மண்ணிலிருந்து... விண்ணுக்கு...
மண்ணிலிருந்து... விண்ணுக்கு... இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை. எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை. அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது. அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது. அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது. வேத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது. இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார். பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்க...