கேள்விக் குறியான வெக்னரின் விளக்கம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வளரும் மரங்களின் புதை படிவங்கள் குளிரான பிரதேசத்தில் காணப் பட்டதின் அடிப்படையில் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு வினோதமான விளக்கத்தைக் கூறினார்.
அதாவது வெப்ப மண்டலப் பகுதியில் இருந்த கண்டங்கள் குளிர் பிரதேசப் பகுதிக்கு நகர்ந்து சென்று இருக்கிறது என்று விளக்கம் கூறினார்.
இதன் அடிப்படையில் தற்பொழுது வட துருவப் பகுதியில் இருந்து எழுநூறு கிலோ மீட்டர் தெற்கில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பும் குளிர்ப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியிலேயே இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் ஆக்சல் ஹைபெர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வளரும் செம்மரக் காடுகள் இருந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக வட துருவதிற்கு மிக அருகில் இருப்பதால் ஆக்சல் தீவில் தற்பொழுதும் செம்மரக் காடுகள் இருந்த பொழுதும் ஆண்டுக்கு நான்கு மாதம் இரவும் நான்கு மாதம் பகலும் நீடித்து இருந்த நிலையில் எப்படி காடுகள் நான்கு மாத காலம் சூரிய ஒளியின்றி வளர்ந்திருக்கும் என்பதும் இன்னொரு மர்மமாக இருக்கிறது என்று இந்தப் புதை படிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் புவி உயிரியல் வல்லுனரான ஹோப் ஜெகெரெல் தெரிவித்து இருக்கிறார்.
( Other challenging mysteries remain, including how a forest could develop given the sunlight it would receive on Axel Heilberg. Because of its closeness to the North Pole both now and in the time of the redwoods, Axel Heilberg spends four months of each year in continuous sunlight and four months of each year in continuous darkness- Hope Jahren, assistant professor of earth and planetary sciences in the Krieger School of Arts and Sciences at The Johns Hopkins University )
நான்கு மாத காலம் இரவு நீடித்தால் சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாமல் உயிருடன் இருந்திருக்க சாத்தியம் இல்லை.
எனவே ஆக்சல் ஹை பெர்க் தீவில் காடுகள் இருந்திருப்பதன் மூலம் நம் பூமியானது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருப்பதைப் போன்று இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்திராமல் நேராக இருந்திருப்பது நிரூபணமாகிறது.அதனால் பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே துருவப் பகுதியிலும் இரவும் பகலும் மாறி மாறி ஏற்பட்டு இருக்கிறது.அத்துடன் பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்ததற்கு பூமிக்கு அருகில் வந்த ஒரு விண் கோளின் காந்த மண்டல ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்.
இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திலும் அடர்ந்த வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருப்பதும் டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.
குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.
எனவே கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்ததால் கடல் பரப்பு அதிகரித்ததின் காரணமாகவே துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருக்கிறது.
Comments