புதை படிவங்களும் பூமியின் கடந்த காலமும்
தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்
பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் கூட டைனோசர்களின் எலும்புப் புதை
படிவங்கள் காணப் படுவதற்கு,
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே
கண்டமாக இருந்ததாகவும், பின்னர்
தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று தவறாக நம்பப்
படுகிறது.
உண்மையில் அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை
படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது
இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே
காரணம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து
இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட
பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து
மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை
படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று அண்டார்க்டிக் கண்டத்திலும் பிளேட்டியோ சாராஸ் வகை
டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அத்துடன் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து
இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடலடிப் பீட
பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள்
தொன்மையான எரிமலைப் பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும்
மகரந்தத் துகள்கள் இருப்பதையும், பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனர்கள் கண்டு
பிடித்து இருகின்றனர்.
இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும்,
தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில்
இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின்
புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக்
காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கு இடையில்
காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டர் ஆழமுடையதாக
இருக்கிறது.இந்த நிலையில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளியான
நீராவியில் இருந்த நீர், கோடிக் கணக்கான ஆண்டுகளாக கடலில் கலந்ததால் கடல் மட்டம்
இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக
இருந்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்ததால், துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் கால நிலை
நிலவி இருந்திருப்பதற்கு ஆதாரமாக, துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலையைச்
சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
உதாரணமாக வட துருவப் பகுதியில் அறுபத்தி ஆறரை அட்ச ரேகைப் பகுதியில்
உள்ள ஆர்க்டிக் வளையப் பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த
டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அலாஸ்காவின்
வடக்கில் உள்ள கொல் வில்லி ஆற்றுப் பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த பல வகை டைனோசர்கள் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
இதே போன்று ஆசியக் கண்டத்தின் வடபகுதியில் குறிப்பாக வடகிழக்கு
ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியில் உள்ள காக்கநாடு ஆற்றுப் பகுதியில், டைனோசர்களின்
எலும்புப் புதை படிவங்கள் மட்டுமின்றி, டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும்
கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பனிப் பிரதேசத்தில் நிலவும் குறைந்த வெப்ப நிலையில் ஊர்வன வகை
விலங்கினங்களின் முட்டைகள் பொறியாது.
எனவே துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து
வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு தற்பொழுது பரவலாக நம்பப் படும் பிளேட் டெக்டானிக்
கருத்தின் அடிப்படையில் இன்று வரை, விளக்கம் கூற இயலாத நிலையில் புவியியல்
வல்லுனர்கள் இருக்கின்றனர்.
ஏனென்றால் பிளேட் டெக்டானிக் கருத்தின் படி இந்தப் பூமியில் இருபத்தி
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து, வட துருவப்
பகுதியில் இருந்து தென் துருவப் பகுதி வரை, பாஞ்சியா என்ற பெருங் கண்டமாக, ஆங்கில ‘’C “ எழுத்து வடிவில் இருந்ததாக நம்பப் படுகிறது.
பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியாக் கண்டத்தின் வட
பகுதியானது தனியாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவானதாகவும்,மறுபடியும் அந்த
லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததாகவும் அதனால், லாரேசியாவின் மேற்குப்
பகுதியில் வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும், அதே போன்று லாரேசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் யூரேசியக்
கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப்
படுகிறது.
இந்தக் கருத்தின் படி கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே,டைனோசர்களின்
எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்காவின் வட பகுதியும், சைபீரியாவின்
வட பகுதியும் ஆர்க்டிக் வளையப் பகுதியிலேயே இருந்ததாக நம்பப் படுகிறது.
எனவேதான் டைனோசர்கள் எப்படி பனிப் பிரதேசத்தில் முட்டையிட்டு இனப்
பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்தது.
இந்தப் புதிருக்கு விடையளிக்கும் விதமாக வட அமெரிக்கக் கண்டத்தின் வட
பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் தீவில் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்து மடிந்த ஒட்டகத்தின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு படிக்கப்
பட்டுள்ளது.
தாவர உண்ணி விலங்கான ஒட்டகத்திற்கு நீந்தத் தெரியாது.எனவே கடல் மட்டம்
தாழ்வாக இருந்ததால் ஒட்டகம் எல்லிஸ்மெர் தீவுக்கு வந்திருக்கிறது.கடல் மட்டம்
தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின்
வெப்ப நிலையும் அதிகமாக இருந்ததால்,
துருவப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் எல்லிஸ்மெர் தீவில்
ஒட்டகம் மேய்வதற்கான பசும் புல்வெளி இருந்திருக்கிறது.
