பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து கொண்டிருக்கிறதா?
பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விளக்கத்தைக் கூறி வருகின்றனர். உதாரணமாக பசிபிக் பெருங் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து ஜப்பான் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படும்பொழுது, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிப் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் தரைப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் பசிபிக் கடல் தரை கண்டங்களுக்கு அடியில் வளைந்து சென்று பூமிக்குள் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு பூமிக்குள் வளைந்து செல்லும் பசிபிக் கடல் தட்டு கண்டங்களின் விளிம்புகளுடன் உரசும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் தருகின்றார்கள். ஆனால் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தகித்தி போன்ற எரிமலைத் தீவில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு நகரும் கண்டங்கள் ஆராய்ச்சியாளர்களால் எந்த ஒரு விளக்கத்தைக் கூற இயலவில்லை. குறிப்பாக தகித்தி என்ற எரிமலைத் தீ...