ஹைத்தி சுனாமி .மறைக்கப் பட்ட உண்மைகள்.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் உண்மைக்குப் புறம்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர்.

கரீபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறதா?

கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும் ஒரு பாறைத் தட்டின் மேல் அமைந்து இருப்பதாகக் கூறப் படும் ஹைத்தி தீவு உண்மையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா? அல்லது எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த உண்மையை மறைத்து பூசி மெழுகி அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர்.
அறிக்கையின் முதல் வரி.

The January 12, 2010, Haiti earthquake occurred in the boundary region separating the Caribbean plate and the North America plate.

‘’ஹைத்தி தீவு நில அதிர்ச்சியானது வட அமெரிக்கக் கண்டத்தட்டு எல்லைக்கும் ஹைத்தி தீவு பாறைத் தட்டு எல்லைக்கும் இடைப் பட்ட பகுதியில் நடந்தது’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அடுத்த வரியில்தான் உண்மை மறைக்கப் படுகிறது.

This plate boundary is dominated by left-lateral strike slip motion and compression, and accommodates about 20 mm/y slip, with the Caribbean plate moving eastward with respect to the North America plate.
இந்த பாறைத் தட்டு எல்லைப் பகுதியானது ‘’வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்; கரீபியன் பாறைத் தட்டின் ஆண்டுக்கு 20 மில்லி மீட்டர் கிழக்கு நோக்கிய நகர்ச்சியால்’’ ஏற்படும் இடது பக்க வாட்டு நழுவல் உரசல் அழுத்தம் ஆகியவற்றால் எற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பிரிந்து மேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்று கூறப் படும் நகரும் கண்டங்கள் கருத்தின் அடிப்படியில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

அந்தக் கருத்தின் அடிப்பபடையில்தான் அமெரிக்கப் புவியியல் அமைப்பினர் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் ;கரீபியன் பாறைத் தட்டின் கிழக்கு நோக்கிய நகர்ச்சியால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி எற்பட்டது என்று அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் கரிபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட வில்லையே ...ஏன் ?

உதாரணமாக இரண்டு வாகனங்கள் ஒன்று பெரியது மற்றது சிறியது அருகருகே நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது இரண்டு வண்டிகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டால் அந்த நிகழ்வைப் பார்த்தவர் என்ன கூறுவார்?

இரண்டு வண்டிகளும் எதிர் எதிர் திசையில் நகர்ந்ததால் உரசல் ஏற்பட்டது என்று கூறலாம்.
அல்லது ஒரே திசையில் நகர்ந்ததால் உரசல் ஏற்பட்டது என்றும் கூறலாம்.
அல்லது ஒரு வண்டி மட்டும் நகர்ந்ததால் உரசல் ஏற்பட்டது என்றும் கூறலாம்.
இதில் ஒன்றைத்தான் அவர் கூற முடியும்.

அதை விடுத்து பெரிய வண்டியைப் பொறுத்த மட்டில் சிறிய வண்டியின் கிழக்கு திசை நோக்கிய நகர்ச்சியால் உரசல் ஏற்பட்டது என்று சுற்றி வளைப்பது ஏன்?
எளிதாகச் சொல்லலாமே?

வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று!
அல்லது கரிபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்க வில்லை.வட அமெரிக்க கண்டம் மட்டும் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் கூறலாமே!

ஏன் இப்படிக் கூற வில்லை?

ஏனென்றால் உண்மையில் கரிபியன் பாறைத் தட்டானது நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது அங்கேயே இருக்கிறதா என்று அறிக்கை வெளியிட்ட அமெரிக்கப் புவியியல் அமைப்பினர்களுக்குத் தெரிய வில்லை.

பட்டென்று பொட்டில் அடித்தது போல் சொன்னால் அவர்களுக்குச் சிக்கல் வரும்.
எப்படியென்றால் வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினால் அப்படியென்றால் இதற்கு முன்பு அந்தக் கண்டம் எங்கு இருந்தது? என்ற கேள்வி எழும்.

அப்பொழுது அவர்கள் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது ஐரோப்பாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்தது என்றும் அதன் பிறகு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்றும் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் கூறிய நகரும் கண்டங்கள் கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தைக் கூற முடியும்.

ஆனால் அதே போன்று கரிபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினாலும் அப்படியென்றால் இதற்கு முன்பு அந்தப் பாறைத் தட்டு எங்கே இருந்தது என்ற கேள்வி எழும்.

