சூரியனைக் கிரகங்கள் சுற்றி வரும் தளமானது ஏன் சாய்வாக இருக்கிறது ?
அரிஸ்ட்டாடில் காலத்தில் சூரியன் உள்பட எல்லாக் கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது.
ஆனால் நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற ஆராய்ச்சியாளர்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார்.
இந்த நிலையில்,கோபர் நிகசின் கூற்றை பொய்யென நிரூபிப்பதற்காக,டென் மார்க் நாட்டைச் சேர்ந்த,டைகோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர்,ஒவ்வொரு நாள் இரவிலும்,பின் புல நட்சதிரங்காளின் அடிப்படையில்,கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார்.
ஆனால் அந்த ஆராய்ச்சி முடியும் முன்பே அவர் இறந்து விடவே,அவரிடம் உதவியாளராகப் பணி புரிந்த ஜோகனஸ் கெப்ளர் அந்தப் பதிவுகளை ஆய்வு செய்தார்.
அப்பொழுது,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கெப்ளர் அறிந்தார்.
குறிப்பாக அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதைக் கெப்ளர் அறிந்தார்.
அத்துடன் சூரியனில் இருந்து கிரகங்கள் தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் நகர்சியானது மெதுவாக இருப்பதையும் கெப்ளர் அறிந்தார்.
அதே போன்று சூரியனை நெருங்க நெருங்க கிரகங்களின் வேகமானது அதிகரிப்பதையும் கெப்ளர் அறிந்தார்.
ஆனால் கிரகங்கள் எல்லாம் ஏன் அவ்வாறு சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்று கெப்ளர் அறிய வில்லை.
குறிப்பாக அரிஸ்ட்டாட்டில் ,கனமான பொருட்கள் வேகமாகவும்,இலேசான பொருட்கள் மெதுவாகவும் விழும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில்,கலிலியோ,ஒரு சாய்வான மரத் தளத்தில்,இலேசான மற்றும் கனமான மரங்களால் ஆன இரண்டு உருளைகளை உருளச் செய்து,அந்த இரண்டு உருளைகளும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை சுட்டிக் காட்டி,எல்லாப் பொருட்களும் ஒரே வேகத்தில்தான் விழும் என்று நிரூபித்தார்.
ஆனால் பொருள்கள் ஏன் விழுகின்றன?என்று அவர் யோசிக்க வில்லை.
இந்த நிலையில் சர் ஐசக் நியூட்டன்,வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்தார்.அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் செல்வதை அறிந்தார்,
பிறகு அந்த வால் நட்சத்திரமானது சூரியனுக்குப் பின்னால் இருந்து எழுவதையும் அறிந்தார்.
அதன் அடிப்படையில்,சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதை அறிந்தார்.
அத்துடன் கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் பாதையை சூரியனின் ஈர்ப்பு விசையானது வளைப்பதால்,அவைகள் சூரியனை சுற்றுவதை அறிந்தார்.
இந்த நிலையில் கிரகங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் சூரியனை வலம் வருகின்றன என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு, மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணம் என்று நியூட்டன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
எனது விளக்கம்.
ஆனால் கிரகங்களின் நிலையானது நாளுக்கு நாள் மாறுகிறது.
எனவே மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறினால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது அடிக்கடி மாற வேண்டும்.
ஆனால் கிரகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான நீள் வட்டப் பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
எனவே கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, நியூட்டன் கூறிய விளக்கமானது தவறான விளக்கம்.
இந்த நிலையில் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, மிகவும் நீண்டு இருப்பது தெரிய வந்தது.
எனவே புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் மிகவும் நீண்டு இருக்கிறது? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு நியூட்டனால் பதில் கூற இயலவில்லை.
அத்துடன் ,புதன் கிரகமானது, சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது தள்ளிப் போனது.
அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே,சூரியனைப் பூவின் இதழ்கள் போன்று, மெதுவாக சுற்றி வருகிறது.
இவ்வாறு புதன் கிரகமானது, சூரியனை நெருங்கும் புள்ளியானது, ஏன் ஒவ்வொரு சுற்றுக்கும், சிறிது தள்ளிப் போகிறது?என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை.
ஐன்ஸ்டீனின் தவறான விளக்கம்.
இந்த நிலையில்,இந்தப் புதிருக்கு ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
முக்கியமாக ஐன்ஸ்டீன் அவர்கள்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியபடி,ஒரு விசையே அல்ல என்று கூறினார்.
அத்துடன்,சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே, கிரகங்கள் எல்லாம் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக வளைக்கப் படுகிறது, என்று ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் தற்பொழுது,கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே கிரகங்களின் இயக்கத்திற்கு ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன?என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாகச் சூரியனானது,விண்வெளியில்,வினாடிக்கு 230 கிலோ மீட்டர் (828,000 km/h) வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு விண்வெளியில் சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் தளமானது, நட்சத்திர மண்டலத் தளம் (galactic plane) என்று அழைக்கப் படுகிறது.
இவ்வாறு நட்சத்திர மண்டலத் தளத்தில்,வேகமாகப் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை,அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு கிரகங்களானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கோணமானது,பொதுவான கிரகங்களின் சுற்றுத் தளம் (ecliptic plane )என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் கிரகங்கள் எல்லாம், சூரியனை, ஒரே கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாகக் கிரகங்கள் எல்லாம் சூரியனை, வெவ்வேறு கோணங்களின் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
உதாரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுத் தளமானது ,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில் சாய்ந்து இருக்கிறது.
அதே போன்று,சூரியனை அதிகத் தொலைவில் இருந்தபடி மிகவும் பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும்,குருங்கிரகமான புளூட்டோ,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து பதினேழு டிகிரி சாய்ந்து இருக்கிறது.
இதே போன்று எல்லாக் கிரகங்களின் சுற்றுத் தளங்களும், இந்தப் பொதுத் தளத்தில் இருந்து விலகி இருக்கிறது.
அத்துடன் புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு முறையும் சிறிது விலகிச் செல்வதைப் போன்றே,எல்லாக் கிரகங்களும் சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம்பெயர்கிறது.
அதாவது எல்லாக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைகளும்,பூவின் இதழ்களைப் போன்று சூரியனை மெதுவாக சுற்றுகிறது.
இவ்வாறு கிரகங்களின் சுற்றுத் தளமானது ஏன் சூரியன் பயணம் செய்யும் தளத்துக்கு சாய்வாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
அதே போன்று,கிரகங்களானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஏன் ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது?என்ற கேள்வியும் எழுகிறது.
எனது விளக்கம்.
நட்சத்திர மண்டலத் தளத்தில் சூரியனானது வினாடிக்கு இருநூற்றி முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால்,கிரகங்களின் சுற்றுத் தளத்தில் சாய்வு ஏற்படுகிறது.
அதாவது சூரியனை நெருங்கிய ஒரு கிரகமானது, சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது,சூரியனானது, முன்பு இருந்த இடத்தில் இருந்து, வெகு தூரம் நகர்ந்து விடுகிறது.
அதனால், சூரியனை விட்டு விலகிச் சென்ற கிரகமானது, தற்பொழுது, சூரியன் புதிதாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து செல்வதால், கிரகங்களின் பாதையானது, சாய்வாக மாறுகிறது.
இவ்வாறு கிரகங்களானது புதிதாக சூரியன் இருக்கும் இடத்தை நோக்கி நகர்வதால்,கிரகங்களானது சூரியனை நெருங்கும் புள்ளியும் சிறிது இடம் பெயர்கிறது.
Comments