பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.
விடுநர்
விஞ்ஞானி.க.பொன்முடி.
1,அப்பு தெரு,
நுங்கம் பக்கம்,
சென்னை.600 034.
அலை பேசி.98400 32928.
பெறுனர்
செய்தி ஆசிரியர்,
நாளிதழ்,வார இதழ்,
சென்னை.
ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம்.
பொருள்:சிமிழு தீவு உயர்ந்ததால் சுனாமி உருவானது.
கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் சுனாமி உருவானது.
அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது.
அதனால் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாகக் கடற் கரை உருவாகியிருந்தது.அத்துடன் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் மற்றும் கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலே வெளியில் தெரிந்தன.எனவே கடல் தரையில் இருந்து சிமிழு தீவு திடீரென்று உயர்ந்ததால்தாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருகிறது.
சுனாமிக்கு கூறப் படும் இரு வேறு விளக்கங்கள்.
நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்காவின் முன்னணி அறிவியல் அமைப்பு 10.1.2005 அன்று வெளியிட்ட அறிக்கையில் சுமத்ரா தீவு அமைந்திருக்கும் பாறைத் தட்டுடன் இந்தியத் தட்டு நகர்ந்து மோதியதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் மூன்று மாதம் கழித்து 27.4.2005 அன்று அதே நாசா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலியத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டிருகிறது.
ஒரு நில அதிர்ச்சிக்கு எப்படி இரண்டு காரணம் இருக்க முடியும்?
நாசாவின் குழப்பத்திற்கு காரணம் என்ன?
தற்பொழுது கண்டங்களுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத் தட்டுகளின் மேலே இருக்கும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருகின்றனர்.அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு கிடையே உரசல் ஏற்பட்டு நில அதிச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது.
கண்டங்களின் பூர்வீகம்.
குறிப்பாக பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்து இருந்தது.அதன் பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றார்கள்.
தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை போன்று தென் துருவப் பகுதியில் ஒன்றாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்பொழுது இருப்பதைப் போன்று
ஐயாயிரம் கிலோமீட்டார் தொலைவிற்கு விலகியது உண்மையென்றால்
நிச்சயம் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படையில் ஆதாரம் இல்லை.
உலக அளவிலான நில அதிர்ச்சி வரை பட ஆதாரம்.
கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில் ஏற்பட்ட 358,214 நில அதிர்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வரை படத்தை தயாரித்தார்கள்.
அந்த வரை படத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் எல்லைக் கோடு வரைந்ததைப் போன்று தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருந்தது.
இதன் அடிப் படையில் ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் அமைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததைப் போன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நீளவாக்கில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகியிருக்க வில்லை.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு பாறைத் தட்டுகளின் மேல் இருப்பதாகக் கருத இயலாது.அதே நேரத்தில் இந்த இரண்டு கண்டங்களும் ஒரே பாறைத் தட்டின் மேல் இருந்தபடியே ஐயாயிரம் கிலோ மீட்டர் விலகிச் செல்லவும் சாத்தியமில்லை.
இதன் அடிப்படையில் அமெரிக்காவின் நாசா அமைப்பு வெளியிட்ட கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பிட்டு வெளியிடப் பட்ட வரை படத்திலும் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் கோடிட்டுக் காட்டி அப்பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை என்று குறிப்பிடப் பட்டிருகிறது.
எனவே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நாசா வெளியிட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
எனவே சிமிழு தீவு உயர்ந்ததாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருப்பது நில அதிர்ச்சிக்குப் பிறகு சிமிழு தீவின் வட மேற்குப் பகுதி கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்து இருந்ததின் அடிப்படையில் தெளிவாக நிரூபணமாகிறது.

Comments