நில அதிர்ச்சி சுனாமி எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகியுள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி.
கடந்த 12.01 .2010 அன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு மத்தியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் பயங்கரமான நில அதிர்ச்சியும் அதன் தொடர்ச்சியாக சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சியின் மையப் பகுதியில் இருந்த லியோகேன் என்ற துறைமுக நகரத்தின் கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக நிலம் இரண்டு அடி வரை உயர்ந்து இருந்தது.
அத்துடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சு உள்ளிட்ட கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தது. (படம்1)
இந்த நிலையில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஹைத்தி தீவை ஒட்டியவாறு ஹைத்தி தீவிற்கு வடக்கே அமைந்து இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் வீதத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டிற்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால அழுத்தம் விடு பட்டு உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.(படம்2)
ஆனால் ஹைத்தி தீவிற்கு வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் தெற்கில் தென் அமெரிக்கக் கண்டமும் அமைந்து இருந்தாலும் கூட ... ஹைத்தி தீவின் கிழக்குப் பகுதியில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களின் எல்லை எது என்று யாராலும் குறிப்பிட்டு கூற இயலவில்லை.
ஏனென்றால் கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் ஹைத்தி தீவின் கிழக்குப் பகுதியில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகியிருக்க வில்லை.(படம்3)
எனவே அப்பகுதி வரையறுக்கப் படாத பகுதி என்று குறிப்பிடப் படுகிறது.(plate boundary types undefined)(படம்4)
எனவே வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படையில் ஆதாரம் இல்லை.
எனவே ஹைத்தி தீவுப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமியும் ஏற்பட்டிருப்பது நிரூபணமாகிறது.
Comments