இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந...