
இது ஊரையும் உலகையும் ஏமாற்றும் செயல் அன்றி வேறல்ல.(media release) ஊ ரையும் உலகையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் அமெரிக்க நாட்டு புவியியல் கழகத்தினர், கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் கற்பனையாக ஒரு விளக்கத்தைக் கூறி எல்லோரையும் நம்ப வைக்கின்றனர் அமெரிக்க நாட்டு புவியியல் கழகத்தினர், ஆனால் உண்மையில் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன. (படம்-1)நாசா தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்) (கரீபியன் தீவுகளுக்கும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை) குறிப்பாக கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 2,00,855 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் ஒரு வரை படத்தை தயா...