கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவது தவறு .விஞ்ஞானி.க.பொன்முடி.
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.(படம்-1)
அதனால் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தரையின் மேல் இருந்தபடி ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.(படம்-2)
இது போன்ற முட்டாள்தனமான விளக்கங்களைக் கூறுபவர்கள்தான் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறுகிறார்கள்.இது சாத்தியமா?
Comments