நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.
கடந்த 12.01.2010 அன்று ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். http://earthquake.usgs.gov/earthquakes/eqarchives/poster/2010/20100112.php அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது ,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும்,அந்தப் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்( the Caribbean plate moving eastward with respect to the North America plate),அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப்...