சூரியனைக் கிரகங்கள் சுற்றி வரும் தளமானது ஏன் சாய்வாக இருக்கிறது ?
அரிஸ்ட்டாடில் காலத்தில் சூரியன் உள்பட எல்லாக் கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. ஆனால் நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற ஆராய்ச்சியாளர்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். இந்த நிலையில்,கோபர் நிகசின் கூற்றை பொய்யென நிரூபிப்பதற்காக,டென் மார்க் நாட்டைச் சேர்ந்த,டைகோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர்,ஒவ்வொரு நாள் இரவிலும்,பின் புல நட்சதிரங்காளின் அடிப்படையில ்,கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார். ஆனால் அந்த ஆராய்ச்சி முடியும் முன்பே அவர் இறந்து விடவே,அவரிடம் உதவியாளராகப் பணி புரிந்த ஜோகனஸ் கெப்ளர் அந்தப் பதிவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். குறிப்பாக அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். அத்துடன் சூரியனில் இருந்து கிரகங்கள் தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் நகர்சியானது மெதுவாக இருப்பதையும் கெப்ளர் அறிந...