ஏனென்றால் ‘’முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்களே தற்பொழுது பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன’’ என்ற கருத்தை ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் முன்வைத்த பொழுது அவர் இந்தக் கரீபியன் தீவுகள் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.
இதற்கு அமெரிக்கப் புவியியல் அமைப்பினர் வெளியிட்ட படமே ஆதாரம்.





குறிப்பாக வெக்னர் இந்த பூமியில் இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா என்ற ஒரே ஒரு பெரிய கண்டம் மட்டும்தான் இருந்தது என்றும் அதன் பிறகு அந்தத் தனிப் பெருங் கண்டமானது முதலில் தெற்கு வடக்காக இரண்டாகப் பிரிந்ததால் வடக்கில் லாரேசியா என்ற வட பெருங் கண்டமும் அதே போன்று தெற்கில் கோண்டுவானா என்ற தென் பெருங் கண்டமும் உருவானது என்று கூறினார்.

அதன் பிறகு அந்த வட பெருங் கண்டத்தில் இருந்து பிரிந்த வட அமெரிக்கா மேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், அதே போன்று தென் பெருங் கண்டமான கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமும் வட மேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் ஒரு கருத்தைக் கூறினார்.

ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் ஹைத்தி கியூபா போன்ற கரீபியன் தீவுகள் பற்றி அவர் எதுவுமே குறிப்பிட வில்லை.
எனவே இந்தக் கரீபியன் தீவுகள் எங்கே உருவாகி தற்பொழுது உள்ள இடத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்து கேள்வி எழுந்தது.



இதற்கு சில ஆராய்ச்சியாளர்கள் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த பொழுது, பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கடல் தரைக்கு மேலாக பொங்கி எழுந்த பாறைக் குழம்பு இறுகி ஒரு சிறிய பாறைத் தட்டாக உருவாகியது . பிறகு அந்தப் பாறைத் தட்டானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தது.அப்பொபொழுது கரிபியன் பாறைத் தட்டிற்கு எதிரே மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே கரீபியன் பாறைத் தட்டு புகுந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்றும் இன்றும் கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இரண்டு பெரிய கண்டங்களையும் இடித்துத் தள்ளிக் கொண்டு ஒரு சிறிய பாறைத் தட்டு எதிர் திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக முரணாக ஒரு விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கரீபியன் பாறைத் தட்டானது பசிபிக் கடல் தரைப் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவானது என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் கடல் பகுதியில் உள்ள கால பாகோஸ் போன்ற எரிமலைத் தீவுகள் உருவாகியிருப்பதை ஒரு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கரீபியன் பாறைத் தட்டு வட அமெரிக்கக் கண்டம் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு உட்பகுதிக்கு வந்த பிறகு கோஸ்டரிகோ ஹோண்டுராஸ் பனாமா போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதிகள் உருவானது என்றும் ஒரு ஆராய்ச்சியாளர்கள் விளக்கத்தைக் கூறுகின்றனர்.

குறிப்பாக எழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் பாறைத் தட்டு வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாக கணிப் பொறி செயல் முறைகள் மூலம் விளக்கப் பட்டது.

ஆனால் அந்த கால கட்டத்தில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே கரீபியன் பாறைத் தட்டு நுழையும் அளவுக்கு இடைவெளி இருந்திருக்க சாத்தியம் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக கரீபியன் தீவுகளின் மேற்குப் பகுதியானது அளவில் பெரிதாக இருக்கிறது.



ஆனாலும் இந்தக் கருத்தை நம்பும் ஆராய்ச்சியாளர்கள் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே கரீபியன் பாறைத் தட்டு நுழையும் பொழுது வில் வளைவது போன்று சற்று வளைந்து நடுப் பகுதிக்கு வந்த பிறகு மறுபடியும் விரிந்து பெரிதாகி கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று விளக்கம் கூறினாலும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இந்த வினோத விளக்கத்தை ஏற்க வில்லை.

எனவே கிழக்கு திசையில் கரிபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால் மிகப் பெரிய சிக்கல் வரும் என்பதாலேயே அமெரிக்கப் புவியியல் அமைப்பினர் முன்பு குறிப்பிட்டதைப் போன்று மேற்கு திசையில் நகர்வதாகக் கூறப் படும் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரிபியன் பாறைத் தட்டின் கிழக்கு நோக்கிய நகர்ச்சியால் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று சுற்றி வளைத்து ஒரு விளக்கத்தை அறிக்கையில் தெரிவித்து இருகின்றனர்.

