தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன?

மண் புழுக்களால் எவ்வகையிலும் கடல் பகுதியைக் கடக்கவே இயலாது.

ஆனால் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கும் பல தீவுகளில் அரியவகை மண் புழுக்கள் காணப் படுகிறது.

குறிப்பாக பாக்லான்ட் தீவுகளில் பாக்லாண்டிகஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது.அதே போன்று கெர்கூலியன் கெர்கூலியன்சிஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது.

இவ்வாறு தீவுகளில் உலகில் வேறெங்கும் காண இயலாத அரிய வகை மண் புழுக்கள் காணப் படுவது நீண்ட காலமாகவே விளக்க முடியாத புதிராக இருந்து வருகிறது.

தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன?

பிரிட்டிஷ் இயற்கையியலாளர் பிரான்க் எவரெஸ் பெடார்ட் பல தீவுகளுக்குச் சென்று பல அறிய வகை மண் புழுக்களைக் கண்டு பிடித்தார்.

அவர் மண் புழுக்களால் சிறிய கடல் பகுதியைக் கூட கடக்க இயலாது என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மனிதனைப் போலவே மண் புழுக்களுக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஆனாலும் மண் புழுக்களுக்கு நுரையீரல் இல்லை.

எனவே மண் புழுக்கள் தோல் மூலம் சுவாசிக்கிறது.காற்று மண் புழுவின் ஈரமான தோலில் படும் பொழுது காற்றில் உள்ள பிராண வாயுவானது மண் புழுவின் வழியாக ஊடுருவி இரத்தத்தில் கலக்கிறது.அதற்கேற்ப மண் புழுவின் தோல் எப்பொழுதும் வழவழப்பாக ஈரப் பசையுடன் இருக்கும்.

ஆனாலும் மண் புழுவின் உடலில் உள்ள பசைக்கு ஒட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் சுவரிலோ மரத்திலோ ஏற இயலாது.

எனவே காற்றில் பறக்கும் இலை சருகு போன்ற எதன் மீதும் ஒட்டிக் கொண்டும் மண் புழுக்களால் காற்று மூலமாகவும் கடல் பகுதியைக் கடந்து தீவுகளை அடைந்து இருக்க இயலாது.

மேலும் காற்றில் மண் புழுவின் உடலில் உள்ள ஈரப் பசையும் உலர்ந்தால் மண் புழுவால் சுவாசிக்க இயலாமல் இறந்து விடும்.பெரும் பாலும் மாலை மற்றும் இரவு நேரத்திலும் மட்டும் மண் புழுக்கள் மண்ணுக்கு மேல் வரும்.மழை பெய்தால்தான் மண் புழுக்களை காண இயலும்.ஈரமான இடத்திலேயே வசிக்கும்.

தோல் உலர்ந்து விடாமல் இருக்க மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெயில் உள்ள இடத்தையும் தவிர்த்து விடும்.

எனவே கடலில் மிதந்து செல்லும் மிதவைத் தாவரங்கள் மூலமாகவும் கடலில் மித்து சென்று மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்க இயலாது.

மண்ணுக்கு அடியில் வாழும் மண் புழுக்கள் தரை வழியாகவே ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு செல்ல இயலும்.

எனவே பல தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத அரிய வகை மண் புழுக்கள் காணப் படுவது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.


கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததாக கருதப் படுகிறது.குறிப்பாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியெங்கும் பனிப்படலங்கள் பல கிலோ மீட்டர் உயரத்திற்கு மூடி இருந்ததாகவும் பிறகு பனி உருகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் அறுநூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

ஆனால் உண்மையில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது.கடலுக்கு அடியில் இருக்கும் சுடுநீர் ஊற்றுகள் வழியாக பூமிக்கு அடியில் இருந்து வெளி வரும் ஊற்று நீரே கடல் மட்டம் உயர்வதற்கு காரணம். ஆம் நம் பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

அன்புடன்,
விஞ்ஞானி.விஞ்ஞானி, க.பொன்முடி,

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?