பின்னர் கடல் மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவு அதிகரித்ததால், வளி
மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருகிறது.
இதே போன்று எல்லிஸ்மெர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்து மடிந்த காண்ட மிருகம் போன்ற பிராண்டோ சாராஸ் என்ற விலங்கின் எலும்புப்
புதை படிவங்களும்,நீர் யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கின் எலும்புப் புதை
படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று எல்லிஸ்மெர் தீவுக்கு அருகில் உள்ள ஆக்சல் ஹைபெர்க் தீவில்
ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பைட்டோ சாராஸ் என்று அழைக்கப்
படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களும், மீன்களின்
புதை படிவங்களும், ராட்சஸ ஆமைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது
குறிப்பிடத் தக்கது.
இதே போன்று பாஞ்சியாக் கண்டத்தின் தென்பகுதியானது தனியாகப்
பிரிந்ததால் கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதி நோக்கி
நகர்ந்ததாகவும்,பின்னர் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கோண்டுவாணாக் கண்டமும்,
பல பகுதிகளாகப் பிரிந்ததால் தென் பகுதிக்
கண்டங்களான தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய
கண்டங்கள்,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உருவாகி, வட பகுதியை நோக்கி நகர்ந்து,
தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்தில்
இருந்து பிரிந்ததால் உருவானதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டமானது
முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் வட அமெரிக்கக் கண்டத்துடன்
இணைந்ததாகவும்,அதே போன்று ஆப்பிரிக்கா மற்றும் இந்திய நிலப் பகுதிகள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் முறையே ஐரோப்பா
மற்றும் ஆசியக் கண்டத்துடன் இணைந்ததாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்
அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா ஆகிய நிலப் பகுதிகள் தீவுக் கண்டங்களாக இருந்ததாக
நம்பப் படுகிறது.
ஆனால் தற்பொழுது உள்ள பாலூட்டிகளின் மூதாதைகள் யாவும் ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த புரோட்டோ அங்குலேட்டம்
டோனா என்று அழைக்கப் படும் ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம வளர்ச்சியில்
தோன்றியதாக எலும்பு உருவ அமைப்பு ஒப்பாய்வின் அடிப்படையில் டாக்டர் மாவ்ரின் ஒ லியரி
என்ற விலங்கியல் வல்லுநர் அறிவித்து இருக்கிறார்.
முக்கியமாக தற்போதைய பாலூட்டிகளின் பொது மூததையான புரோட்டோ
அன்குலேட்டம் டோனா, நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும் டாக்டர் மாவ்ரின் ஒ
லியரி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பாலூட்டிகளின் எலும்புப் புதை படிவங்கள் தென்
அமெரிக்கா,ஆபிரிக்கா,மற்றும் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டமான வட
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த பொது மூததையில் இருந்து தோன்றிய
பாலூட்டிகளின் எலும்புப் புதை படிவங்கள், தென் பகுதிக் கண்டங்களான தென்
அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே வந்து
வாழ்ந்திருப்பதன் மூலம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்திய நிலப் பகுதிகள்
யாவும் பிளேட் டெக்டானிக் கருத்தின் படி தீவுக் கண்டங்களாக இருந்திருக்க வில்லை
என்பதும், தற்பொழுது உள்ள நிலையிலேயே வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு
கொண்டு இருந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே டைனோசர்கள் உள்பட, ஒரே வகை விலங்கினங்களின் எலும்புப் புதை
படிவங்கள் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்
தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில், கடல் மட்டம் தற்பொழுது
இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பிறகு உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
முக்கியமாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த
நிலையில் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதால்,துருவப் பகுதிகளில், ஆண்டுக்கு ஆறு
மாதம் தொடர்ந்து பகலும், ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய
ஒளியின்றி தாவரங்களால் உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்திருக்க இயலாது.எனவே துருவப்
பகுதிகளில் அடர்ந்த காடுகளும் உருவாகி இருக்க இயலாது.
எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு
இருக்கிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகே சென்ற குறுங் கோளின்
ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர்,இருபத்தி
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த மெசோ
சாராஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற விலங்கின் எலும்புப்
புதை படிவங்கள், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள, தென் அமெரிக்கா
மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களிலும் கண்டு பிடிக்கப் பட்டதற்கு, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு
கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,
பின்னர் அந்தப் பாஞ்சியாக் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்ததால், தற்பொழுது உள்ள
கண்டங்களாக உருவாகி, நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஒரு தவறான கருத்தை
முன் மொழிந்தார்.
அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில்
வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப் பட்ட பெரணி
வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும், முப்பது
கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவானது வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் பூமத்திய
ரேகைப் பகுதியில் இருந்ததாகவும், பின்னர் வட பகுதியை நோக்கி நகர்ந்து, தற்பொழுது
உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததே காரணம், என்றும் தவறான விளக்கத்தைத்
தெரிவித்தார்.
ஆனால் கண்டங்கள் கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான
தடயங்கள் எதுவும் காணப் பட வில்லை.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை
நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் இருப்பதும்
,அதில் அதிகமாக எரிமலைகள் இருப்பதுடன், அப்பகுதியில் அடிக்கடி எரிமலை வெடிப்புகளும்
நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது.
இதே போன்று கண்டங்களில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான
பாறைகள் காணப் படுவதும் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனால் சேகரிக்கப் பட்ட கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, அதிக பட்சமாக
பதினெட்டு கோடி ஆண்டுகளாக இருந்தது.
இதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து தொடர்ச்சியாக பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு
வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி
விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும்
விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப்
பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும்,ஒரு
பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்வதால், சுனாமி
உருவாகுவதகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள
கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக்
கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி
எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக்
கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தனித்
தனியாகக் கடல் தளம் உருவாகி நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் வட
மேற்குப் பகுதிக்கும், தென் மேற்குப் பகுதிக்கும்
இடையில் தொடர்ச்சியாக உரசல்
ஏற்பட்டு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
ஏற்பட வேண்டும்.
ஆனால், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, அமெரிக்காவின் நாசா ஆய்வு
மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில், அட்லாண்டிக் கடலின் மத்தியப்
பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்
கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் வட
அமெரிக்கக் கண்டத்திற்கும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப்
பகுதியில் தொடர்ச்சியாக கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள
கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்
படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்தே தவிர உண்மையல்ல.
இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில் பதிவாகி இருக்கிறது.எனவே எரிமலைகள் வெடித்ததாலேயே நில
அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.இந்த நிலையில்
கண்டங்களின் மத்தியப் பகுதியிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு
இருப்பதும் வரை படத்தில் பதிவாகி இருப்பதன் மூலம்,கண்டங்களுக்கு அடியிலும்
எரிமலைத் தொடர் இருப்பதைக் குறிக்கிறது.
இதே போன்று பிளேட் டெக்டானிக்
தியரியின் படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்
துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக்
கொண்டு இருந்ததாகவும், பின்னர் தனியாகப் பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி
நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்
ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.
பிளேட் டெக்டானிக் தியரியின் படி,கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி
விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் அதனால் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில
அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்
ஒன்றாக இருந்த பிறகு தற்பொழுது இருப்பது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு
விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால்,இந்த இரண்டு கண்டங்களும் நிச்சயம் ஒரே கடல் தளத்தின் மேல் இருந்தபடி
ஒன்றிலிருந்து ஒன்று விலகி நகர்ந்து இருக்க முடியாது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு
தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருந்தால்தான், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி வந்திருக்க முடியும்.
இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்
தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருந்தால், இந்தியக் கடல் தளத்திற்கும், ஆஸ்திரேலியாக் கடல் தளத்திற்கும், இடையில் உரசல் ஏற்பட்டு, இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
அந்த நாசா அமைப்பினர் வெளியிட்ட உலக
அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில், அவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்தியாவுக்கும்
ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல்
ஒரே த்டற்சியாக இருப்பதன் மூலம், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில்
இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதன் அடிப்படையில் நாசாவைச் சேர்ந்த
புவியியல் வல்லுனர்கள் கண்டத்தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாக கூறப் படும் ஒரு
வரை படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வரைபடத்தில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியை இரண்டாகப்
பிரித்து, தனித் தனியாகக் காட்டாமல்,அப்பகுதியில் சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அப்பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசாவைச்
சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு இந்தியாவிற்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத
நிலையில் வெறும் யூகத்தின் அடிப்படையில், இந்தியக் கண்டத் தட்டு
நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக நாசாவைச் சேர்ந்த
புவியியல் வல்லுனர்கள், 10.01.2005 அன்று
நாசாவின் வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
பின்னர் அந்த விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்பட்டதாகவும், அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றியே, வெறும் யூகத்தின் அடிப்படையில் 27.04.2005 அன்று வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் முன்னுக்குப் பின் முரணான விளக்கத்தையும் தெரிவித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் ,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் அடிப்படை ஆதாரம் இன்றி வெறும்
யூகத்தின் அடிப்படையிலேயே தெற்காசிய சுனாமிக்கு விளக்கம் தெரிவித்து இருப்பது
ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக்
கண்டத்திற்கும் இடையில் உள்ள, கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவுப்
பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட அமெரிக்கப் புவியியல் கழகத்தினர்
நேரிடையான விளக்கத்தைத் தெரிவிக்க
இயலவில்லை.
ஏனென்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு
கண்டங்களும் பாஞ்சியா என்ற பெருங் கண்டத்தின் பகுதியாக இருந்த பிறகு,தனித்
தனியாகப் பிரிந்து ,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் நாற்பத்தி ஐந்து
லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கரீபியன் தீவுக் கூட்டம்
எப்படி உருவாகியது? எங்கே உருவாகியது? என்ற கேள்வி எழுந்தது.
கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது
கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால்
உருவாகியதாகவும்,பின்னர் அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி வட கிழக்கு
திசையை நோக்கி வளைவான பாதையில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது எதிர் திசையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வட
மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தற்பொழுது இருக்கும் பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, போன்ற நாடுகள் அமைந்து இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதிகள் உருவாகி இருக்க வில்லை என்றும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இடைவெளி இருந்ததாகவும், அந்த இடை வெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது நுழைந்து தற்பொழுது உள்ள
இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும் பல ஆண்டுகளாக
நம்பப் பட்டது..
இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களை
இணைக்கும் பாலம் போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதியில்உள்ள ஹோண்டுராஸ் பகுதியில்
உள்ள மலைப் பகுதியில் , பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு
பிடிக்கப் பட்டு உள்ளது.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு
முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாக நம்புவதற்கு ஆதாரம்
இல்லை.
அதே போன்று கரீபியன் தீவுக்
கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின்
எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
எனவே கியூபா தீவானது பதினைந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பே தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து கியூபாவுக்கு டைனோசர்கள் வந்து
இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இது போன்ற கண்டு பிடிப்புகளால், பல புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக்
கண்டங்களுக்கு இடையில் நுழைந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்கத் தயங்குகின்றனர்.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது
அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே எங்காவது உருவாகி அமெரிக்கக் கண்டங்களைப் போலவே மேற்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்
கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம்
என்றும் நம்புகின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு
இருக்கிறதா?ஏன் நகர வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்தக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
குறிப்பாக கரீபியன் தீவுக்
கூட்டத்தில் கிழக்குப் பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி வளைவான பாதையில்
எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இதற்கு, கரீபியன் தீவுக் கூட்டமானது
பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும்
நிலையில், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும், அட்லாண்டிக் கடல் தளமானது, கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்று உருகிப்
பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல்தரையைப் பொத்துக் கொண்டு
கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது
அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாக விளக்கம் கூறும் புவியியல் வல்லுனர்களால்,அந்த எரிமலைகள் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு விளக்கம் கூற இயல வில்லை.