முக்கியமாக கரிபியன் பாறைத் தட்டு தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால் கரிபியன் பாறைத் தட்டிற்கு தெற்கில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டப் பகுதியிலோ அல்லது கரிபியன் பாறைத் தட்டின் தென் பகுதியிலோ ஏன் அன்று நில அதிர்ச்சி ஏற்பட வில்லை என்ற கேள்வியும் வரும்.



ஏனென்றால் கரீபியன் பாறைத் தட்டு என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பகுதி தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கே குறிப்பாக வட மேற்குப் பகுதியில் நன்றாக அமிழ்ந்து இருக்கிறது.மேலும் கரீபியன் தட்டின் மத்தியப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதி புடைத்துக் கொண்டு கரிபியன் பகுதிக்குள் முன்னேறி இருக்கிறது.இந்த நிலையில் கரிபியன் பாறைத் தட்டானது வளைந்து சென்றால் கூட வட அமெரிக்கக் கண்டம் மற்றும் தென் அமெரிக்கக் கண்டம் ஆகிய இரண்டு கண்டங்களையும் உரசிக் கொண்டுதான் செல்ல முடியும்.




ஆனால் தென் அமெரிக்காக் கண்டமும் கரிபியன் பகுதியியும் சந்திக்கும் பகுதியில் நில அதிர்ச்சிகள் மிகவும் குறைவாகவே பதிவாகியிருக்கின்றன.(படம்)
எனவே கரிபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினால் பிறகு ஏன் அன்றைய தினம் தென் அமெரிக்கக் கண்டமும் கரிபியன் பகுதியும்
சந்திக்கும் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படவில்லை என்ற கேள்வியும் சிக்கலை ஏற்படுத்தும்.(படம்)
குறிப்பாக கரிபியன் தீவுகள் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையே வசமாக சிக்கிக் கொண்ட பகுதியாகக் கருதப் படுகிறது.
ஒரு புவியியல் வல்லுநர் கரிபியன் பாறைத் தட்டை முழங்கால் மற்றும் தொடை எலும்புக்கு இடையே மாட்டிக் கொண்ட பந்துக் கின்ன மூட்டு போன்று கரிபியன் பாறைத் தட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது கரிபியன் பாறைத் தட்டானது அங்கும் இங்கும் எங்கும் அசையக் கூட இயலாது என்று தெரிவிக்கிறார்.

எனவே அமெரிக்க அரசின் புவியியல் அமைப்பினர் கரிபியன் பாறைத் தட்டானது தனியாக கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினாலும் சிக்கல் வரும் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறினாலும் சிக்கல் வரும் என்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலையிலேயே ‘’வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரிபியன் பாறைத் தட்டின் கிழக்கு திசை நகர்ச்சியால் ஏற்பட்ட உரசலால்’’ நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று சாமர்த்தியமாகத் தெரிவித்து பல்வேறு சிக்கல்களில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் பாறைத் தட்டானது அட்லாண்டிக் கடல் பகுதியில் தோன்றி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்து கொண்டு இருக்கும் திசையிலேயே அதாவது மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கின்றனர்.

இந்த விளக்கத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்தான் அந்தக் கடல் தட்டின் மேல் அமைந்திருக்கும் வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று கருதப் படுகிறது.

எனவே ஏற்கனவே ஒரு இடத்தில் உருவாகி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தட்டில் எப்படி கரீபியன் பாறைத் தட்டு புதிதாக உருவாகி எப்படி தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்தது என்று கேள்விகள் எழுந்தாலும் பசிபிக் கடல் பகுதியில் இருப்பது போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் குறிப்பிடத் தக்க அளவில் எரிமலைத் தீவுக் கூட்டங்கள் எதுவும் இல்லை என்பதால் சில ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப் பட்ட இந்த புதிய விளக்கம் பெரும்பாலோரால் ஏற்கப் படவில்லை.

