என்றும் அதே போலதான் நிலவும் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.
அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலாவை, பூமியின் ஈர்ப்பு வியையானது, தொடர்ந்து இழுப்பதால்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று விளக்கம் கூறினார்.
இந்த நிலையில், கிரகங்களின் இடங்களை, ஓரளவு துல்லியமாகக் கணிக்க முடிந்தது,குறிப்பாக ஒரு கிரகம் எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை வட்டப் பாதையில் சுற்றாமல், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாகக் கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறினார்.
ஆனாலும் புதன் கிரகத்தின் இயக்கத்தை கணிப்பதில் சிரமம் இருந்தது.அதாவது புதன் கிரகமானது எப்பொழுது எங்கே இருக்கும் என்று கணித்துச் சொல்ல முடியாமல் இருந்தது.
அத்துடன் புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும்,சூரியனைச் சுற்றி வந்த பிறகு,புறப்பட்ட இடத்திற்கு வராமல் சிறிது இடம் மாறியது.
அதாவது,புதன் கிரகமானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் மாறியது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், புதன் கிரகமானது சூரியனை ஒரு பூவின் இதழைப் போன்று சுற்றிக் கொண்டு இருந்தது.
அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருந்தது.
அத்துடன் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையும், எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.
இவ்வாறு,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீளமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.
அதே போன்று,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் சூரியனைச் சுற்றுகிறது, என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.
இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தை கூறினார்.
அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக,ஈர்ப்பு என்பது விண்வெளியில் சூரியன் போன்ற பொருள்களின் நிறையால்,விண்வெளியானது வளைக்கப் படுகிறது.அதனால்,சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகிறது.
------------------------------------
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும்.
ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
------------------------------------
அந்தப் பள்ளத்தைக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்க படுவதால்,சூரியனைக் கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன,என்று ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தை கூறினார்.
உதாரணமாக ஒரு பெரிய ரப்பர் மெத்தையின் மேல் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அந்த ரப்பர் மெத்தையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகும்.
இந்த நிலையில் அந்த பள்ளத்தில், சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்தக் கோலிக் குண்டுகளானது,அந்தப் பெரிய இரும்புக் குண்டை வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வராமல், சிறிது இடம் மாறி வருவதைப் போன்று, கிரகங்களும் இயங்குகின்றன, என்று ஐன்ஸ்டீனின் கருத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது.
ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று உண்மையில்,சூரியனுக்கு அருகில் விண்வெளியானது வளைக்கப் பட்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி எழுந்தது.
உண்மையில் ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் பட்டு,சூரியனைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருந்தால்,சூரியனுக்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியானது,அந்தப் பள்ளத்தைக் கடந்து வரும் பொழுது வளைந்து வரும்,எனவே சூரியனுக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்று விளக்கம் கூறப் பட்டது.
பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது.
ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது.
இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.
திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது.
உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன?
என்ற கேள்விக்கு, நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார்.
எனது விளக்கம்.
பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையானது காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு மாற வேண்டும்.
ஏனென்றால் கிரகங்களின் நிலையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறுகிறது.
ஆனால் அவ்வாறில்லாமல், பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
எனவே,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
மாறாக, சூரியனின் முன் நோக்கிய நகர்வே,கிரகங்களின் நீள்வட்டப் பாதைக்குக் காரணம்.
எப்படி என்றால், ஒரு கிரகமானது சூரியனை சுற்றிவிட்டுத் திரும்பும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.
எனவே,சூரியனைச் சுற்றி விட்டு நகர்ந்த கிரகமானது,மறுபடியும் சூரியனை நெருங்க வேண்டும் என்றால்,அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.
இதன் காரணமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது, நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது.
இந்த நிலையில், சூரியனானது விண்வெளியின் நேர்கோட்டுப் பாதையில் பயணம் செய்யாமல்,பால்வீதி நட்சத்திர மண்டலத்தைச் சுற்றி சற்று வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு, சூரியன் விண்வெளியின் வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரங்களானது.சூரியனை நெருங்கும் புள்ளியும் ஒவ்வொரு சுற்றுக்கும் இடம் மாறுகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?