குளோபல் வார்மிங் ஊழல்.
கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ நா,வின், IPCC என்று அழைக்கப் படும் கால நிலை மாற்றத்துக்கான சர்வ தேச அமைப்பு வெளியிட்ட 3000 பக்க அறிக்கையில் ,பத்தாவது அத்தியாயத்தில் ,இமய மலையில் உள்ள பனிப் படலங்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்களைக் காட்டிலும் வேகமாக உருகிக் கொண்டு இருப்பதாகவும்,அதனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதாவது 2035 ஆம் ஆண்டிற்குள் அல்லது அதற்கு முன்பாகவே முற்றிலும் உருகி காணாமல் போய் விடக் கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான மூன்று ஆண்டுகளில், இது பற்றி கேள்விப் பட்ட பனியாற்று இயல் நிபுணர்கள் இது சத்தியமே இல்லை என்று கொதித்து எழுந்தார்கள்.இது குறித்து,ஐ நா,வின், IPCC தலைமைப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜேந்திரக் குமார் பச்சோரி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள்.
குறிப்பாக துருவப் பகுதிகளுக்கு அடுத்த படியாக இமய மலையிலேயே அதிக அளவில் பனிப் படலங்கள் காணப் படுவதால்,இமய மலைப் பகுதியானது மூன்றாவது துருவம் என்றும் அழைக்கப் படுகிறது.
இப்பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் உருகுவதால் கங்கை,பிரம்ம புத்திரா மற்றும் சீனாவில் ஓடும் யான்க்சி என பல ஆறுகள் உற்பத்தி ஆகி ஓடுகின்றன.அதனால் இந்த ஆறுகள் விவசாயம் உள்பட நூற்றி நான்கு கோடி மக்களின் (1.4bn people )வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இந்த நிலையில் பனிப் படலங்கள் உருகி ,இந்தப் பனியாறுகள் வற்றி விட்டால் இந்த ஆறுகளை நம்பி வாழும் நூற்றி நான்கு கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி விடும்.
தற்பொழுது இமய மலைப் பகுதியில் 45,000 பனியாறுகள் இருக்கின்றன.இதில் சில பனியாறுகள் ஆண்டுக்கு ஒரு அடி வீதம் உருகிக் கொண்டு இருக்கின்றன.ஆனால் இமய மலைப் பகுதியில் இருக்கும் பல பனியாறுகள் 300 அடி உயரம் உடையதாகவும் சில 400 அடி உயரத்துடனும் இருக்கின்றன.
எனவே ,ஐ நா,வின்,IPCC அமைப்பினர் கூறிய படியே ஆண்டுக்கு ஒரு அடி வீதம் பனியாறுகள் உருகினாலும் கூட இமய மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் முழுவதும் மறைய 350 ஆண்டுகள் ஆகும்.
எனவே எதன் அடிப்படையில் 2035 ஆம் ஆண்டிற்குள் இமைய மலைப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் முழுவதும் உருகி விடும் என்ற முடிவுக்கு வந்தீர்கள்? என்பதை விளக்க வேண்டும் என்று பனியாற்று நிபுணர்கள், விளக்கம் கேட்டனர்,
உடனே ஐ நா,வின்,IPCC அமைப்பினர், அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரியது.
இந்த நிலையில் டாக்டர் பச்சோரி மூவாயிரம் பக்க அறிக்கையில் வெளியான அத்தனை தகவலுக்கும் நான் பொறுப்பாக முடியாது, எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்தார்.அத்துடன் அறிக்கையில் அந்தத் தகவல் வெளியானதற்கு இந்திய பனிப் படல ஆராய்ச்சியாளரான டாக்டர் முராரி லால் தான் காரணமென்றும் IPCC யின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைச் சரிவரப் பின்பற்றாமல் போனதே இந்தத் தவறுக்குக் காரணம் என்று கூறினார்.
குறிப்பாக ஐ நா,வின், IPCC, அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி ,முறைப் படி நிபுணர்களால் ஆய்வு செய்யப் பட்ட தகவல்களையே வெளியிட வேண்டும்.
ஆனால் முராரி லால் இந்தத் தகவலானது WWF ( The World Wide Fund for Nature) என்று அழைக்கப் படும்,சுற்றுச் சூழல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருந்ததன் அடிப்படையில்,ஐ நா,வின், IPCC, அறிக்கையில் சேர்க்கப் பட்டது என்று தெரிவித்தார்.
WWF அமைப்பினரோ, இந்தத் தகவலானது நியூ சயின்டிஸ்ட் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில் மேற்கோள் காட்டப் பட்டது என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக நியூ சயின்டிஸ்ட் பத்திரிக்கையின் செய்தியாளர்,பியர்ஸ் இந்தத் தகவலானது நான் 1999 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியப் பத்திரிகையில், டாக்டர் சையத் ஹாஸ்னின் என்பவரால் தெரிவிக்கப் பட்டு இருந்தது.அதன்அடிப்படையில் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதன் அடிப்படையில் நியூ சயின்டிஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரை எழுதினேன் என்று பியர்ஸ் தெரிவித்தார்.
