Posts

Showing posts from July, 2013

நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகள் இறங்கியது ஏன்?

பெரிய நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதிகளில் உள்ள எரிமலைகளின் உயரம் தாழ்வடைந்து இருப்பது , சிலி மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட செயற்கைக் கோள் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தள்ளது.   நில அதிர்சிக்குப் பிறகு எரிமலைகளில் இருந்து வாயுக்கள் வெளிப்படுவதை விஞ்ஞானி.சார்லஸ் டார்வின் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கவனித்து இருக்கின்றனர்.   இந்த நிலையில் ஜப்பான் மற்றும் சிலி நாட்டில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு அப்பகுதியில் உள்ள எரிமலைகள் ஏதேனும் சீறத் தொடங்குகிறதா என்று ஜப்பான் மற்றும் சிலி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தனித் தனியாகச் செயற்கைக் கோள்கள் மூலம் ஆய்வு   செய்தனர்   குறிப்பாக   நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைக்குள் பாறைக் குழம்பு திரண்டு பெருக்கிறதா என்று கண்காணித்தனர்.   ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் உள்ள எரிமலைகளானது ஆறு அங்குல அளவிற்கு தாழ்வடைந்து இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.   குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ,...