பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது.

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படம் மூலம் ,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள்,அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியலாளர்கள் தவறாக நம்புகின்றனர்.

ஆனால் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்ததற்கான தடயங்கள் காணப் படவில்லை.

எனவே கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் தனித் தனியாக நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,கண்டங்களுக்கு அடியில் கடல் தளம் உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சியுடன் சுனாமியும் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.

அதே போன்று ஒரு கண்டத்துடன் அடுத்த கண்டம் மோதுவதால், இடையில் இருக்கும் நிலப் பகுதிகள் புடைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் மலைத் தொடர்கள் உருவாகுவதகவும்,அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் உலக அளவில் ஏற்பட்ட, லட்சக் கணக்கான நில அதிர்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட, உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது,  நில அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல் தொடர்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.

இதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் கடல் தளங்களுடன், தனித் தனியாக, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.

இதன் அடிப்படையில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது, தனித் தனியாக இல்லாமல், தொடர்ச்சியாக இருப்பதும்,கடல்தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.எனவே எரிமலை வெடிப்புகளே நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை பட ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது.

அதே போன்று கண்டங்களின் மேலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே கண்டங்களின் மேலும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?