எனவே கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே
எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு இன்று வரை ஆதாரபூர்வமாக எந்த ஒரு புவியியல் வல்லுராலும்
உறுதியாகக் கூற இயல வில்லை.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, கிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் கருத்தின் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக்
கூறினால், அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு
விடை தெரியாத நிலையில் அமெரிக்க அரசின் புவியியல் வல்லுனர்கள் இருப்பதால்,நேரடியாகக் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்
கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ஹைத்தி தீவில் நில
அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் குயுக்தியான அல்லது மிகவும் தந்திரமான விளக்கத்தை அறிக்கையில்
தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே உண்மையில் அமெரிக்கக் அரசின்
புவியியல் வல்லுனர்களுக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உணமையில்
தெரியாத நிலையிலேயே, வெறும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கத்தையே தெரிவித்து
இருப்பது அவர்களின் அறிக்கை மூலமாக தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கண்டங்களில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான
பாறைகள் இருப்பதாகவும், ஆனால் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிக பட்சமாக
பதினெட்டு கோடி ஆண்டுகளாக இருப்பதாகவும், இதற்கு கண்டங்களுக்கு இடையில் புதிதாக
உருவாகும் கடல் தளமானது நகர்ந்து சென்று, இறுதியில் கண்டங்களுக்கு அடியிலும்
தீவுகளுக்கு அடியிலும் சென்று பூமிக்குள் சென்று அழிந்து விடுவதே காரணம் என்று
நம்பப் படுகிறது.
உண்மையில் இந்தக் கடல் தரைப் பள்ளங்களானது நிலப் பகுதிகளும் தீவுகளும்
கோளமான புவிப் பரப்பில் செங்குத்தாக உயர்ந்ததால் உருவானது.
ஆனால் பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு பசிபிக்
கடலடி மேடு என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து
பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளம்
உருவாகி, முறையே தென் கிழக்கு மற்றும் வட மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகத் தவறாக நம்பப் படுகிறது.
இதே போன்று பசிபிக் கடல் தளத்தின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுத்
தொடரானது தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி உருவாகி
இருப்பதற்கு ,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத்
துளைக்கப் பட்டதே காரணம் என்று தவறாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி
இருக்கும் மற்ற எரிமலைத் தீவுத் தொடர்களும், ஹவாய் எரிமலைத் தீவுத் தொடருக்கு
இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் லைன் எரிமலைத்
தீவுத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தீவுத் தொடரும்,ஹவாய் எரிமலைத் தீவுத்
தொடருக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.
இவ்வாறு கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி
இருக்கும் எரிமலைத் தீவுத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக
இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, மேற்கு மற்றும் கிழக்கு என
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் கிழக்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்
ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்
படுகிறது.
இந்த நிலையில் வட அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும்
கானரி எரிமலைத் தொடரானது, மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி
தொடர்ச்சியாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுப் பகுதி வரை உருவாகி
இருகிறது.
இதன் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் மேற்கு
திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக உள்ளது.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக ,தெற்கு அட்லாண்டிக் கடல் தளத்தின்
மேல் உருவாகி இருக்கும், கேமரூன் எரிமலைத் தொடரானது, தென் மேற்கு திசையில் இருந்து,
வட கிழக்கு திசையை நோக்கி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற் பகுதி வரை உருவாகி தொடர்ச்சியாக
உருவாகி இருக்கிறது.
இதன் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆபிரிக்கக் கண்டமும் தென் மேற்கு
திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக உள்ளது.
இதனால் எப்படி ஒரே நேரத்தில் கடல் தளமும் கண்டமும் இரண்டு வெவ்வேறு
திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியும்?என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் ஒரே நேரத்தில் கடல் தளமும் கண்டமும் இரண்டு வெவ்வேறு திசைகளை
நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.
எனவே அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தின்
மேற் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள், ஒன்றுக் கொன்று
இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலமும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக
இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய
கடல் தளம் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பத்கவும், அதனால்
அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும் தவறாக நம்பப் படுகிறது.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி
இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும்,அனாகிம்
எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில்,
வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற
முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும்
கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக
நம்பப் படும், இந்தியாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள கடல் தரையின் மேல் உருவாகி
இருக்கும் எரிமலைத் தீவுகளான லட்சத் தீவு மற்றும் தீகோ கார்சிகாத் தீவுத் தொடர்கள்
வளைவான பாதையில் உருவாகி இருக்கும் நிலையில்,இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியில்
உள்ள கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று
அழைக்கப் படும் கடலடி எரிமலைத் தொடரானது, தொண்ணூறு டிகிரி கிழக்கு தீர்க்க
ரேகைக்கு இணையாக நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி
இருக்கும், இரண்டு எரிமலைத் தொடர்களும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி
இருப்பதன் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக
நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்
இந்தோனேசியாவிலும் ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சி ஏற்பட்டு
இருப்பதும் அதனால் சுனாமி உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த
செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.
Comments