ஆனால் டாக்டர் சையத் ஹாஸ்னின்,இமய மலைப் பகுதியில் இருக்கும் ஒரு சில பனியாறுகளைப் பற்றி குறிப்பிட்டாரா அல்லது இமய மலைப் பகுதியில் இருக்கும் அனைத்து பனியாறுகளைப் பற்றியும் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வில்லை என்றும் பியர்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அப்பொழுது ஜவகர் லால் பல் கலைக் கழகத்தைதில் பணியாற்றிக் கொண்டு இருந்த ,டாக்டர் சையத் ஹாஸ்னின் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான் இந்தத் தகவலானது ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையில் வெளியாகி இருந்ததின் அடிப்படையில் பத்திரிக்கையில் எழுதினேன்.ஆனால் பிரிட்டிஷ் பத்திரிகையில் வெளியாகி இருந்த தகவலானது முறைப் படி நிபுணர்களால் ஆய்வு செய்யப் படாத நிலையில் இருந்தது என்றும் தெரிவித்தார்.
ஆனால் 2035 ஆம் ஆண்டில் இமய மலைப் பனிப் படலங்கள் முழுவதும் உருகி விடும் என்ற தகவல் தவறானது என்று அந்த அறிக்கை பிரசுரம் ஆகும் முன்பே ஜப்பான் நிறுவனம், ஐ நா,வின், IPCC, அமைப்பினருக்குத் தெரிவித்து இருந்தது.அத்துடன் ஆஸ்த்திரிய நாட்டைச் சேர்ந்த பனியாற்று இயல் நிபுணர் ஜியார்ஜ் காசர் என்பவரும் இது தொடபாக டாக்டர் முராரி லாலுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.ஆனால் டாக்டர் முராரி லால் தனக்கு கடிதம் எதுவும் வர வில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு டாக்டர் பச்சோரி தலைமை வகிக்கும் tere என்று அழைக்கப் படும் டாட்டாவின் தி எனர்ஜி ரி சோர்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திற்கு, 50,00,000 டாலர் இமய மலைப் பனிப் படல ஆய்வுக்காக வெளி நாட்டில் இருந்து வந்தது.அந்த ஆய்வுக்கு டாக்டர் சையத் ஹாஸ்னையே ,டாக்டர் பச்சோரி நியமித்து இருக்கிறார்.
ஐ நா,வின், IPCC, அறிக்கை தவறானது என்றும் இது போன்ற கருத்துக்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் கருத்துக்கள் என்றும் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வி கே ரெய்னா அவர்கள் கருத்து தெரிவித்தார்.உடனே ஐ நா,வின், IPCC, அமைப்பின் தலைவரான டாக்டர் பச்சோரி ,இமய மலைப் பகுதியில் நடப்பது குறித்து நாங்கள் தெளிவான பார்வையுடன் இருக்கிறோம்,உங்களின் அறிவியல் பில்லி சூன்ய அறிவியல் ( voodoo science )என்று ஏளனம் செய்து இருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் அப்பொழுது இந்தியாவின் சுற்றுச் சூழல் அமைச்சாராக பதவி வகித்த மாண்பு மிகு ஜெய ராம் ரமேஷ் அவர்கள் ,அல்கோர் மற்றும் பச்சோரியின் இமய மலைப் பனிப் படலங்கள் முழுவதும் மறைந்து விடும் என்ற கருத்திற்கு அறிவியல் அடிப்படை இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கு டாக்டர் பச்சோரி அமைச்சரின் கருத்து ஆணவமானது என்று விமர்சனம் செய்துள்ளார்.ஆனால் மாண்பு மிகு ஜெய ராம் ரமேஷ் அவர்கள் அல்கோர் மற்றும் பச்சோரிக்கு நாங்கள் சவால் விடுகிறோம் என்று லண்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்பொழுது ஐ நா,வின், IPCC, சேர்ந்தவர்கள் ஆமாம் நாங்கள் உலக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் அறிக்கை வெளியிட்டோம் என்று ஒத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின்,கிரிநோல்ப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பனியாற்று இயல் நிபுணரான,ஜூலி கார்டெல்லே,செயற்கைக் கோள் மூலம் மேற்கொண்ட முப்பரிமான ஆய்வில் ,கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ,இமய மலைப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் வளர்ந்து இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.
''இது விநோதமான நிகழ்வாக இருக்கிறது'' என்று ஜூலி கார்டெல்லே லைவ் சயின்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளரிடம் தெரிவித்து இருக்கிறார்.
Comments