இந்த சிக்கல்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்பொழுது கரீபியன் தீவுகள் தற்பொழுது இருக்கும் இடத்திலே உருவாகியிருக்கிறது என்று ஒரு புதிய கருத்தும் உருவாக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் இதிலும் கூட ஒரு சிக்கல் என்னவென்றால் இருக்கும் இடத்திலேயே உருவாகியிருந்தால் கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும் பாறைத் தட்டு எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது ஏன் நகர்ந்து கொண்டு இருக்கிறது அல்லது கரீபியன் பாறைத் தட்டு மட்டும் எப்படி நகராமல் ஒரே இடத்தில இருக்க முடியும் போன்ற கேள்விகளெல்லாம் எழ ஆரம்பிக்கிறது.

முக்கியமாக வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு நோக்கிய கரிபியன் தட்டின் நகர்ச்சியால் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் கரிபியன் தட்டிற்கும் இடையில் ‘’இடது பக்கவாட்டு நழுவு உரசல்’’ஏற்படுகிறது என்று விளக்கம் கூறும் அமெரிக்கப் புவியியல் அமைப்பினருக்கு வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் எந்த வகையான உரசல் ஏற்படுகிறது என்று கூற இயலவில்லை.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் வெவ்வேறு வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கரிபியன் தீவுகளுக்குக் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதியும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களும் வெவ்வேறு வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களின் ஓரப் பகுதிகளும் உரசலில் ஈடுபட்டு அப்பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வேண்டும்.



ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து ஒரு வரை படம் தயாரிக்கப் பட்டது.
அந்த வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வில்லை.(படம்)



எனவே கரீபியன் தீவிற்கு கிழக்கில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதி வரையறுக்கப் படாத பகுதி என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.(படத்தில் வெள்ளைக் கோடிட்ட பகுதி )
எனவே இந்த நில அதிர்ச்சி வரை படம் உண்மையில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதையும் உண்மையில் கண்டங்கள் நிலைத்த அமைப்புகள் என்பதையும் நிரூபிக்கிறது.
அப்படியென்றால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?




(படம்)ஹைத்தி தீவு நில அதிர்சிக்குப் பிறகு அப்பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக தெரியும் கடல் தாவரங்கள்.

ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது லியோகேங் என்ற துறைமுக நகரக் கடற் கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.
அத்துடன் நில அதிர்ச்சியால் தரைப் பகுதியில் ஏற்பட்ட மாறுபாடுகளும் செயற்கைக் கோள் மூலமும் படமாக்கப் பட்டது.



ஹாவாய் நில அதிர்ச்சி செயற்கைக் கோள் படம்


அந்த செயற்கைக் கோள் படத்தில் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுதும் எரிமலைகளுக்கு அருகில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதும் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்களில் காணப் படுவதைப் போலவே ஹைத் தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடதிலும் வட்ட வடிவில் நிலப் பகுதிகள் பல அடி வரை உயர்ந்து தாழ்ந்து இருந்தது.



ஹைத்தி நில அதிர்ச்சி செயற்கைக் கோள்

எனவே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு தரைக்கு அடியில் இருந்த எரிமலை மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் புலப் படுகிறது.


குறிப்பாக ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டிற்கும் இடையே ஏற்பட்ட உரசலே காரணம் என்று விளக்கம் கூறும் ஆராய்ச்சியாளர்கள் நில அதிர்ச்சி ஏற்படும் பகுதிகளை இணைத்து பிறழ்ச்சி கோடு என்று ஒரு எல்லைக் கோடு ஒன்றை வரைந்தனர்.அந்தக் கோட்டை என்ரிகோ கோடு என்று குறிப்பிட்டு அங்குதான் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று கூறிய பிறகு இல்லை இல்லை ஹைத்தி தீவில் லேயோகேங் என்ற ஒரு புதிய இடத்தில நில அதிர்ச்சி ஏற்பட்டிருகிறது என்று தற்பொழுது வேறு ஒரு இடத்தைக் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் ஹைத்தி தீவில் முதலில் ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே பல இடங்களில் தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.


இது போன்று ஒரே இடத்தில் பல நூறு நில அதிர்ச்சிகள் அருகருகே ஏற்படுவது பொதுவாக ஹாவாய் ஐஸ் லாந்து நியூ சிலாந்து ஜப்பான் எரிமலைப் பகுதிகளிலேயே ஏற்படும்.

எனவே ஹைத்தி தீவில் எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.குறிப்பாக நில அதிர்ச்சி மைப் புள்ளிகளின் பரவலைப் பார்க்கும் பொழுது இரண்டு எரிமலைகளின் செயல் பாட்டால் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது புலனாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?