மர்ம நில நடுக்கம்
1 998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள்,பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் அமைந்திருக்கும் ததித்தி தீவில் ரிக்டர் அளவில் 5.5 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஏன் ஏற்ப்பட்டது என்ற கேள்விக்கு இது வரையிலும் யாராலும் சரியான பதிலைக் கூற இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் தகித்தி தீவானது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் நடுவில் அமைந்திருக்கின்றன. அதாவது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக மத்தியப் பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே வழக்கம் போல் பாறைத் தட்டு நகர்ந்து நில நடுக்கம் ஏபட்டது என்று எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் விளக்கம் கூற முன் வரவில்லை. குறிப்பாக தகித்தி தீவானது ஒரு எரிமலைத் தீவு என்பது குறிப்பிடத் தக்கது. எரிமலையானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையைப் பொத்துக் கொண்டு வெளிவரும் பொழுது,அப்பகுதியில் இருந...